ஸச்சிதாநந்தம்
ஓம்
ஸச்சிதாநந்தம்
ஒன்று உள்ளது
ஒன்று தான் உள்ளது
ஒன்றே அனைத்துமாய் உள்ளது
அனைத்தும் ஒன்றிலே உள்ளது
அது அனைத்துள்ளும் உள்ளது
அதுவே உள்ளது.
உள்ளதாய் மட்டுமே
உள்ளது அது
அதன் பெயர் உண்மை
அதன் பெயர் அறிவு
அதன் பெயர் ஆனந்தம்.
அதுவே
உன்னுள்ளும் உள்ளது
என்னுள்ளும் உள்ளது
அனைத்துள்ளும் உள்ளது
அதுவன்றி எதுவுமில்லை
எதுவும் அது இல்லை.
அது நீ என்று உணர்ந்து
எல்லாம் அதுவென்று உணர்ந்து
அதுவாய் அமர்ந்திருப்பாயே!
Comments