Jun 26, 2020

Hindumatha Dharma Vilakkam - Chapter 2

ஓம்

ஹிந்துமத தர்ம விளக்கம்


பாடம் - 2


சென்ற வகுப்பில் பார்த்தது...


மனித இனம் அறிவால் வளரவில்லை; தேய்ந்து கொண்டிருக்கிறது.


நம்முன்னோர்கள் சொன்னது, வாழ்ந்தது “உயர்ந்த சிந்தனை எளிய வாழ்க்கை. ஆனால் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருப்பது Hitech வாழ்க்கை Lowclass சிந்தனை.


நம் முன்னோர்கள் "குறைவான தேவைகளோடு குறைவான பொருள்களோடு மிகுதியான உறவுகளோடு நிறைவாக வாழ்ந்தார்கள்.


இன்று நாம் மிகுதியான தேவைகளோடு மிகுதியான பொருட்களோடு ஆனால் குறைவான உறவுகளோடு குறைவான மனநிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.


வாழ்வின் குறிக்கோள்: இன்பம். அறவழியில் வந்த பொருளால் சிற்றின்பம், அருள்‌வழியில் வரும் ஆத்மஞானத்தால் பேரின்பம்.


அதற்கு முதல் ஸாதனம் அறம் என்ற தர்மம்.
தர்மம் என்பது யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கு செய்யாதிருத்தல்.


பலன் : மனத்தூய்மை, இன்பம், புகழ், புண்ணியம்.


இனி….

கடவுள் ஏன் இருக்கிறார்?

தர்மத்தைச் செய்யவேண்டுமென்றால் தர்மத்தில் சிரத்தை ஏற்படவேண்டும்; தர்மத்தில் சிரத்தை ஏற்படவேண்டுமென்றால் தர்மத்தை விதித்த கடவுள் மேல் சிரத்தை ஏற்படவேண்டும்; கடவுள் மேல் சிரத்தை ஏற்படவேண்டும் என்றால் கடவுள் நம்பிக்கை உறுதியாக இருக்கவேண்டும். கடவுளை ஓரளவாவது அறிந்திருக்கவேண்டும்.


கடவுள் அருளியது வேதங்கள். வேதங்கள் காட்டுவது கடவுள். 


கடவுளை அறிவதற்குப் பிரமாணங்கள் யாவை? வேதங்கள், யுக்தி, அனுபவம்.


ப்ரமாணம்
அறிவை தரும் கருவி  - Means of knowledge.


முதல் பிரமாணம்: வேதங்கள்
நம் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத விஷயங்களைப் பற்றிய அறிவைத் தருபவை வேதங்கள்.


புண்ணியம், பாபம், சொர்க்கம், நரகம், பல பிறவிகள், மோக்ஷம்..


வேதங்கள் கடவுளை எப்படிச் சொல்கின்றன ? 
அருவம், அருவுருவம், உருவம்

அருவம் = ஆகாயம் போல் எங்கும் பரந்து ஒன்றாயிருக்கும் தன்மை. இது நிர்குணப்ரம்மம் எனப்படுகிறது.

அருவுருவம் = சிவலிங்கம், சாலக்ராவம் போன்று தெளிவான உருவமின்றி அதேசமயம் கண்ணுக்குப் புலப்படும்படி இருக்கும் நிலை.

உருவம் = சிவ, விஷ்ணுவாதி வடிவமாக எழுந்தருளும் நிலை.
இது ஸகுணப்ரம்மம் எனப்படுகிறது.

இரண்டாவது பிரமாணம் :
யுக்தி பூர்வமான அனுமானம்

காரண-காரிய விவேகம்


உலகம் காரணகாரிய தொடர்புடையதாக இருக்கின்றது. 


உலகம் காரியமாக இருக்கின்றது, கடவுள் காரணமாக இருக்கின்றார். காரணம் இரண்டு விதம் -  உபாதான காரணம், நிமித்த காரணம்.


நாம் பயன்படுத்தி கொண்டிருக்கக்கூடிய செயற்கைப்பொருட்கள் எதுவும் - மனிதனால் படைக்கப்பட்ட எதுவும் - தானே உருவானதல்ல. ஒன்று இன்னொன்றாக பரிணாமம் அடையக்கூடியதுமல்ல.
இயற்கையும் அப்படித்தான்.


மின்சாதனங்கள் + மின்சாரம் + அறிவுடைய மனிதன்


காரணம் இன்றி காரியம் இல்லை; காரியம் இன்றி காரணம் உண்டு. காரணம் ஒன்று, காரியங்கள் அனேகம்; காரணம் நித்யம், காரியம் அநித்தியம்; காரணம் ஸத்யம், காரியம் மித்யா.


சேதனன் - மாயை - உலகம்
சேதனம், சித், சைதந்யம் அனைத்தும் நிர்குண பிரம்மத்தை குறிப்பது.  நிர்குண பிரம்மம் தன் சக்தியாகிய மாயையோடு கூடி ஈஸ்வரனாக நாம ரூபத்துடன் சிருஷ்டி கர்த்தாவாக இருக்கின்றது.


மூன்றாம் பிரமாணம் :
அனுபவம்
கடவுளைப் பார்த்தவர்கள்
ஞானிகள், யோகிகள், ரிஷிகள், அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தர்கள், சித்தர்கள்….


சாமி வந்து ஆடுதல், நோய்கள் குணமாதல், கனவிலும் நேரிலும் கடவுள் காட்சி, எதிர்பாராத உதவி…


மரண அனுபவங்கள், முற்பிறவி நினைவுகள், கனவுக் காட்சிகள், 
அதீத திறமைகள்…

இப்படிப் பல கடவுளின் இருப்பிற்கு ஆதாரங்களாக உள்ளன.


ஆகவே, கடவுள் இருக்கிறார், இருக்கவே இருக்கிறார்; கடவுளை நம்புகிறவன் பக்தன்; கடவுளை அறிந்தவன் ஞானி;

கடவுள் பணி செய்கிறவன் தொண்டன்.

தர்மம், பக்தி, ஞானம் கடவுளை அறிய உதவும்.

No comments: