துரீயம்!
துரீயம்!
நானிருந்தேன்
ஆழ்ந்த உறக்கத்தில்
காலம் இல்லை
வெளி இல்லை
இதுவும் அதுவும்
எதுவும் இல்லை
அங்கு
நான் மட்டும் இருந்தேன்.
சுவாசம் இருந்தது
அது நானாய் இல்லை,
அவித்தை இருந்தது
அதுவும் நானாய் இல்லை.
நான் மட்டும் இருந்தேன்
ஆநந்தம் இருந்தது.
ஆநந்தம் இருந்தது
ஆநந்தமாய் நானிருந்தேன்.
வந்துவிட்டன
விழித்த பிறகு அனைத்தும்,
ஆனாலும்
நான் மட்டும் இருக்கிறேன் -
ஆழ்ந்த உறக்கத்தில் போல விழிப்பிலும் கனவிலும்.
🔯🔯🔯🔯🔯🔯
Comments