Posts

Hindumatha Dharma Vilakkam - Chapter 12

Image
  ஹிந்துமத தர்மவிளக்கம் பாடம்: 12 (27.08.20) சென்ற வாரம்… நவவித பக்தி கர்மயோகம் கடவுள் வழிபாட்டுமுறைகள் சேவை செய்தல் (பகவத் கைங்கரியம், கர்மயோகம்), ஷோடச / பஞ்ச உபசார பூஜை செய்தல்,   ஜபம், தியானம் செய்தல், ஸ்தோத்திர பாராயணம் செய்தல்,  நாம சங்கீர்த்தனம் பாடுதல்,  ஞான சாஸ்திரங்களைப் கேட்டல், படித்தல்.  அதுவாகவே இருத்தல். இனி… ஷோடச உபசார பூஜை      விநாயகராக சோணபத்திரத்தையும், சிவனாக பானத்தையும், கெளரியம்பாளாக ஸ்வர்ணமுகி (மாக்ஷிக) சிலையையும், விஷ்ணுவாக ஸாலக்ராமத்தையும், ஸூர்யனாக ஸ்படிகத்தையும் வைத்து வழிபடுவது பஞ்சாயதன பூஜை. ஸ்கந்தன், லஷ்மி, லலிதா, பரமேச்வரி முதலானவரை இஷ்டதேவதையாக விக்கிரகமாகவோ யந்திரமாகவோ படமாகவோ இவற்றுடன் சேர்த்துப் பூஜை செய்வதுண்டு. சோணபத்திரம் சோணா நதியில் கிடைக்கின்ற கூழான் கல், அவ்விதமே பாணம் நர்மதையிலும், ஸ்வர்ணமுகி குமுதவதி நதியிலும் ஸ்வர்ணமுகி நதியிலும், ஸாலக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகியிலும் ஸ்படிகம் வல்லம் முதலான இடங்களில் உள்ள தடாகங்களிலும் பானுமதி நதியிலும் பூமியினடியிலும் கிடைக்கின்றன. இவை உருவமுமல்ல, அருவமுமல்ல. அந்தந்த ...

இரண்டற்ற ஒன்று

Image
இரண்டற்ற ஒன்று ! இவை அனைத்தும் முன்னர் சத்தாகவே இருந்தது, இரண்டற்ற ஒன்றாய்! உருவிலி அதுவே வானாகி வானே வளியாகி வளியே ஒளியாகி ஒளியே நீராகி நீரே நிலமாகி நிலமே பயிராகி பயிரே உடல்களாகி விளங்கும். உடல் மண்ணாகும் மண் நீராகும் நீர் ஒளியாகும் ஒளி வளியாகும் வளி வானாகும் வானும் மறைந்து அவ்யக்தமாகும் அவ்யக்தம் சத்தாகும். சத்தே எஞ்சிநிற்கும் சதாசிவமாய்.  சத் அசத்தாகாது அசத் சத்தாகாது. சத்தே சித்தாகும் ஸத்தும் சித்தும் அனந்த மாகும் ஆனந்த மாகும் ஆத்மாவாகும். பின்னர் மீண்டுமதுவே அனைத்துமாகும். அதுவே அனைத்துமென்றால் அனைத்துமென்பதில்லை அதுவே இருக்கின்றது இரண்டற்ற ஒன்றாய்!      

வானம் பாரு!

Image
  வானம் பாரு! வானம் பாரு! வரையறை இல்லா வாழ்க்கை கேளு!   சூரியன் பாரு! சுடர்விடும் ஞானம் கேளு!   சந்திரன் பாரு! குளிர்தரும் பார்வை கேளு!   காற்றினைப் பாரு! எதையும் கடந்திடும் வலிமையைக் கேளு!   நிலந்தனைப் பாரு! நில்லா ஓட்டத்திலும் நிதானம் கேளு!   மரங்களைப் பாரு! நின்றே வாழும் ரகசியம் கேளு!   பூவினைப் பாரு! புலர்ந்திடும் பொழுதில் விழித்தலைக் கேளு!   தேனியைப் பாரு! தெரிந்து தெளியும் தெளிவைக் கேளு!   பறவையைப் பாரு! பாங்காய் வாழ்ந்திடும் லாகவம் கேளு!   நதியினைப் பாரு! மூலத்தைத் தேடும் முனைப்பினைக் கேளு!   காலத்தைப் பாரு! கணக்காய் நடந்திடும் கடுமையைக் கேளு!   கடவுளைப் பாரு! சமநிலை நின்றிடும் சித்தம் கேளு!!  

அவரவர் உலகில் அவரவர் !

Image
  அவரவர் உலகில் அவரவர் ! அழகு உண்மையில் இருக்கலாம்; அல்லது இருப்பதாக பார்க்கவும் படலாம்.   தவறு உண்மையில் இருக்கலாம்; அல்லது இருப்பதாக பார்க்கவும் படலாம்.   உலகம் இருவிதம் - உள்ளது ஒன்று பார்ப்பது ஒன்று. உள்ளதை உள்ளவாறு பார்ப்பதும், பார்ப்பதை நேராக்கி கொள்வதும் பார்ப்பவன் கையில் உள்ளது.   உலகம் நல்லதா? கெட்டதா? வாழ்க்கை இன்பமா? துன்பமா? யார் சொல்ல முடியும்?   அவரவர் உலகில் அவரவர் வாழ்கின்றார்!

எப்பொழுதும் தயாராக இரு!

Image
எப்பொழுதும் தயாராக இரு! பிரச்சனை இல்லாமல் குழப்பமில்லை. குழப்பமில்லாமல் தேடலில்லை. தேடல் இல்லாமல் தெளிவு இல்லை. தெளிவு இல்லாமல் ஞானம் இல்லை. ஞானம் இல்லாமல் அமைதி இல்லை. அமைதி இல்லாமல் இன்பம் இல்லை. பிரச்சனை பிரச்சனை இல்லை. பிரச்சனை இன்பத்திற்கான விதை. பிரச்சனையைக் கண்டு அஞ்சாதே - எதிர்கொள்ள எப்பொழுதும் தயாராக இரு!

மாறாத அன்பு

Image
மாறா த அன்பு   மனம் ஒன்றுதான், எண்ணங்கள் பல! அன்பு ஒன்றுதான், அன்பிற்குரிய விஷயங்கள் பல! விஷயங்கள் மாறுகின்ற பொழுது அன்பும் மாறுகின்றது. ஆனால், அன்புக்காக மட்டும் அன்பிருந்தால் விஷயங்கள் மாறினாலும் அன்பு மாறாது!

விநாயக புராணம்

Image
  விநாயக புராணம் பெரும் காதுகள் - அதிகம் கேள்! மறைந்திருக்கும் வாய் - குறைவாக அடக்கமாகப் பேசு! நீண்டிருக்கும் கை - அதிகம் கொடு! உடைந்த தந்தம் - உன்னுள் சிறந்ததை உலக நன்மைக்குப் பயன்படுத்து! மோதக ஹஸ்தம் - மகிழ்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து கொடு! அங்குச ஹஸ்தம் - உன்னை நீயே கட்டுப்படுத்திக் கொள்! நான்கு கைகள் - தேவ இனம்; இரண்டு கால்கள் - மனித இனம்; பெருவயிறு - அரக்க இனம்; யானைத்தலை - விலங்கினம்; அனைத்து உயிர்களும் அவனுள் அடக்கம்! சிறிய வாகனம் (எலி) - அனைத்து உடல்களுள்ளும் அவன் அடக்கம் (ஆத்மாவாய்) !