Hindumatha Dharma Vilakkam - Chapter 10
ஓம்
பாடம் : 10
ஸாமான்ய தர்மம் - பொது தர்மம்
1️⃣நற்பண்புகள்
2️⃣நன்னடத்தை (ஆசாரம்)
3️⃣சமயச் சடங்குகள்
விநாயகர் சதுர்த்தி, ஸ்கந்தஷஷ்டி, சிவராத்திரி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பொங்கல், தீபாவளி, திருக்கார்த்திகை, ராமநவமி, கோகுலாஷ்டமி
இப்படியான நமது பண்டிகைகள் அனைத்தையும் பாரம்பரிய முறைப்படி கொண்டாடுதல் தர்மத்தின் ஒரு அங்கமாகும்.
அதேபோல நாம் வசிக்கும் ஊரில் உள்ள கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்ளுதல், நமது குலதெய்வ கோயில்களை பராமரித்தல் தொடர்ந்து வழிபட்டு வருதல், விரத முதலானவைகளை கடைபிடித்தல் ஆகியவையும் தர்மத்தின் அங்கங்களாகும்.
5️⃣ உறவுகள்
ஹிந்து மதத்தில் அனேக உறவுமுறைகள் காணப்படுகின்றன. சமயச் சடங்குகளில் ஒவ்வொரு உறவு முறைக்கும் ஒவ்வொரு விதமான பங்கு உண்டு. உறவுகளை மதித்தல், தொடர்ந்து பராமரித்தல் கடமைகளை முறையாகச் செய்தல் போன்றவையும் தர்மத்தின் அங்கங்களாகும்.
6️⃣ பாவனை
உயர்ந்த பாவனைகளை மனதில் கொண்டிருத்தல்.
கடவுள் நம்பிக்கையோடு இருத்தல்.
மாதா, பிதா, குரு ஆகியோரையும் தெய்வமாக மதித்தல்.
பூமி, தண்ணீர், அக்னி, நாடு, மொழி, நதி, மலைகள், சந்திரன், சூரியன் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தையும் தெய்வமாக போற்றுதல். (எல்லா இயற்கை சக்திகளுக்கு பின்னாலும் அதை கட்டுப்படுத்துகின்ற தேவதைகள் இருக்கின்றன.)
எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்று அனைவரையும் சமமாகப் பார்த்தல், பழகுதல்.
இதுவும் ஹிந்து தர்மத்தின் ஓர் அங்கமாகும்.
விசேஷ தர்மம்
வர்ண தர்மம்
( பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் - வர்ணங்கள்)
புருஷ தர்மம், ஸ்த்ரீ தர்மம் குரு தர்மம், சிஷ்ய தர்மம் ராஜ தர்மம், ப்ரஜா தர்மம்…. இப்படி தனித்தனியாக அததற்குரிய தர்மங்கள் விசேஷ தர்மம் எனப்படுகின்றது.
Comments