ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50
ஓம் ஆசாரக் கோவை ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார் உரை : ஸ்வாமீ பூர்ணாநந்ந ஸரஸ்வதீ ஆசாரம் என்பது ஒழுக்கம் அல்லது நடத்தை. பெரியோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியை பின்பற்றி ஒழுகுதல் ஒழுக்கம் ஆகும். ரிஷிகள், ஸம்ருதிகள் எனப்படும் நீதிநூல்களில் அருளிய ஸதாசாரங்களை தொகுத்து வழங்கியது ஆசாரக்கோவை. திருக்குறள் போல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலை இயற்றியவர் பெருவாயில் முள்ளியார் எனும் புலவர். இந்நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களைத் தொடர்ந்து பார்ப்போம். பாடல் 1 : ஆசாரத்திற்கு காரணம் நன்றி யறிதல் பொறையுடைமை இன் சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத்தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து. நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு, இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து. எட்டு நற்பண்புகள் ஒருவனை ஆசாரம் - ஒழுக்கம் - உடையவனாக ஆக்கும். அவை:- நன்றியறிதல் - பிறர் செய்த நன்மையை ஒருபொழுதும் மறவாது நன்றியுணர்வுட...
Comments