சிற்றின்பமும் பேரின்பமும்
சிற்றின்பமும் பேரின்பமும் ஒரு மனிதன் வாழ்க்கையில் அடைய முடிந்த உச்சபட்ச நிலை என்ன ? ஜீவன்முக்தி என்பதுதான் அது. நாம் உலக விஷயங்களை அனுபவிக்கிறபோது நமக்கு கிடைக்கக் கூடிய இன்பம் சிற்றின்பம். இந்த இன்பம் சிறிய காலம் இருந்து மறைந்து போகக்கூடியது. இது உலகப் பொருள்களை சார்ந்து வருவது. கண்கள் வழியாகக் காட்சிகளை பார்க்கிறோம். காதுகள் வழியாக இனிமையான ஒலிகளைக் கேட்கிறோம். அதனால் நமக்கு இன்பம் கிடைக்கிறது. மூக்கின் வழியாக நல்லவாசனைகளையும் நாக்கின் மூலம் பலவிதமான சுவைகளையும் அனுபவிக்கிறோம். தோல் வழியாக ஸ்பர்சசுகம் கிடைக்கிறது. ஆனா இந்த இன்பங்கள் எல்லாம் கண் காது மூக்கு நாக்கு தோல் என்கிற இந்த கருவிகள் சரியாக இருக்கின்ற பொழுது தான் கிடைக்கும். அதே மாதிரி அனுபவிக்கக்கூடிய விஷயங்களும் சரியாக இருக்கின்ற பொழுது தான் இன்பம் இருக்கும். இந்த பொறிகளும் புலன்களும் மாறுபடக்கூடியவையாக இருப்பதனால் இதிலிருந்து வரக்கூடிய இன்பத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. அது மட்டும் இல்லை இந்தப்புலன்களும் பொறிகளும் சேருகின்ற பொழுது மனதும் அதோடு சேர்ந்தால்தான் இன்பமானது ஏற்படுகின்றது. மனது சரியான நிலையில் இல்லை எ...