Posts

Showing posts with the label Neethi Satakam

நீதிசதகம் Neethi Satakam

  ஓம்! ஸ்ரீபர்த்ருஹரியின் நீதி சதகம் மூலமும் உரையும் பாரத தேசத்தில் தோன்றிய நமது ஹிந்து மதம் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டது. அதனால் தான் நமது மதத்திற்கு பாரம்பர்யப் பெயர் ஸநாதந தர்மம் என்று இருக்கிறது. பகவத்கீதையிலும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா, "எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு ஆபத்து வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அதை உயர்த்துவதற்கு நான் அவதாரம் செய்கிறேன்", என்று கூறுகிறார். தர்மம் தர்மத்தைப் பின்பற்றும் மனிதர்களாலே காக்கப்படுகிறது. ஆகவேதான் பகவான், "தர்மவான்களைக் காத்தும் அதர்மிகளை அழித்தும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக நான் யுகந்தோறும் தோன்றுகிறேன்", என்கிறார். பகுத்தறிவுள்ள ஜீவர்களாகிய நாம் தர்மத்தின் மதிப்பை உணர்ந்து அதைப் பின்பற்ற வேண்டும். நமக்கு இறைவன் துணை இருப்பார். தர்மத்தின் அடிப்படையிலேயே இறைவன் உலகை நடத்துகிறார். எது தர்மம் என்று மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இறைவன் வேதங்களை அருளியுள்ளார். நமது வேதங்கள் எண்ணற்ற தர்மங்களைச் சொல்கின்றன. தர்மம் - அறம், நீதி, நியாயம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வாழ்வியலைப் பாடும் இலக்கிய நூல்களில் நீதி இலக்கியங்கள் எனத் தனியே பி...