ஆத்மதர்சனம்
ஓம்
ஆத்மதர்சனம்
🌷🌷🌷🌷🌷
ஒன்றுதான்
உள்ளும் புறமும்
ஒன்றுதான்
முன்னும் பின்னும்
ஒன்றுதான்
வலதும் இடதும்
ஒன்றுதான்
மேலும் கீழும்
ஒன்றுதான்
இங்குமங்கும்
ஒன்றுதான்
காலவெளியெங்கும்
ஒன்றுதான்.
ஒன்று தான்
அதன் பெயர் ஸத்யம்
ஒன்றுதான்
அதன் பெயர் சிவம்
ஒன்றுதான்
அதன் பெயர் சுந்தரம் ஒன்றுதான்
அதன் பெயர் அறிவு
ஒன்றுதான்
அதன் பெயர் ஆனந்தம்
ஒன்றுணர்ந்து ஒன்றுபற்றி
ஒன்றிவிட்டால் ஒன்றுமில்லை சோகிப்பதற்கு!
🌺🌺🌺🌺🌺
Comments