Hindumatha Dharma Vilakkam - Chapter -11
பாடம் :11(20.08.2020)
பக்தி
இச்சா சக்தி ஞான சக்தி கிரியா சக்தி.
கடவுளை அடைய ஆசைப்படுவதும் கடவுளைப் புரிந்து கொள்ளுதலும் கடவுளை அடைய முயற்சித்தலும்.
கடவுள்...
அனைத்து நல்லவைகளின் தொகுதி.
அனைத்து
ஞானங்களின் களஞ்சியம்.
அனைத்து
சக்திகளின் பிறப்பிடம்.
அனைத்து
படைப்புகளின் மூலம்.
அனைத்து தோற்றங்களின் முடிவிடம்.
அனைத்து
உயிர்களின் ஆதாரம்.
அனைத்தையும் உள்ளடக்கிய பேராற்றல்.
எல்லாம் கடந்து இருப்பதால் கடவுள். எங்கும் நிறைந்திருப்பதால் இறைவன். அனைத்தையும் ஆள்வதால் ஆண்டவன்.
ஆறு ஐஸ்வர்யங்களை உடையதால் பகவான்.
ஒளி வடிவினன் என்பதால் தெய்வம்.
வேத ரூபமாயிருப்பவன் என்பதால் ஓங்காரம்.
அனைத்துள்ளும்
இருப்பவன் என்பதால் ஆத்மா.
அனைத்திற்கும் மேலானவன் என்பதால் பரமாத்மா.
அந்தக் கடவுளை
அடைய முயற்சிப்பதற்கே வாழ்க்கை!
அந்தக் கடவுளை திருப்திபடுத்துவதே வழிபாடு!
அந்தக் கடவுளை அடைந்து அதுவாய் இருப்பதே மோக்ஷம்!
உலகு ஆதி பகவன் முதற்றே!
வாலறிவன் நற்றாள் தொழவே அறிவு!
எண்குணத்தான் தாளை வணங்கவே உடல் உறுப்புகள்!
இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர்!
கடவுள் வழிபாட்டுமுறைகள்
சேவை செய்தல் (பகவத் கைங்கரியம், கர்மயோகம்),
ஷோடச / பஞ்ச உபசார பூஜை செய்தல்,
ஜபம், தியானம் செய்தல், ஸ்தோத்திர பாராயணம் செய்தல்,
நாம சங்கீர்த்தனம் பாடுதல்,
ஞான சாஸ்திரங்களைப் கேட்டல், படித்தல்.
அதுவாகவே இருத்தல்.
நவவித பக்தி - ஒன்பது வகை பக்தி
श्रवणं कीर्तनं विष्णोः स्मरणं पादसेवनम् ।
अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् ॥
ச்ரவணம் கீர்த்தநம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவநம்।
அர்ச்சநம் வந்தநம் தாஸ்யம் ஸக்யம் ஆத்மநிவேதநம்।।
1.சிரவணம்: கடவுளைப் பற்றிய புராண இதிஹாஸக் கதைகளை கேட்பது படிப்பது.
சிரவணம் - மகாராஜா பரீக்ஷித்.
2.கீர்த்தனம்: பகவானின் நாமங்களை பெருமைகளைப் பக்தியோடு பாடுதல்.
கீர்த்தனம் - சுகப்ரஹ்ம ரிஷி, நாரதமுனி.
3.ஸ்மரணம்: கடவுளின் பெருமைகளை மனதினில் மீண்டும் மீண்டும் நினைத்தல், இதில் மந்திர உச்சாடனமும் அடங்கும்.
ஸ்மரணம் - ப்ரஹ்லாதன், துருவன், கஜேந்திரன்.
4.பாத சேவனம்: திருவடிகளுக்குச் சேவை செய்தல், அடியார்களுக்குத் தொண்டு செய்வதும் அடங்கும்.
பாதஸேவனம் - லக்ஷ்மி, பரதன்.
5.அர்ச்சனை: வீட்டிலேயே இறைவனை பூஜித்து வணங்குவது அல்லது
கோயில் வழிபாட்டில் கலந்து கொள்வது.
அர்ச்சனம் - மகாராஜா ப்ருது
6.வந்தனம்: விழுந்து வணங்குவது.
வந்தனம் - அக்ரூரர்
7. தாஸ்யம்: இறைவனின் அடிமையாக தன்னை பாவித்துக் கொள்வது. இறைத்தொண்டு செய்வதையே தன் வாழ்க்கையாக கொள்வது.
தாஸ்யம் - ஹனுமான்.
(இறைவனுக்கும் இறை அடியார்களுக்கும் தொண்டு செய்வதையே வாழ்க்கையாக கொண்டிருந்த அடியார்கள் பலர்)
8. ஸக்யம்: இறைவனை ஆத்மார்த்தமான நண்பனாக பாவிப்பது.
ஸக்யம் - அர்ஜுனன், சுதாமா, சுந்தரர்
9.ஆத்ம நிவேதனம்: ஒட்டுமொத்தச் சரணாகதி. நான் என்பது இல்லாமல் அவனாகவே இருப்பது.
ஆத்ம நிவேதனம் - மகாராஜா பலி, விதுரன்.
கர்மயோகம்
தர்மம் - நமது கடமைகளைச் செய்தல்
கர்மயோகம் -
நமது கடமைகளை ஈஸ்வர அர்ப்பண புத்தியோடு செய்தல்.
பலனை ப்ரஸாத புத்தியோடு ஏற்றுக்கொள்ளுதல்.
Comments