Posts

Showing posts with the label கட்டுரை

ஒருமையும் இருமையும்

Image
ஒருமையும் இருமையும் உருவமில்லாத கடவுளுக்கு உருவம் எதற்கு? எங்கும் இருக்கின்ற இறைவனுக்குச் சிலைகள் எதற்கு? என்றெல்லாம் கேட்கிறார்கள் நவீன சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள். உண்மைதான். கடவுள் உருவம் இல்லாதவர், எங்கும் உள்ளவர். உருவமில்லாத எங்கும் உள்ளதை நாம் எப்படி காண்பது? எப்படித் தொடர்பு கொள்வது? எங்கும் உள்ளது என்றால் என்ன பொருள்? எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் இருப்பது எதுவோ அதுவே எங்கும் உள்ளது, என்றும் உள்ளது. எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் இறைவனே இருக்கின்றார் என்றால் உலகம் எங்கே இருக்கின்றது? ஒரு இடத்தில் ஒரு காலத்தில் ஒரு பொருள்தான் இருக்க முடியும் என்பதே அனுபவம். எங்கும் கடவுள் இருக்கின்றார் என்றால் உலகம் இல்லை. உலகம் இருக்கின்றது என்றால் கடவுள் இல்லை. உலகம் இருக்கின்றதா? கடவுள் இருக்கின்றதா? இல்லை இரண்டும் தனித்தனியாக இருக்கின்றது என்றால், உலகம் இருக்கின்ற இடத்தில் கடவுள் இல்லை, கடவுள் இருக்கின்ற இடத்தில் உலகம் இல்லை என்றாகும். இரண்டும் ஒன்றை ஒன்று வரையறுக்கின்றது. எனில், கடவுள் பூர்ணமானவர் அல்ல. பூர்ணத்துவம் இல்லாதவர் கடவுளல்ல. எனில் கடவுள் இல்லை என்றாகின்றத...

எது பகுத்தறிவு ?

ஓம் எது பகுத்தறிவு ? ஸ்வாமி பூர்ணாநந்த ஸரஸ்வதி கருப்பர் கூட்டம் என்ற ஒரு இந்து மத வெறுப்பர் கூட்டம் புராணங்களை ஆபாச புராணம் என்று பேசி வருகின்றது . நாங்கள் ஆபாசமாகப் பேசவில்லை புராணங்களில் உள்ளதையே சொல்லுகின்றோம் என பகுத்தறிவு என்று ஆபாசம் பேசுபவர்கள் சொல்லுகிறார்கள் . ஆபாசம் என்பது என்ன ? ஆபாசம் என்பது பொருளில் உள்ளதா ? பார்வையில் உள்ளதா ? நிர்வாணம் என்பது இயல்பாக இருப்பது . அது எப்பொழுது ஆபாசம் ஆகின்றது ? காம நோக்கோடு பார்க்கப்படும்பொழுதே வெளிப்படுத்தப்படும்பொழுதே அல்லவா ? உடலின் நிர்வாணம் ஆபாசம் அல்ல . எல்லா விலங்குகளும் எப்பொழுதும்   நிர்வாணமாகவே இருக்கின்றன . அது ஆபாசமாக கருதப்படுவது இல்லை . ஆடைகளுக்குள் அனைவரும் நிர்வாணமானவர்களே . அது காமத்தோடு பார்க்கப்பட்டு காமத்தைத் தூண்டும் விதமாக வெளிப்படுத்தப்படுகின்ற பொழுதே ஆபாசம் ஆகின்றது . புராணங்களில் ஆபாசம் இல்லை . அது காமுகர்களால் ஆபாசமாகப் பார்க்கப்பட்டு , விமர்சிக்கப்படுகின்றது என்பதே உண்மை .  உண்மையை தேடும் பகுத்தறிவு என்று , ஆ...