May 9, 2020

ஸதாசார தினசர்யா - மாணவர் நாள்நடத்தை


ஓம்

ஸதாசார தினசர்யா
(மாணவர் நாள்நடத்தை)

ஆக்கம்
ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ

அதிகாலையில் எழுவேன்;
காலைக்கடன் முடிப்பேன்;
ஆஸனங்கள் செய்வேன்; குளிர்ந்தநீரில் குளிப்பேன்;
தூய ஆடைகள் உடுப்பேன்;

சமயச்சின்னம் தரிப்பேன்;
பெற்றோரை வணங்குவேன்;
குருவைப் போற்றுவேன்; இறைவனைத் தொழுவேன்; பாடநூல் படிப்பேன்;

அம்மாவுக்கு உதவுவேன்; சிற்றுண்டி உண்பேன்;
பள்ளிக்கூடம் செல்வேன்;
கவனமாகக் கேட்பேன்;
கருத்தூன்றிப் படிப்பேன்;

ஓடியாடி விளையாடுவேன்;
விளக்குகள் ஏற்றுவேன்;
ஸ்தோத்திரங்கள் படிப்பேன்;
வீட்டுப்பாடம் முடிப்பேன்;
கூடிச்சோறு உண்பேன்;

இரவுவானம் ரசிப்பேன்; இறைவனை நினைப்பேன்;
இனியகதைகள் கேட்பேன்;
படுக்கை விரிப்பேன்; பத்துமணிக்குள் படுப்பேன்.


No comments: