தவறும் சரியும்
தவறும் சரியும்
தவறுகள்
தவறி நடப்பவை.
தவறு நடப்பது தவறல்ல, தவறாகவே நடப்பது தவறு,
தவறுகள் செய்யாமல் வாழ்வது மனிதனின் கடமை.
தவறி தவறுகள் நடந்தால், பின்
தவறாமல் தவறுகளை ஏற்றுக் கொள்வது மனிதனின் பெருமை.
பெரியோர்கள் தவறு செய்யார்கள் என்பதில்லை,
தவறு என்று தெரிந்தவுடன் தவறாமல்
ஏற்றுக் கொள்பவர்களே பெரியவர்கள்.
தவறுகளெல்லாம் தவறுகளல்ல.
தவறுகள் சில சமயங்களில் சரியான பலன்களைக் கொடுக்கலாம்.
அப்பொழுது அவை சரியான தவறுகள்.
சரிகளெல்லாம் சரிகளல்ல.
சரிகள் சிலசமயங்களில் தவறான பலன்களைக் கொடுக்கலாம்.
அப்பொழுது அவை தவறான சரிகள்.
மனிதன் ஒரு சரியான தவறு என்பது விஞ்ஞானம்.
படைத்தவனை உணராத மனிதன் தவறான சரி என்பது மெய்ஞானம்.
தவறுகள் எல்லாம்
விதியின்
வினைகளல்ல.
ஆனால்
தவறுகள் நிச்சயம்
தவறான விளைவுகளை
விளைவிக்கும் என்பது
தவறாத விதி.
அநாத்மாவில்
சரி உண்டு தவறு உண்டு.
ஆனால்,
தவறுவதற்கும் சரி செய்வதற்கும் ஏதுமில்லை
ஆத்மாவில்.
Comments