இரண்டற்ற ஒன்று
இரண்டற்ற ஒன்று !
முன்னர்
சத்தாகவே இருந்தது,
இரண்டற்ற ஒன்றாய்!
உருவிலி அதுவே
வானாகி
வானே வளியாகி
வளியே ஒளியாகி
ஒளியே நீராகி
நீரே நிலமாகி
நிலமே பயிராகி
பயிரே உடல்களாகி விளங்கும்.
உடல் மண்ணாகும்
மண் நீராகும்
நீர் ஒளியாகும்
ஒளி வளியாகும்
வளி வானாகும்
வானும் மறைந்து
அவ்யக்தமாகும்
அவ்யக்தம் சத்தாகும்.
சத்தே எஞ்சிநிற்கும்
சதாசிவமாய்.
சத் அசத்தாகாது
அசத் சத்தாகாது.
ஸத்தும் சித்தும்
அனந்த மாகும்
ஆனந்த மாகும்
ஆத்மாவாகும்.
பின்னர் மீண்டுமதுவே
அனைத்துமாகும்.
அதுவே அனைத்துமென்றால்
அனைத்துமென்பதில்லை
அதுவே இருக்கின்றது
இரண்டற்ற ஒன்றாய்!
Comments