ஒன்று!

 

 ஒன்று!

 


கண்கள் வேறு காதுகள் வேறு
நாசி வேறு நாக்கு வேறு
கைகள் வேறு கால்கள் வேறு
ஒன்று போல் இன்னொன்று இல்லை;
ஒன்று செய்வதை மற்றொன்று செய்யாது.
இப்படி உறுப்புகள் வேறாயினும்
உள்ளே நானென்று உறைபவன் ஒருவன்தான்!

காட்சிகள் வேறாயினும்
காண்பவன் ஒருவன்தான்!
அனுபவங்கள் வேறாயினும்
அனுபவிப்பவன் ஒருவன்தான்!
உடைகள் வேறாயினும்
உடல் ஒன்றுதான் என்பது போல!

இதைப்போலவே
உலகமும் இறைவனும்.

கண்கள் பல காதுகள் பல
கைகள் பல கால்கள் பல
உடல்கள் பல உலகம் பல
ஆனாலும்
உள்ளே உறைபவன்
ஒருவன் தான்.
அனைத்திற்கும் ஆதாரமான
ஆத்மா ஒன்று தான்.
அனைத்தையும்
அறிகின்ற ஞானம் ஒன்றுதான்.

உன்னுள்ளே மாறாத
உன்னைப் பார் !
உலகுள்ளும் அதையே பார்!!

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101