வானம் பாரு!

 

வானம் பாரு!



வானம் பாரு!
வரையறை இல்லா வாழ்க்கை கேளு!
 
சூரியன் பாரு!

சுடர்விடும் ஞானம் கேளு!
 
சந்திரன் பாரு!
குளிர்தரும் பார்வை கேளு!
 
காற்றினைப் பாரு!
எதையும் கடந்திடும் வலிமையைக் கேளு!
 
நிலந்தனைப் பாரு!
நில்லா ஓட்டத்திலும் நிதானம் கேளு!
 
மரங்களைப் பாரு!
நின்றே வாழும் ரகசியம் கேளு!
 
பூவினைப் பாரு!
புலர்ந்திடும் பொழுதில் விழித்தலைக் கேளு!
 
தேனியைப் பாரு!
தெரிந்து தெளியும் தெளிவைக் கேளு!
 
பறவையைப் பாரு!
பாங்காய் வாழ்ந்திடும் லாகவம் கேளு!
 
நதியினைப் பாரு!
மூலத்தைத் தேடும் முனைப்பினைக் கேளு!
 
காலத்தைப் பாரு!
கணக்காய் நடந்திடும் கடுமையைக் கேளு!
 
கடவுளைப் பாரு!
சமநிலை நின்றிடும் சித்தம் கேளு!!





 


Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

Gita Chapter 15 - புருஷோத்தம யோகம்