ஓம் ஆசாரக் கோவை ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார் உரை : ஸ்வாமீ பூர்ணாநந்ந ஸரஸ்வதீ பாடல் 51 : உடற்பொலிவு கெடுப்பன மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும் தம்மொளி வேண்டுவார் நோக்கார். பகற்கிழவோன் முன்னொளியும் பின்னொளியும் அற்று. பொருள் : தன்னுடல் பொலிவோடு இருக்க விரும்புபவர், மின்னல் ஒளியையும் எரி நட்சத்திரத்தையும் விலைமகளிர் அலங்காரத்தையும் (இன்று நடிகையர் படத்தையும்) சூரியனின் தோற்றத்தையும் மறைவையும் பார்த்தல் கூடாது. பாடல் 52 : உரைக்கலாகாதன படிறும் பயனிலவும் பட்டி யுரையும் வசையும் புறனும் உரையாரே என்றும் அசையாத உள்ளத் தவர். நிலையான மனத்தினர் வஞ்சனைப்பேச்சு, பயனற்றபேச்சு, தேவையற்றபேச்சு, பழிப்பேச்சு, புறங்கூறுதல் பேசார். பாடல் 53 : செய்யத்தகாத பழிச்செயல்கள் தெறியொடு கல்லேறு வீளை விளியே விகிர்தம் கதங்கரத்தல் கைபுடை தோன்ற உறுப்புச் செகுத்தலோ டின்னவை யெல்லாம் பயிற்றார் நெறிப்பட் டவர். தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே, விகிர்தம், கதம், கரத்தல், கைபுடை, தோன்ற உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம் பயிற்றார் நெறிப்பட்டவர். பொருள் : ந...
Comments