அறம் செய விரும்பு - 4

அறம் செய விரும்பு - 4

விழித்தெழுதல்

விடியற்காலையில் எழவேண்டும். முன்இரவுத் தூக்கம் உடலின் அயர்வை நீக்கும். பின் இரவுத் தூக்கம் மனம் தெளிய உதவும். விடியற்காலையில் பிராம்ம முகூர்த்தத்தில் தூக்கம் நீங்கி எழுவது அன்றுமுழுவதும் மனத்தெளிவைத் தொடர்ந்திருக்கச் செய்யும்.

ஒரு நாளுக்கு 30 முகூர்த்தங்கள். சூரிய உதயத்திலிருந்து இவை கணக்கிடப்படுகின்றன. ஒரு முகூர்த்தம் 48 நிமிடங்கள். 28வது முகூர்த்தமான பிராம்மமுகூர்த்தம் விழித்தெழ நல்லவேளை.

சூர்யோதயம் 6 மணிக்கு எனக் கொண்டால் 3.36 முதல் 4.24 வரை உள்ள காலவரை இது. இரவை ஆறுபகுதிகளாக்கி ஆறாம் பகுதியின் முன்பகுதி பிராம்மம், பின் பகுதி ரௌத்திரம் என்பர் சிலர். அதன்படி சுமார் 4-5 மணி.

நல்லதைக்காணல்
கண்களைத்துடைத்துத் தன் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும். கைகளின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் அடியில் கெளரியும் இருப்பதாக கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லி தியானித்து தன்னிடம் லயித்திருந்த எல்லா உணர்வுகளையும் இப்போது திரும்பத்தந்து உறுதியும் உற்சாகமும் ததும்ப நற்செயல் புரிய வாய்ப்புத்தந்த இறைவனைச் சிலநொடிகள் தியானித்தல் அவசியம். புனிதர்களான ரிஷிகள், கங்கை முதலிய நதிகள், நற்செயல்களால் புகழ்பெற்ற நளன், யுதிஷ்டிரர், சீதை முதலானோரை நினைவுகூர்ந்து பசு, அக்னி, பழம், பூ முதலிய நற்பொருளைக் காணலாம்.

உதயத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்று நாழிகை ஸந்தியாகாலம். இந்த நேரத்தில் உணவு, தூக்கம், உடலுறவு, நூல்கள் படிப்பது இவை கூடாது. படுக்கை விட்டெழுந்ததும் பூமிதேவியின் மேல் தனது காலடி பதிவதாக நினைத்து, அது தவிர்க்க முடியாதிருப்பதால் பொருத்தருளும்படி பூமிதேவியிடம் பிரார்த்திப்பர்.

கராக்ரே வஸதே லக்ஷ்மீ: 
கரமத்யே ஸரஸ்வதீ |
கரமூலே ஸ்திதா கௌரீ 
ப்ரபாதே கரதர்சனம் ||

ஸமுத்ரவஸனே தேவி
பர்வதஸ்தன மண்டலே |
விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே ||

முடிந்தால் கீழ்க்கண்ட எல்லா ச்லோகங்களையும் சொல்லலாம்.

அஹல்யா திரௌபதீ ஸீதா 
தாரா மந்தோதரீ ததா |
பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம் ||

புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர: |
புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன: ||

கார்கோடகஸ்ய நாகஸ்ய
தமயந்த்யா: நளஸ்ய ச |
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: 
கீர்த்தனம் கலி நாசனம் ||

அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீஷண: |
க்ருப: பரசுராமஸ்ச்ச 
ஸப்தைதே சிரஜீவின: ||

ப்ரம்மா முராரிஸ்திரிபுராந்தகச்ச
பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச |
குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம: |
ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச |
ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த |
பூராதிலோகா : புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:
ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ: |
நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேச்வர: |
குரு: ஸாக்ஷத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

Gita Chapter 15 - புருஷோத்தம யோகம்