Posts

Showing posts with the label ஸநாதனதர்மமும் திருக்குறளும்

ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 9

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 9 மோக்ஷஸ்வரூபம் - வீடு எது? இருள்நீங்கி இன்பம் பயக்கும் வேதாந்த நூல்களைக் குருவாயிலாகக் கேட்டு, பரம்பொருள் ஒன்றே மெய்பொருள்; அந்த பரம்பொருளே அனைத்துமாக இருக்கின்றது; உலகவேறுபாடுகள் எல்லாம் வெறும் தோற்றமாத்திரம் என்று புரிந்து கொள்வதுடன் - இந்த உண்மை நம் இதுநாள்வரையிலான அனுபவத்திற்கு மாறாக இருப்பதால் - இதில் ஏற்படுகின்ற சகலசந்தேகங்களையும் போக்கிக் கொள்ள வேண்டும். தெளிவை ஏற்படுத்திக் கொண்டபின் அந்த அறிவிலேயே மனதை நிலைநிறுத்தினால் விடுதலையானது உடனே சித்திக்கும். இந்த உலக இன்பங்களைவிட மேலான ஆனந்தம் நமக்கு இங்கேயே இப்பொழுதே கிடைக்கும். இது ஜீவன்முக்தி.  ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்  வானம் நணிய துடைத்து. (திருக்குறள் 353) இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி  மாசுஅறு காட்சி யவர்க்கு. (திருக்குறள் 352) மற்றீண்டு வாரா நெறி மெய்யுணர்ந்து அவாஅறுத்து ஜீவன் முக்தரானவர் எல்லாவிதமான மனக் கவலைகளிலிருந்தும் விடுபட்டவராய், புண்ணிய பாவம் அழிந்து போனவராய் ஆகிறார். இவர் ப்ரஹ்மநிஷ்டர். இவர் பிறவிக்குக் காரணமான அஜ...

ஸநாதன தர்மமும் திருக்குறளும் -8

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 8 ஸாதநஸ்வரூபம் - வீடுபெறும்வழி தலைப்பட்டார் தீரத் துறந்தார் இறைவன் அருளாலும் தன் புண்ணியச் சேர்க்கையினாலும் உலகின் நிலையாமையைப் புரிந்து கொள்ளுகின்ற பக்குவம் அடைந்த ஜீவர்கள் பிறவியில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். குருவருளால் மெய்யுணர்ந்து, அவா அறுத்து, வீடுபேற்றை அடைய விழைகிறார்கள். அதற்குத் துறவறம் உறுதுணையாக இருக்கிறது. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. (திருக்குறள் 23) தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (திருக்குறள் 348) சார் தரும் நோய் சார்தரா! இந்த உலகப்பொருள்கள் எல்லாம் மெய்ப்பொருளான பரம்பொருளை சார்ந்து இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு உலகப்பொருள்களின் மேல் இருக்கும் சார்பை - பற்றை - விடுத்து பரம்பொருளை சார்ந்து வாழுகின்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டால், துன்பத்தைத் தருகின்ற பிறவியில் இருந்து விடுவித்து பிறவாத நிலையை அருளுவார் இறைவன். சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்து சார்தரா சார்தரு நோய். (திருக்குறள் 359) பற்றுக பற்றற்றான் பற்றினை உலகப...

ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 7

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 7 பந்தஸ்வரூபம் - பிறப்பு எப்படி? புல்லறிவாண்மை அழியாத ஆத்மாவாக இருக்கின்ற ஜீவர்கள் அறியாமையினால் மூடப்பட்டு, உடல் அபிமானம் கொண்டு தான் பிறப்பு இறப்பிற்கு உட்பட்டதாக கருதுகிறார்கள். நிலையில்லாத உடலையும் உலகையும் நிலையானதாகக் கருதுகிறார்கள். எல்லாப் பொருள்களுள்ளும் மாறாத இருப்பாக இருப்பவர் இறைவன். ஆகவே அவர் மெய்ப்பொருள் எனப்படுகின்றார். மற்ற எல்லாப் பொருள்களும் மெய்ப்பொருளான இறைவன் மேல் நாம ரூபங்களாக - பெயர்வடிவங்களாக - மாயையினால் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நாமரூபங்களில் மயங்குகின்ற ஜீவர்கள் நிலையில்லாத தோற்றமாத்திரமான உலகத்தினை உண்மை என்று நினைக்கும் கீழான அறிவை அடைகிறார்கள்.  நில்லாதவற்றை நிலையின என்றுணரும்  புல்லறி வாண்மை கடை . (திருக்குறள் 331) மருளானாம் மாணாப் பிறப்பு உயிர்களுக்கு ஒரு பிறவி அல்ல. பல பிறவிகள் உண்டு அப்படி பிறவிகள் தோன்றுவதற்கு காரணம் மருள் என்ற மயக்கம்  - அறியாமை. மெய்ப்பொருளை அறியாது பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று கருதி வாழ்க்கையை நடத்துவதே மருள். இந்த அறியாமையே பிறவிக்கு காரணமாக...

ஸநாதநதர்மமும் திருக்குறளும் - 6

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 6 ஈஸ்வர ஸ்வரூபம் - கடவுள் யார்? ஆதிபகவன் - அபின்ன நிமித்த விவர்த்த உபாதான காரணம் அனைத்திற்கும் முதலாகவும் அனைத்தையும் கடந்ததாகவும் இருப்பவர் கடவுள். உலகம் இறைவனைக் காரணமாக கொண்டது. ஒவ்வொரு பொருளும் தோன்றுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நிமித்தகாரணம். இன்னொன்று உபாதானகாரணம். உபாதானகாரணம் என்பது மூலப்பொருள். நிமித்தகாரணம் என்பது அறிவுப்பொருள். கடவுள் உலகத்திற்கு இரண்டுமாக இருப்பவர். அதனால் ஆதிபகவன். ஆதிபகவன் முதற்றே உலகு ( திருக்குறள் 1) வாலறிவன் -  ஸர்வஜ்ஞன் அவர் முற்றறிவு படைத்தவர் - அனைத்தையும் அறிந்தவர் - தான் படைத்த அனைத்தைப் பற்றியும் முழுமையான அறிவு படைத்தவர். அறிவே வடிவானவர். வாலறிவன் (திருக்குறள் 2) மலர்மிசை ஏகினான் - கூடஸ்தன் - அந்தர்யாமி எல்லா உயிர்களுடைய இதயத்திலும் சாக்ஷியாக - அந்தர்யாமியாக  - கூடஸ்தராக - விளங்கிக் கொண்டிருப்பவர். அனைத்தையும் விளக்குபவராக, அனைத்திக்கும் வேறானவராக, அனைத்தையும் உள்ளிருந்து கட்டுப்படுத்துபவராக, தன் நிலையிலிருந்து மாறாதவராக இருப்பவர். மலர்மிசை ஏகினான் (திருக்குறள் 3)...

ஸநாதந தர்மமும் திருக்குறளும் - 5

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 5 நான்காம் இலக்கு - வீடுபேறு ஜீவஸ்வரூபம் - ஜீவன் யார்? உடலும் உயிரும் ஒவ்வொரு ஜீவனுக்கும் மூன்று உடல்கள் இருக்கின்றன. 1.ஸ்தூல உடல் (பருவுடல்) 2.ஸூக்ஷ்ம உடல் (நுண்ணுடல்) 3.காரண உடல் ஸ்தூல உடல் ஸ்தூல பஞ்ச பூதங்களால் ஆனது. ஸூக்ஷ்ம உடல் ஸூக்ஷ்ம பஞ்ச பூதங்களால் ஆனது. காரண உடல் மேற்கண்ட இரண்டு உடல்களுக்கும் காரணமாக இருக்கின்ற அஜ்ஞானம். உடல் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதால் ஜடமானது. உடலுக்கு ஆதாரமாக இருப்பதும் உடல் இயங்க காரணமாக இருப்பதும் உடலிற்கு வேறான ஆத்மா. உடல் நிலையில்லாதது, ஆத்மா நிலையானது. ஆத்மா பிறப்பு இறப்பு இல்லாதது, பூர்ணமானது, அறிவே வடிவானது, இரண்டற்ற ஒன்றானது. உடலும் ஆத்மாவும் சேர்ந்ததே ஜீவாத்மா என்ற ஜீவன். இந்த உடலில் பஞ்ச ஞான இந்திரியங்களும் (ஐந்து அறிவு கருவிகள்) பஞ்ச கர்ம இந்திரியங்களும் (ஐந்து செயற் கருவிகள்)  அந்தக்கரணம் என்ற மனம் ஒன்றும் இருக்கின்றன. இவை நுண்ணுடலில் இருக்கின்றன. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்  வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. (திருக்குறள் 24) ஓரைந்தும் = பொறிகள் ஐந்தும் மன...

ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 4

ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 4 மூன்றாம் இலக்கு - இன்பம் அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை பாபத்தை தருகின்ற தீச்செயல்களைக் குறைத்து, புண்ணியத்தை தருகின்ற நற்செயல்களைப் பெருக்கி இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையை, இன்பத்தைத் தேடிக் கொள்வதற்கே இல்லறம் - இல்வாழ்க்கை. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்கிறார் ஔவையார்.  ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்போடு கூடிவாழ்வது இல்வாழ்வு. கணவன் மனைவியாக கற்பொழுக்கத்தோடு இல்லத்தில் இருந்து அறநூல்களில் சொல்லப்பட்டிருக்கின்ற தர்மங்களை செய்து வாழ்வது இல்வாழ்வின் கடன் ஆகும். அனைத்து உறவுகளோடும் கூடி அன்பு கொண்டு வாழ்வது இல்வாழ்வின் இன்பம் ஆகும். மற்றவரையும் அறநெறியில் வாழச் செய்து தானும் அறம் தவறாது வாழ்வது  இல்வாழ்வின் அறம் ஆகும். பல்வேறு நற்செயல்களைச் செய்து புண்ணியத்தை ஈட்டுவது இல்வாழ்வின் பயன் ஆகும். அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை. (திருக்குறள் 49) ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை (திருக்குறள் 48) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை  பண்பும் பயனும் அது. (திருக்குறள் 45) அறிவறிந்த மக்கட்பே...

ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 3

ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 3 இரண்டாம் இலக்கு - பொருள் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை பொருள் என்னும் பணம் இவ்வுலக வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. பொருளே அனைத்து பொருள்களையும் பெறுவதற்கு முதற்பொருள். வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவைகளைப் பெறுவதற்கு பொருள் தேவை. இன்று அடிப்படைத் தேவைகளாக இவை மட்டும் இல்லை. கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்ற ஔவையாரின் வாக்கு எவ்வளவு உண்மையானது! பொருள் இன்மையே பல சமூகக் குற்றங்களுக்கு முதற் காரணமாக இருக்கின்றது. பொருளின்மையைப் போல துன்பம் தரத்தக்கது வேறு எதுவும் இல்லை. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. (திருக்குறள் 1041) பொருளென்னும் பொய்யா விளக்கம் இன்று சமூகத்தில் பொருளால் ஆகாதது ஒன்றும் இல்லை. கல்வி, மருத்துவம், உணவு அனைத்தும் வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்ட சமூகத்தில் பொருளின்றி வாழ்க்கை இல்லை. பொருள் இருந்தால் ஒரு பொருளாக மதிக்காத மனிதரும் மதிப்பு உடையவராக ஆகி விடுகின்றார். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று அன்றே சொல்லியிருக்கிறார்கள். பொருளை வெளிநாடு ச...

ஸநாதனதர்மமும் திருக்குறளும் -2

ஸநாதன தர்மமும் திருக்குறளும் - 2 முதல் இலக்கு - அறம் ஸனாதன தர்மம் என்ற நமது ஹிந்து தர்மம் அறத்தை ஆதாரமாகக் கொண்டது. அனாதியானது. என்றென்றைக்கும் மனித இனம் பின்பற்றவேண்டிய தனிமனித, சமுதாய ஒழுக்கங்களை உபதேசித்து தனிமனிதனையும் சமுதாயத்தையும் காப்பது. அதனால்தான் நமது வேதங்களுக்கு சாஸ்திரம் என்று பெயர். வேதங்கள் கடவுளால் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டவை. எதன் அடிப்படையில் உலகங்களும் உயிர்களும் படைக்கப்பட்டு இயங்குகின்றனவோ அந்த அடிப்படை விதிகளை எடுத்துச் சொல்வன வேதங்கள். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று வரையறுத்துச் சொல்வன வேதங்கள். சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று திருவள்ளுவர் சொன்னது போல தீயவற்றை விலக்கி நல்லனவற்றைச் செய்வதற்கான அறிவை தரும் அறிவு நூல்களே வேதங்கள். மனிதனால் விரும்பப்படும் வாழ்க்கை இலக்குகளை - புருஷார்த்தங்கள் என - அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்காக சொல்லியிருக்கின்றன அறநூல்கள். இந்த நாற்பயன்களையும் அடைய வழிகாட்டுபவை வேதங்கள். அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு ! எதற்காக வாழவேண்டும்? எப்படி வாழவேண்டும்? என்றறிந்து,...

ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 1

ஸநாதன தர்மமும் திருக்குறளும் - 1 ஸனாதன தர்மம் ஸனாதன தர்மம் என்ற பாரம்பரிய பெயர் கொண்டது ஹிந்து மதம். மதம் என்றால் கருத்து, கொள்கை, அபிப்ராயம் என்று பொருள். ஜீவஸ்வரூபம், ஜகத்ஸ்வரூபம், ஈச்வரஸ்வரூபம், பந்தஸ்ரூபம், மோக்ஷஸ்வரூபம், ஸாதனஸ்வரூபம் ஆகிய ஆறு அம்சங்களைப் பற்றிய தெளிவான வரையறுக்கப்பட்ட கொள்கையே மதம் ஆகின்றது. மதத்திற்கு மதம் இக்கொள்கைகள் வேறுபடுகின்றன. ஆகவே அவை தனி மதங்களாக - சித்தாந்தங்களாக - கருதப்படுகின்றன. ச்ருதிகள் எனப்படும் நான்கு வேதங்கள், ஸ்மிருதிகள் எனப்படும் வேதத்தில் உள்ள கருத்துக்களை விரித்தும் தொகுத்தும் சொல்லும் தர்ம சாஸ்திரங்கள், அவற்றின் விளக்கங்களான புராண இதிகாசங்கள் இவையே ஹிந்து மதத்திற்கு ஆதாரங்களாக இருப்பவை. வேதங்களை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு அதோடு தர்க்கம் என்ற யுக்திபூர்வமான அறிவாராய்ச்சியையும் ஆதாரமாகக் கொண்டவை ஆஸ்திக மதங்கள் எனப்படுகின்றன. வேதத்தை ஏற்காமல் தர்க்கத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டவை நாஸ்திக மதங்கள். நமது பாரத தேசத்தில் தோன்றிய மதங்களில் இந்த வரையறையை நாம் தெளிவாகக் காணலாம். அவை தர்சனங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. வேதத்தை முக்ய ஆத...