May 6, 2020

திருக்குறள் ஆத்திசூடி


ஓம்



திருக்குறள் ஆத்திசூடி

ஆக்கம்
ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ

அறத்துப்பால்

1.கடவுள் வணங்கு.
2. வான் சிறப்புணர்.
3.நீத்தார் போற்று.
4. அறன்வலி அறி.
5. இல்வாழ்.
6. வாழ்க்கைத் துணைநலம் பேண்.
7. நன்மக்கள் பெறு.
8. அன்பு வளர்.
9. விருந்தோம்பு.
10. இனியவை கூறு.
11. செய்ந்நன்றி அறி.
12. நடுவுநில். 
13. அடக்கம் ஆற்று.
14. ஒழுக்கம் கா.
15. பிறன் இல் விழையாதே.
16. பொறைவளர்.
17. அழுக்காறு அழி.
18. வெஃகாதே.
19. புறம்கூறல் தவிர்.
20. பயன் இல சொல்லாதே.
21. தீவினை அஞ்சு.
22. ஒப்புரவு அறி.
23. ஈ.
24. புகழ்சேர்.
25. அருள்கொள்.
26. புலால்மறு.
27. தவம் செய்.
28. கூடாஒழுக்கம் விலக்கு.
29. கள் விரும்பாதே.
30. வாய்மை பேண்.
31. வெகுளாதே.
32. இன்னா செய்யாதே.
33. கொல்லாதே.
34. நிலையாமை உணர்.
35. துறவு கைக்கொள்.
36. மெய்உணர்.
37. அவா அறு
38.ஊழ் வலியது உணர். 

பொருட்பால்

39. இறைமாட்சி அறி.
40. கற்றுணர்.
41. கல்லாமை இழிவு.
42. கேட்டறி.
43. அறிவு பெருக்கு.
44. குற்றம் நீக்கு.
45. பெரியாரைத் துணைக்கொள்.
46. சிற்றினம் அஞ்சு.
47. தெரிந்து செய்.
48. வலி அறி.
49. காலம் அறி.
50. இடனறி.
51. தெரிந்து தெளி.
52. தெரிந்து வினையாடு.
53. சுற்றம் தழுவு.
54. மறதி விலக்கு.
55. செங்கோல் ஆதரி.
56. கொடுங்கோல் எதிர்.
57. வெருவந்த செய்யாதே.
58. கருணைகாட்டு.
59. ஒற்றாடல் அறி.
60. ஊக்கம் வளர்.
61. மடி நீக்கு.
62. ஆள்வினை பெருக்கு.
63. இடுக்கண் அழியாதே.
64. நல்லமைச்சு தேர்ந்தெடு.
65. சொல்வன்மை கொள்.
66. தூய வினை செய்.
67. வினை உறுதி கொள்.
68. வினை செயல்வகை
அறிந்து செய்.
69. தூது அறி.
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகு.
71. குறிப்பு அறி.
72. அவை அறி.
73. அவை அஞ்சாதே.
74. நாடு போற்று.
75. அரண் வலிமையாக்கு.
76. பொருள் பெருக்கு.
77. படைமாட்சி உணர்.
78. படைப் பெருமை கொள்.
79. நட்பு இயல்பு அறி.
80. நட்பு ஆராய்.
81. பழமை போற்று.
82. தீ நட்பு விலக்கு.
83. கூடா நட்பு ஒழி.
84. பேதைமை போக்கு.
85. புல்லறிவகற்று.
86. இகல் (மாறுபாடு) விலக்கு.
87. பகைமாட்சி ஆராய்.
88. பகைத்திறம் தெரி.
89. உட்பகை அழி.
90. பெரியாரை பிழையாதே.
91. பெண்வழிச் சேராதே.
92. வரைவில் மகளிர் விலக்கு.
93. கள் உண்ணாதே.
94. சூது தவிர்.
95. மருந்தென உண்.
96. குடிமைப்பண்பு பேண்.
97. மானம் போற்று.
98. பெருமை கா.
99. சான்றாண்மை சார்.
100. பண்பு வளர்.
101. செல்வம் பயனுடையதாக்கு.
102. பழி நாண். 
103. குடிசெயல்வகை அறி.
104. உழவு ஆதரி 
105. நல்குரவு ஒழி.
106. இரப்பவர்க்கு இரங்கு
107. இரவஞ்சு
108. கயமை விடு.

ஆக்கம் -
ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ

No comments: