பெரிதினும் பெரிது கேள் !
பெரிதினும் பெரிது கேள் !
பெரியது !
ப்ரம்மம் பெரியது
பிரபஞ்சம் பெரியது
வான் பெரியது
காற்று பெரியது
சூரியன் பெரியவன்
சந்திரன் பெரியவன்
நீர் உலகம் பெரியது
நிலவுலகம் பெரியது
உயிர்கள் பெரியன
மனித உடல் பெரியது
மனித மனம் பெரியது !
வாழ்வு சிறியது
இளமை சிறியது
செல்வம் சிறியது
பணம் சிறியது
பதவி சிறியது
அகங்காரம் சிறியது
விருப்பு வெறுப்புகள் சிறியன !
சிறுமைகள் விடுத்து
பெரியது பற்றி
பெருமைகள் அடை!
மதவெறி விடு
மொழிவெறி விடு
இனவெறி விடு
பணவெறி வீடு
விடுதலை விரும்பினால் விடு
அனைத்தையும் விட்டு விடு!
பெரிது கேள்
பாரதி கேட்டதுபோல்...
பெரிதினும் பெரிது கேள் !
வள்ளுவன் சொன்னதுபோல்...
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகு!
Comments