புரிகிறதா பாருங்கள் !
ஓம்
பார்ப்பவனைப் பார்!
இல்லாமலும் போகலாம்.
தவறாக இருப்பது
சரியாகவும் ஆகலாம்.
சரியாக இருப்பது
தவறாகவும் ஆகலாம்.
உடல் மாறும்
உள்ளம் மாறும்
உலகம் மாறும்
எல்லாம் மாறும்.
மாறுவதைப் பார்ப்பவன் மாறான்.
பார்ப்பவனைப்
பார்க்கத் தொடங்கினால்
பார்க்கப்படுபவை
பார்க்கப்படாமல் போகும்.
பார்க்கப்படுவது
பார்க்கப்படாமல் போகவே
பார்ப்பவன் எங்கே?
பார்க்கப்படுவது
இருக்கும்வரையே
பார்ப்பவன்.
பார்ப்பவன்
இருக்கும்வரையே
பார்க்கப்படுவது!
பார்ப்பவனைப் பார்த்துவிட்டால்
பார்க்கப்படுவதும் இல்லை
பார்ப்பவனும் இல்லை.
இறுதியில்
இல்லை என்பதே
இருக்கிறதா என்றால், இல்லை.
இல்லை என்பவன்
இருக்கின்றான்
தான் மாத்திரமாக!
இதைப் பார்த்தவனே
உண்மையில் பார்த்தவன்
என்கின்றன பழமறைகள்!
புரிகிறதா பாருங்கள்!
🌹🔯🔯🔯🔯🔯🔯🔯🌷
Comments