Hindumatha Dharma Vilakkam Chapter - 09


ஹிந்துமத தர்ம விளக்கம்

பாடம் - 9

நாற்பது ஸம்ஸ்காரங்கள்

ஜீவாத்மாவுக்குப் பரிசுத்தி ஏற்படுவதற்காக நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.


1.கர்பாதானம், 2.பும்ஸவனம், 3.ஸீமந்தம், 4.ஜாதகர்ம, 5.நாமகரணம், 6.அன்னப்ராசனம், 7.சௌளம் (சிகை வைத்தல்), 8.உபநயனம், குருகுலவாஸத்தில் செய்ய வேண்டியவை

9.ப்ராஜாபத்யம், 10.சௌம்யம், 11.ஆக்நேயம், 12.வைச்வதேவம் என்று நான்கு வேத வ்ரதங்கள், 13.ஸமாவர்தனம் (ஸ்நாநம்), 14.விவாஹம்

அதன்பின் கிருஹஸ்தன் செய்யவேண்டிய ஐந்து நித்ய கர்மாக்களாகிய பஞ்ச மஹா யக்ஞங்கள் (15-19)

தேவ, பித்ரு, மனுஷ்ய, பூத ப்ரும்ம யஜ்ஞம். 

இதோடு கிருஹஸ்தன் செய்ய வேண்டிய பாக யக்ஞங்கள் 7, ஹவிர் யக்ஞங்கள் 7, ஸோம யக்ஞங்கள் 7 ஆக யக்ஞங்கள் இருபத்தொன்றும் ஸம்ஸ்காரங்களே ஆகும். 19+21=40 ஸம்ஸ்காரங்கள்.


நாற்பது ஸம்ஸ்காரங்களில் தினந்தோறும் பண்ண வேண்டியவை சில இருக்கின்றன. சில சில காலங்களில் பண்ணவேண்டியவை சில. ஆயுளில் ஒரு தரம் பண்ண வேண்டியவை சில. இவைகளுக்குள் ஒவ்வொரு கிருஹஸ்தனும் நன்றாகத் தெரிந்துகொண்டு தினமும் செய்யவேண்டிய முக்கியமான ஸம்ஸ்காரங்கள் பஞ்ச மஹா யக்ஞங்கள் என்ற ஐந்து.


மந்திரமில்லாமல் வெறுமே செய்யும் காரியத்தைவிட, மந்திரத்தைச் சொல்லிச் செய்வதே அதிக நன்மை தர வல்லது. இப்படி மந்திரபூர்வமாகக் காரியம் பண்ணுவதே ஸம்ஸ்காரமாகிறது. கிருஹஸ்தன் தினந்தோறும் செய்யவேண்டிய பஞ்சமஹா யக்ஞத்தில் ஸோஷியல் சர்வீஸ் (சமூக ஸேவை) என்பது மந்திர பூர்வ ஸம்ஸ்காரமாகிறது.


பஞ்ச மஹா யஜ்யம் - ஐம்பெரும் வேள்விகள் (கடமைகள்)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் அவசியம் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.

1.பிரம்ம யக்ஞம் - வேதம் ஓதுவது என்ற அத்யயனம்.

அற நூல்களை அறிவு நூல்களைக் படித்தல்.

2.தேவ யக்ஞம் - யாகமும் பூஜையும் தேவ யக்ஞம். கடவுள் வழிபாடு.

3.பித்ரு யக்ஞம் - தர்ப்பணம்.

முன்னோர் வழிபாடு.

4.மனுஷ்ய யக்ஞம் - விருந்தோம்பல்.

மற்ற மனிதர்களுக்கு உதவுதல்.

5.பூத யக்ஞம் - ஜீவ ஜந்துக்களுக்கெல்லாம் பலி போடுவது.

மற்ற உயிர்களுக்கு உதவுதல்.


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை, யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை, யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி, யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. 

- திருமந்திரம்.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. - திருக்குறள் 43.

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101