Kaivalya Navanitham - தத்துவ விளக்கப் படலம் (1 - 50)


 நன்னிலம் தாண்டவராயர் சுவாமிகள் அருளிய 

கைவல்ய நவநீதம் 

தத்துவ விளக்கப் படலம்



பாடல் : 1

நித்திய அநித்தி யங்கள் நிண்ணயம் தெரிவி வேகம், 
மத்திய இகப ரங்கள் வருபோகங் களில்நி ராசை,
சத்தியம் உரைக்க வேண்டும் சமாதிஎன் றாறு கூட்டம், 
முத்தியை விரும்பும் இச்சை மொழிவார்சா தனம்இந்நான்கே.

பொருள்:

நித்திய அநித்யங்கள் நிண்ணயம் தெரி விவேகம்= இது நிலையானது இவை நிலையற்றவை என்று நிச்சயித்து அறிகின்ற பகுத்தறிவு,

மத்திய இகபரங்கள் வரு போகங்களில் நிராசை = நடுவில் இருக்கின்ற இவ்வுலக சுகங்களிலும் மறு உலக சுகங்களிலும் ஆசையற்ற நிலை.

சமாதி என்றாறு கூட்டம் = சமம் முதலான ஆறு பண்புகளில் தொகுதி (அடுத்த பாடலில் விவரிக்கப்படும்.)

முத்தியை விரும்பும் இச்சை = (பிறவியிலிருந்து) விடுதலை அடைய வேண்டும் என்ற விருப்பம்.

சத்தியம் உரைக்க வேண்டும் = சரியாகச் சொல்ல வேண்டுமெனறால்

மொழிவர் சாதனம் இந்நான்கே = வேதாந்த நூல்களை படிப்பதற்கான தகுதிகள் இவை நான்கும் தான் என்று அறிஞர்கள் சொல்லுவர்.

வேதாந்த நூல்களை - ஆத்மதத்துவத்தை - அறிய விரும்புகின்றவர்களுக்கு இருக்க வேண்டிய நான்கு தகுதிகள் 

1.விவேகம் = நித்ய அநித்ய விவேகம் - ஆத்ம அநாத்ம விவேகம்.
நிலையானது எது ?நிலையற்றது எது ?
என்பதைப் பற்றிய பகுத்தறிவு.
நிலையானது = ஆத்மா இறைவன்.
நிலையற்றது =  உடல், உலகம்.

நாத்திகம் சொல்வது: பொருள் - இன்பம் - போகம்.
ஒரே உடல் ஒரே உலகம் ஒரே பிறவி ஒரே வாழ்க்கை

வேதம் சொல்வது: பல உடல்கள், பல உலகம், பல பிறவிகள், பல வாழ்க்கை.
பிறவிக்குக் காரணம் புண்ணிய பாபம்.
முந்தின பிறவியில் செய்த தர்ம அதர்மங்கள்
இப்பிறவியில் இன்ப துன்பங்களைத் தரும் புண்ணிய பாபங்களாக. இப்பிறவியில் செய்யும் தர்ம அதர்மங்கள் அடுத்த பிறவிகளுக்கு காரணங்களான புண்ணிய பாபங்களாக.... முடிவில்லாத பிறப்பு இறப்புகள், முடிவில்லாத பயணம், முடிவில்லாத இன்ப துன்பங்கள்...

முடிவதற்கு என்ன வழி ?
படைத்தவனிடம் சரணடைவதே. இறைவனடி சேர்ந்தவர் பிறவிப் பெருங்கடல் நீந்துவர்.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்து சார்தரும் நோய் சார்தரா.

2. நிராசை = வைராக்யம்
வைராக்யம் = பற்றின்மை. அநித்யமான உலகத்திலிருந்து ஆசை நீங்கிய நிலை.

யாதனின் யாதனின் நீங்கியான்...
துன்பம் இல்லை, இன்பம் எங்கே?

(விஷய சுகம்
நிலையற்ற தன்மை
துன்பம் கலந்த இன்பம் நிறைவைத் தராது இன்பம்)

நாம் விரும்புவது நிலையான பரிபூரணமான இன்பம்.

3.சமாதி ஷட்க ஸம்பத்தி: = மனவடக்கம் முதலான ஆறு குணங்கள். (அடுத்தபாடலில்)

4.முமுக்ஷுத்துவம் = கர்மபந்தத்திலிருந்து விடுதலையை அடைய வேண்டும் என்ற விருப்பம்.

நான்கே - ஒன்பது அல்ல நான்கு தான்.


பாடல் : 2

சமம் தமம் விடல்ச கித்தல் சமாதானம் சிரத்தை ஆறாம்,
சமம்அகக் கரண தண்டம் தமம்புறக் கரண தண்டம்,
அமர்தரு கருமம் பற்றா தறுத்தலே விடல்என் றாகும்,
மமர்செயும் காமம் ஆதி வரின் அடக் குதல்ச கித்தல்.

பொருள்:

சமாதி என்றாறு கூட்டம் = சமாதி ஷட்க ஸம்பந்தி:
சமம் தமம் விடல் சகித்தல் சமாதானம் சிரத்தை ஆறாம்,
(அவற்றுள்,)

சமம் = அகக்கரண தண்டம் = மன அடக்கம்,

தமம் = புறக்கரண தண்டம் = புலனடக்கம்,

அமர்தரு கருமம் பற்றாது அறுத்தலே விடல் என்றாகும் = விடல் என்பது ( பிறப்பு, இறப்பு) துன்பத்தைத் தருகின்ற செயல்கள் அனைத்தையும் பற்றுதல் இல்லாது விட்டுவிடுதல் ஆகும்.

மமர் செயும் காமம் ஆதி வரின் அடக்குதல் சகித்தல் =  
மயக்கத்தைத் தருகின்ற ஆசை முதலானவை மனதில் தோன்றுகின்ற பொழுது அடக்கிக் கொள்ளுதல் ஸகித்தல் ஆகும். 


சமம் = அகக்கரண தண்டம் = மனவடக்கம்.
அகக்கரணம் = மனம்
தண்டம் = தண்டித்தல் கட்டுப்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் அடக்குதல் அறிவின் உதவியால் அடங்கச் செய்தல் = அடக்கம்.  
மனம் பொய்யென்று - நிலையற்றவையென்று - நிச்சயித்த உலக விஷயங்களை நோக்கிச் செல்லாது கட்டுப்படுத்துதல்.

தமம் = புறக்கரண தண்டம் = புலனடக்கம். 
புறக்கரணங்கள் = ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள்.
சப்தம் முதலான உலக விஷயங்களைச் நோக்கிச் செல்லாமல் உலக விஷயங்களில் உள்ள குறைபாடுகளைச் சிந்தித்து மனதால் கட்டுப்படுத்துதல். அடங்கச் செய்தல்.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.

விடல் = உபரதி = நிலையற்ற உலகப் பொருட்களின் (மண், பெண், பொன்) மேல் உள்ளஆசைகளை விட்டுவிடுதல். தியாகம் செய்தல். முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்துதல்.

த்யாகேநைகே அம்ருதத்வம் ஆநசுஹு:, தேந த்யக்தேந புஞ்ஜீதா:
அவா அறுத்தல் - திருக்குறள்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து.

சகித்தல் = திதிக்ஷா = சகித்துக் கொள்ளுதல் பொறுத்கொள்ளுதல் ஏற்றுக் கொள்ளுதல். குளிர் வெப்பம், இன்பதுன்பம் முதலான இருமைகளை சகித்துக் கொள்ளுதல்.


பாடல் : 3

சிரவணப் பொருளைத் தானே சித்தம் சிந்திக்கு மாறு,
சரதமா வைக்கும் இத்தைச் சமாதானம் என்பர் மேலோர்,
பரமசற் குருநூல்  அன்பு பற்றலே சிரத்தை யாகும்,
வரமிகு சமாதி ஆறு வகையின்சொற் பொருள் இதாமே.

பொருள்:

சித்தம் = மனமானது,

சிரவணப் பொருளைத் தானே சிந்திக்குமாறு = குருவிடமிருந்து கேட்ட அறிவு நூல்களை ஒருமுகப்பட்டு சிந்திக்கும் படியாக,

சரதமா வைக்கும் இத்தை = உள்ளவாறு மனதில் வைத்துக் கொள்ளும் இதை,

சமாதானம் என்பர் மேலோர் = சமாதானம் என்று பெரியோர் சொல்லுவர்.

பரம சத்குரு நூல் அன்பு பற்றலே சிரத்தை ஆகும் = மேன்மையான சத்குருவாலும் சாஸ்த்ரங்களாலும் கேட்ட வாக்கியங்களில் இவை உண்மை என்று நிச்சயமான நம்பிக்கை வைத்தலே சிரத்தை ஆகும்.

வரமிகு சமாதி ஆறு வகையில் சொற்பொருளி தாமே = சிறப்புப் பொருந்திய சமம் முதலான ஆறு சொற்களின் பொருள் இவையே ஆகும்.


பாடல் : 4

சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை,
ஆதலால் இந்த நான்கும் அடைந்தவர்க்கு அறிவுண்டாகும்,
நூதன விவேகி உள்ளம் நுழையாது நுழையுமாகில்,
பூதசன்மங்கள் கோடி புனிதன்ஆம் புருடன் ஆமே!

பொருள்:

சாதனம் இன்றி = தகுந்த கருவிகள் இல்லாமல்,

ஒன்றைச் சாதிப்பார் = ஒரு பொருளை அடைவார்,

உலகில் இல்லை = உலகில் ஒருவரும் இல்லை.

ஆதலால் இந்த நான்கும் = ஆகவே இந்த நான்கு தகுதிகளையும்,

அடைந்தவருக்கு
அறிவு உண்டாகும் = முயற்சியினால் பழகியவருக்கு ஆத்ம ஞானமானது உண்டாகும். 

நூதன விவேகி உள்ளம் நுழையாது = (நீண்ட கால பயிற்சியில் இல்லாமல்) விவேகம் மட்டும் உள்ளவர் மனதில் ஆத்மஞானம் ஆனது ஏற்படாது.

நுழையும் ஆகில் = ஆத்ம ஞானம் உண்டாகி யிருக்கின்றது என்றால்,

பூதசன்மங்கள் கோடி புனிதனாம் புருடன் ஆமே = (அவன்) கடந்த பல பிறவிகளில் ஆன்மீக சாதனைகளைச் செய்து தூய்மையான மனதையுள்ள மனிதனாவான்.


எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பதற்கு உரிய கருவிகள் தேவை. ஞானத்தை அடைவதற்கு உரிய தகுதிகள் தேவை. அதுபோல ஆத்ம ஞானத்தை அடைவதற்கு மேற்சொன்ன ஸாதன சதுஷ்டயம் எனப்படும் நான்கு தகுதிகளும் ஆன்மீக ஸாதகனுக்குத் தேவை. இந்த பிறவியில் ஒருவன் செய்யவில்லை என்றாலும் முற்பிறவியில் ஒருவன் செய்திருந்தானே என்றால், அதன் தொடர்ச்சியாக இந்த பிறவியில் ஆத்ம ஞானம் விரைவில் (இளம் வயதிலேயே) ஏற்படும்.

பாடல் : 5

இவன் அதி காரி ஆனோன் இந்திரி யங்க ளாலும், 
புவனதெய் வங்க ளாலும் பூதபௌ திகங்க ளாலும், 
தவனம்மூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்,
பவம்அறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறி னானே.

பொருள்:
இவன் அதிகாரி ஆனோன் = மேற்கண்ட நான்கு தகுதிகளையும் உடையவனே இந்த தத்துவ சாஸ்திரத்தைப் படிப்பதற்கு தகுதி உடையவன் ஆகிறான்.
இந்திரியங்களாலும் =
புலன்களாலும் (அத்யாத்மத்தினாலும்),
புவன தெய்வங்களாலும் = இயற்கை விதிகளாலும் (ஆதிதைவிகத்தினாலும்),
பூதபௌ திகங்க ளாலும் = மற்ற புறக்காரணங்களாலும் (ஆதிபௌதிகத்தினாலும்)
தவனம் மூன்று அடைந்து = உண்டாகும் மூன்றுவிதமான துன்ப வெப்பத்தை அடைந்து,
வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பி = 
வெயிலின் வெப்பத்தைத் தாங்கமுடியாத புழுவைப்போலத் துடித்து,
பவம்அறு ஞான தீர்த்தம் = பிறவியைப் போக்கும் ஞானமாகிய புனித நீரில்,
படிந்திடப் பதறினானே = மூழ்கித் தணிக்க விரைந்தான். 

விளக்கம்:
இவன் அதிகாரி = ஸாதன சதுஷ்டய ஸம்பத்தி எனும் நான்கு தகுதிகளையும் உடையவனே ஆத்மஞானத்திற்கு உரியவன். வர்ண, ஆச்ரம தகுதிகள் முக்கியமல்ல.

இந்திரியங்களாலும் = வியாதி, பசி, மனக்கவலை,  அறியாமை போன்றவற்றால் (அத்யாத்மம்) உண்டாகும் துன்பம் - ஆத்யாத்மிகம்.

புவன தெய்வங்களாலும் = மழை வெயில் புயல் பூகம்பம் போன்ற மனித சக்திக்கு மீறிய இயற்கை சக்திகளால் (அதிதைவம்)  உண்டாகும் துன்பம் - ஆதிதைவிகம்.

பூதபௌதிகங்களாலும் = பிற மனிதர்கள், உயிரினங்களால் (அதிபூதம்) உண்டாகும் துன்பம் -
ஆதிபௌதிகம்.

வெயில் சகித்திடாப் புழு = உத்தமோத்தம அதிகாரி.
மந்தன், மத்யமன், உத்தமன், உத்தமோத்தமன்.
(எ-கா)எருமை, பறவைக் குஞ்சு, நீர்ப்பாம்பு, புழு.

பவமறு ஞான தீர்த்தம் = பிறவிக்குக் காரணம் அஜ்ஞானம். ஆகவே பிறவியை அறுப்பது ஞானம். ஸம்ஸாரம் (பிறப்பு இறப்புச் சுழல்), தவனம் (தாபம்) என்று சொல்லப்பட்டதால், ஞானம் தீர்த்தம் என்று சொல்லப்பட்டது.

படிந்திட = அனுபவம் ஆகுமாறு - வாழ்க்கை ஆகுமாறு.

பதறினான் = பிறவி எதனால் வந்தது? எவ்வாறு நீங்கும்? அதை நீக்கும் உபாயத்தை உபதேசிக்கும் குரு யார்? எங்கு உள்ளார்? என்ற தீவிர தேடல்.


பாடல் : 6

ஆனபின் மனைவி மக்கள் அர்த்தஏ டணைகள் மூன்றில்,
 கானவர் வலையில் பட்டுக் கைதப்பி ஓடும் மான் போல்,
 போனவன் வெறுங்கை யோடே போகாத வண்ணம் சென்று, 
ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே!

பொருள்:
ஆனபின் = இவ்வாறான மோக்ஷவிருப்பத்தின் பிறகு,

மனைவி மக்கள்
அர்த்த ஏடணைகள் மூன்றில் = மனைவி, குழந்தைகள், செல்வம் ஆகிய மூன்று பற்றுக்களில் இருந்து,

கானவர் வலையில் பட்டுக் கைதப்பி ஓடும் மான் போல் = வேடர்களின் வலையில் சிக்கிப் பின்னர் தப்பித்து ஓடுகின்ற மானைப் போல,

போனவன் = விரைந்து போனவன்,

வெறுங்கையோடே போகாத வண்ணம் சென்று = வெறுங்கையுடன் செல்லாமல் முறைப்படி சென்று,

ஞான சற்குருவைக் கண்டு = ஞானத்தை உபதேசிக்கின்ற ஸத்குருவை அணுகி,

நன்றாக வணங்கி னானே = நன்றாக விழுந்து வணங்கினான்.

விளக்கம்:
அர்த்த ஏடணைகள் மூன்று = ஏஷணாத்ரயம்.
(லோகேஷணா, புத்ரேஷணா, வித்தேஷணா) 
புகழ், உறவுகள், செல்வம் இவற்றில் உள்ள அளவு கடந்த பற்றுதல். அதனால் ஏற்பட்ட துன்பத்தினால் வைராக்கியம் ஏற்பட்டு…

மான் போல = உயிரை காப்பாற்றிக் கொண்ட விரைந்து ஓடுகின்ற மானைப் போல..

- தேந த்யக்தேந புஞ்ஜீதா: - ஈஷாவாஸ்யம். 

உலகத்திற்காக குடும்பத்திற்காக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவன் இதற்கு முடிவு இல்லை என்று கண்டு, தன் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் செய்து மோக்ஷத்தை அடைய வழியைத் தேடுதல்.

வெறுங்கையோடு போகாத வண்ணம் = ஸமித் பாணி: - கையில் சமித்துக் குச்சியுடன் சென்று,
யாகத்திற்குப் பயன்படும் மரத்திலிருந்து தானே விழுந்த உலர்ந்த குச்சி.
இது வைராக்கியத்தை உணர்த்துவது.

அல்லது பழம், பூக்களோடு செல்லுதல்.

குழந்தை, தெய்வம், குரு இவர்களை பார்க்கச் செல்லுகின்ற பொழுது வெறுங்கையோடு செல்லக் கூடாது என்பது தர்ம சாஸ்திரம்.

ஞான சத்குரு = சம்சாரத்தை போக்குகின்ற ஆத்ம ஞானத்தை உபதேசிக்கின்ற ஆசாரத்தோடு ஆநந்தமாக வாழ்கின்ற ஆசை இல்லாத குரு. 

நன்றாக வணங்கினான் = "உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்தேன்" என்று முக்கரணங்களாலும் குரு மகிழும் விதமாக அர்ச்சித்து வணங்கினான்.


பாடல் 7

வணங்கிநின் றழுது சொல்வான் மாயவாழ் வெனும்சோ கத்தால்,
உணங்கினேன் ஐய னேஎன் உள்ளமே குளிரும் வண்ணம், 
பிணங்கிய கோச பாசப் பின்னலைச் சின்னம் ஆக்கி,
இணங்கிய குருவே என்னை இரட்சித்தல் வேண்டும் என்றான்.

பொருள்:
வணங்கி நின்று அழுது சொல்வான் = குருவைப் பணிவுடன் வணங்கி, கைகூப்பி நின்று, துக்கத்துடன் பின்வருமாறு சொன்னான். 
மாயவாழ்வு எனும் சோகத்தால் உணங்கினேன் =  பொய்யான உலக வாழ்க்கை என்னும் துன்பத்தால் வாடி வதங்கினேன்.
ஐயனே = தந்தையே!
என் உள்ளமே குளிரும் வண்ணம் = என் மனமானது அமைதி அடையுமாறு,
பிணங்கிய கோச பாசப் பின்னலைச் = ஒன்றோடு ஒன்று நெருங்கி இருக்கின்ற உடல் முதலான பாசவலையை
சின்னம் ஆக்கி = அறுத்தெறிந்து
இணங்கிய குருவே = கருணை பொருந்திய குருநாதா!
என்னை இரட்சித்தல் வேண்டும் = என்னை காத்தருள வேண்டும்
என்றான் = என்று வேண்டினான்.

விளக்கம்:
சின்னம் ஆக்கி ரக்ஷித்தல் வேண்டும் என்று கூட்டுக.

மாய வாழ்வு எனும் சோகத்தால் = நிலையற்ற பொய்யான வாழ்க்கையினால் ஏற்பட்ட மனவருத்தத்தினால்..

உள்ளமே குளிரும் வண்ணம் =  துக்கம் உள்ளது மனதில், ஆகவே துக்க நிவர்த்தியும் மனதிலேயே.

கோஶ பாசப் பின்னல் = உடல், புலன்கள், மனம், அறிவு, அறியாமை, இவைகளின்மேலுள்ள பற்றினால் ஏற்பட்ட பாச வலை. ஏஷணாத்ரயம் = ஏடணைகள் மூன்று - ஏஷணாத்ரயம். WWW - உலகம் தழுவிய வலை
(லோகேஷணா புத்ரேஷணா, வித்தேஷணா) 
www = World Wife Wealth.

பாடல் 8

அன்னதன் சிசுவை ஐயன் ஆமை மீன் பறவை போலத், 
தன்னகம் கருதி நோக்கித் தடவிச்சந் நிதிஇ ருத்தி, 
உன்னது பிறவி மாற்றும் உபாயம்ஒன் றுண்டு சொல்வேன்,
சொன்னது கேட்பா யாகில் தொடர்பவம் தொலையும் என்றான். 

பொருள் :
அன்ன = இவ்வாறு தாங்கமுடியாத துன்பத்துடன் வணங்கிப் பிரார்த்தித்து, 

தன் சிசுவை ஐயன் = தன்னை சரணடைந்து நிற்கின்ற சீடனைப் பார்த்து குருவானவர்,

ஆமை போல = ஆமையானது கரையில் இருக்கின்ற தன் முட்டைகளை மனதில் நினைப்பது போல

தன்னகம் கருதி = தன் மனதில் இவன் துன்பத்தை போக்க வேண்டும் என்று நினைத்து,

மீன் போல = மீனானது தன் சினையைப் பார்ப்பது போல, நோக்கி = கருணையோடு பார்த்து,

பறவை போல = பறவையானது தன் சிறகினால் முட்டையை தழுவுவது போல,    

தடவி = தலையில் கைகளை வைத்து ஆசீர்வதித்து,

சந்நிதி இருத்தி = அருகில் அமரச்செய்து,

உன்னது பிறவி மாற்றும் = தொடர்ந்து வரும் உனது பிறவியைப் போக்குகின்ற,

உபாயம் ஒன்று உண்டு = வழி ஒன்று உண்டு,

சொல்வேன் = அதை நான் உனக்கு உபதேசிக்கிறேன்,

சொன்னது கேட்பா யாகில் = நான் சொல்வதைக் கவனமாக கேட்டு பின்பற்றுவாயானால்,

தொடர்பவம் தொலையும் என்றார் =  அனாதிகாலமாய் தொடர்ந்து வருகின்ற பிறவியானது அழிந்துபோகும் என்று சொன்னார்.

சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை


பாடல் : 9 

தொடர்பவம் தொலையுமென்று சொன்னதைக் கேட்ட போதே,
 தடமடு மூழ்கி னான்போல் சரீரமும் குளிர்ந்துள் ளாறி,
அடருமன் பொழுகு மாபோல் ஆநந்த பாஷ்பம் காட்டி, 
மடல்மலர்ப் பாதம் மீண்டும் வணங்கிநின் றீது சொல்வான். 

பொருள் :
தொடர்பவம் தொலையுமென்று = அனாதி காலமாய் தொடர்ந்து வருகின்ற பிறவியானது நீங்கும் என்று,

சொன்னதைக் கேட்ட போதே = குரு அருளியதைக் கேட்டவுடனே, 

தடமடு மூழ்கி னான்போல் = (வெயிலால் வெப்பத்தையடைந்து வாடியவன்) பரந்த மடுவில் மூழ்கினதைப்போல,

உள் ஆறி = மன வெப்பம் தணிந்து, 

சரீரமும் குளிர்ந்து = உடலும் குளிர்ச்சி அடைந்து,

அடருமன் பொழுகு மாபோல் = மனதில் அடர்ந்த அன்பு புறத்தில் பொங்கி வழியுமாறு போல, 

ஆநந்த பாஷ்பம் காட்டி = கண்களில் ஆனந்தக்கண்ணீர் காட்டி,

மடல்மலர்ப் பாதம் = குருவின் தாமரை மலர் போன்ற திருவடிகளை,

மீண்டும் வணங்கி நின்று = மீண்டும் ஒரு முறை விழுந்து வணங்கி கரம் கூப்பி நின்று,

ஈது சொல்வான் = இவ்வாறு வேண்டினான்.


பாடல் : 10

சொன்னது கேட்க மாட்டாத் தொண்டன் ஆனாலும் சுவாமி, 
நின்னது கருணை யாலே நீரெனை ஆளலாமே,
 உன்னது பிறவி மாற்றும் உபாயமொன் றுண்டென் றீரே,
 இன்னதென் றதைநீர் காட்டி ஈடேற்றல் வேண்டும் என்றான். 

பொருள்:
சொன்னது கேட்க மாட்டா = தாங்கள் சொன்னபடி கேட்டு
தவறாமல் நடக்கமாட்டாத,

தொண்டன் ஆனாலும் = பக்குவம் குறைவாக இருக்கின்ற சிஷ்யனாக இருந்தாலும், 

சுவாமி, நின்னது கருணையாலே = குருவே உங்களது பேரருளால்,

நீரெனை ஆளலாமே = நீங்கள் என்னை பக்குவ படுத்தலாம்,

உன்னது பிறவி மாற்றும் = உன்னுடைய பிறவியைப் போக்கும், 

உபாயம் ஒன்று உண்டு என்றீரே = வழி இருக்கின்றது என்று சொன்னீரே,

இன்னதென்று அதைநீர் காட்டி = இப்படிப்பட்டதென்று அதை தாங்கள் உபதேசித்து,

ஈடேற்றல் வேண்டும் = என்னைப் பிறவியிலிருந்து விடுவிக்க வேண்டும், என்றான் = என்று வேண்டினான்.


பாடல் : 11


அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்த மண்ணின்,

குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத்,

தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி,

உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே.


பொருள்:

அடங்கிய விருத்தி யான் என்று =  அகங்கார எண்ணமில்லாதவன் இவன் என்று,


அறிந்தபின் = அறிந்து கொண்ட பின்னர்,


செறிந்த மண்ணின் குடம்பையுள் புழுமுன் =

நெருங்கிய மண் கூட்டின் உள்ளே உள்ள

புழுவுக்கு முன்னே,


ஊதும் குளவியின் கொள்கை போல = சப்தமிடும் குளவியின் திட்டம் போல,


தொடங்கிய குருவும் = (ஸங்கல்பம் முதலான தீக்ஷை வழங்கி) அருள்புரிந்து தொடங்கிய குருநாதரும்,


ஆன்ம சொரூபமே மருவ வேண்டி = அவன் தன்னுடைய உண்மை வடிவத்தை உள்ளவாறு அறிந்துக் கொள்ளுவதற்காக,


உடம்பினுள் சீவனைப்பார்த்து = அவன் உடம்பின் உள்ளே உள்ள ஜீவனைப் பார்த்து


உபதேசம் ஓதுவாரே = உபதேசிக்கத் தொடங்கினார்.


குளவியின் கொள்கை போல : குளவியானது புழுவைக் கொட்டி பார்த்து மிக துடிப்பதையும் ( அதிக ரஜஸ்) துடியாமல் கிடப்பதையும் (அதிக தமஸ்) ஒழித்து மத்திய துடிப்புடையதை (ஸத்த்வம் மேலோங்கி இருத்தல்) எடுப்பதுபோல குருவும் சீடனின் இயற்கை குணம் சோதித்து உபதேசிக்க தொடங்கினார்.


ஜீவனைப் பார்த்து: பந்தம் உடையவன் ஜீவனே.



பாடல் : 12


வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து,

தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப்,

பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம்,

ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந் தானே.


பொருள்:


வாராய் என் மகனே = சீடனே, கவனமாகக் கேள்,


தன்னை மறந்தவன் = (வாஸ்தவமாக தான் ஆத்ம ஸ்வரூபமாக இருந்தாலும்) தான் யார் என்று தன்னை அறியாமல் மறந்தவன்,


பிறந்து இறந்து = பல உடல்களில் பலமுறை பிறந்து இறந்து,


தீராத சுழற்காற்று உற்ற செத்தைபோல் = முடிவில்லாத சுழல் காற்றில் அகப்பட்ட கூளம் போல,


சுற்றிச் சுற்றி = மேல்கீழ் உலகங்களுக்கு செல்வதும் வருவதுமாய் சுற்றிச் சுற்றி,


பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் = அழிவில்லாத காலச்சக்கரத்தில் மயங்கி சுற்றித்திரிபவன்,


போதம் ஆராயும் தன்னை = அறிவினால் ஆராய்ந்து அறியத்தக்க தன்னை,


தான் என்று = நான் பிரம்மம் என்று


அறியும் அவ்வளவும் தானே = அறியும் வரையும் தான் ஸம்ஸாரபந்தம்.


ஸம்ஸார காரணம் - தன்னை மறந்தது.

மோக்ஷ காரணம் - தன்னை அறிவது.


பாடல் : 11

அடங்கிய விருத்தி யானென்று அறிந்தபின் செறிந்த மண்ணின்,

குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத்,

தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி, 

உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே.


பொருள்:

அடங்கிய விருத்தி யான் என்று =  அகங்கார எண்ணமில்லாதவன் இவன் என்று,


அறிந்தபின் = அறிந்து கொண்ட பின்னர்,


செறிந்த மண்ணின் குடம்பையுள் புழுமுன் = நெருங்கிய மண் கூட்டின் உள்ளே உள்ள புழுவுக்கு முன்னே,


ஊதும் குளவியின் கொள்கை போல = சப்தமிடும் குளவியின் திட்டம் போல,


தொடங்கிய குருவும் = (ஸங்கல்பம் முதலான தீக்ஷை வழங்கி) அருள்புரிந்து தொடங்கிய குருநாதரும்


ஆன்ம சொரூபமே மருவ வேண்டி = அவன் தன்னுடைய உண்மை வடிவத்தை உள்ளவாறு அறிந்துக் கொள்ளுவதற்காக,


உடம்பினுள் சீவனைப்பார்த்து = அவன் உடம்பின் உள்ளே உள்ள ஜீவனைப் பார்த்து


உபதேசம் ஓதுவாரே = உபதேசிக்கத் தொடங்கினார்.


குளவியின் கொள்கை போல : குளவியானது புழுவைக் கொட்டி பார்த்து மிக துடிப்பதையும் ( அதிக ரஜஸ்) துடியாமல் கிடப்பதையும் (அதிக தமஸ்) ஒழித்து மத்திய துடிப்புடையதை (ஸத்த்வம் மேலோங்கி இருத்தல்) எடுப்பதுபோல குருவும் சீடனின் இயற்கை குணம் சோதித்து உபதேசிக்க தொடங்கினார்.


ஜீவனைப் பார்த்து: பந்தம் உடையவன் ஜீவனே



பாடல் : 12


வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து,

தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப், 

பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம், 

ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந் தானே. 


பொருள்:


வாராய் என் மகனே = சீடனே, கவனமாகக் கேள்,


தன்னை மறந்தவன் = (வாஸ்தவமாக தான் ஆத்ம ஸ்வரூபமாக இருந்தாலும்) தான் யார் என்று தன்னை அறியாமல் மறந்தவன், 


பிறந்து இறந்து = பல உடல்களில் பலமுறை பிறந்து இறந்து,


தீராத சுழற்காற்று உற்ற செத்தைபோல் = முடிவில்லாத சுழல் காற்றில் அகப்பட்ட கூளம் போல,


சுற்றிச் சுற்றி = மேல்கீழ் உலகங்களுக்கு செல்வதும் வருவதுமாய் சுற்றிச் சுற்றி


பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் = அழிவில்லாத காலச்சக்கரத்தில் மயங்கி சுற்றித்திரிபவன், 


போதம் ஆராயும் தன்னை = அறிவினால் ஆராய்ந்து அறியத்தக்க தன்னை, 

தான் என்று = நான் பிரம்மம் என்று


அறியும் அவ்வளவும் தானே = அறியும் வரையும் தான் ஸம்ஸாரபந்தம்.


ஸம்ஸார காரணம் - தன்னை மறந்தது.


மோக்ஷ காரணம் - தன்னை அறிவது.


ஆன்மீக அறிவியல் - Spiritual Science

பள்ளியில் ஒரு பாடமாக இருக்க வேண்டியது.

தர்சனங்கள் - மெய்ப்பொருளை அறிந்துகொள்ள உதவும் தத்துவங்கள். ஆஸ்திக தரிசனங்கள் ஆறு : ஸாங்க்யம், யோகம் நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை (அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம்)

நாஸ்திக தரிசனங்கள் ஆறு : பௌத்தம் 4, சமணம், லோகாயதம்.)


சிருஷ்டி எப்படி வந்தது? 

பந்தம் என்றால் என்ன ?

மோக்ஷம் என்றால் என்ன?

(பந்த காரணம் & மோக்ஷ காரணம்)



பாடல் : 13


தன்னையும் தனக்கா தாரத் தலைவனை யும்கண் டானேல், 

பின்னையத் தலைவன் தானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்,

உன்னைநீ அறிந்தா யாகில் உனக்கொரு கேடும் இல்லை, 

என்னைநீ கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே.


பொருள்:


தன்னையும் = ஜீவனாகிய தான் யார் என்பதையும், (அல்லது அஹங்காரமாகிய தன்னையும் - பிரதிபிம்ப சைதந்யம்)


தனக்கு ஆதாரத் தலைவனையும் = தனக்கு ஆதாரமாக இருக்கின்ற ஈச்வரனையும், (அல்லது அஹங்காரத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற ஆத்மாவையும் (பிம்ப சைதந்யம்)


கண்டானேல் = இதன் சொரூபம் இன்னது என்று அறிந்தானேயாகில்,


பின்னை அத்தலைவன் தானாய்ப் = பிறகு அந்த பிரம்மமே ( ஆத்மாவே) தான் என்று


பிரமமாய் = பிரம்மமாய் (ஆத்மாவாய்) இருந்து,


பிறப்புத் தீர்வன் = பிறவியிலிருந்து விடுபடுவான்.


உன்னை நீ அறிந்தாயாகில் = உன்னை நீ (உனது யதார்த்த சொரூபமான பிரம்மம் என்று) அறிந்தால்,


உனக்கொரு கேடும் இல்லை = (அதன்பிறகு) உனக்கொரு துன்பமும் இல்லை.


என்னை நீ கேட்கையாலே = என்னை நீ ச்ரத்தையுடன் கேட்டதனால்


ஈது உபதேசித்தேனே = மிகரகசியமான இதனை உனக்கு உபதேசித்தேன்.


தன்னையும் தனக்கு ஆதாரத் தலைவனையும் அறிந்தாயாகில் = நான்யார்? உடலா? மனமா? அறிவா? அகங்காரமா? இவை அனைத்துமா? இல்லை இதற்கும் மேலாக, வேறாக ஏதாவது இருக்கின்றதா?


உலகம் என்பது என்ன? எப்படி வந்தது?  

தானாகத் தோன்றியதா? அல்லது தோற்றுவிக்கப்பட்டதா?


தோற்றுவித்தவர் இருக்கிறாரா? எப்படி இருக்கிறார்?


சாஸ்திரம் சொல்லுவது.. உடம்பிற்கு வேறாக ஆத்மா இருக்கின்றது. 

உலகம் படைக்கப்பட்டது, படைத்தவர் இறைவன்.

இறைவனே ஒவ்வொரு உடலிலும் ஆத்மாவாக இருக்கின்றார்.


தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் 

- திருமந்திரம்.


மெய்ப்பொருள் காண்பது அறிவு!

கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி!

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா பேர்த்துள்ள வேண்டா பிறப்பு! பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு!

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்!

  • திருக்குறள்.


என்னை நீ கேட்கையாலே = பக்தி சிரத்தையுடன் கேட்பவர்களுக்கு தான் இதை சொல்ல வேண்டும் என்பது கருத்து.



பாடல் :14


என்னைத்தான் சடனா உள்ளத் தெண்ணியோ சொன்னீர் ஐயா,

தன்னைத்தான் அறியா மாந்தர் தரணியில் ஒருவர் உண்டோ,

பின்னைத்தான் அவர்கள் எல்லாம் பிறந்திறந் துழலு வானேன்,

நின்னைத்தான் நம்பி னேற்கு நிண்ணயம் அருளு வீரே.


பொருள்:


ஐயா = ஸத்குருவே,


என்னைத்தான் சடனா = என்னைத்தான் மூடன் என்று, 


உள்ளத்து எண்ணியோ சொன்னீர் = மனதில் நினைத்தா இவ்வாறு (உன்னை நீ அறிந்தாயாகில்…) சொன்னீர்கள்.


தன்னைத்தான் அறியா மாந்தர் = தன்னை யார் என்று அறியாத மனிதன்,


தரணியில் ஒருவர் உண்டோ = பூமியில் ஒருவர் உண்டா? (இல்லை).


பின்னைத்தான் அவர்கள் எல்லாம் = பின்னர் அவர்கள் அனைவரும்,

பிறந்து இறந்து உழலுவான் ஏன் = மீண்டும் மீண்டும் பிறவியை அடைந்து துன்பப்படுவது எதனால்?


நின்னைத்தான் நம்பி னேற்கு = உங்களையே நம்பி சரணாகதி அடைந்து இருக்கும் எனக்கு


நிண்ணயம் அருளுவீரே = உண்மையை உறுதிப்பட உபதேசிப்பீராக.


உன்னையறிந்தால் பிறவி இல்லை - குரு சொன்னது.

தன்னை அறியாதவர் யாருமில்லை - ஆனால் அனைவரும் பிறப்பு இறப்பில் உள்ளார், ஏன்?



பாடல் :15


இன்னது தேகம் தேகி இவன் என உணர்வான் யாவன்,

அன்னவன் தன்னைத் தான் என் றறிந்தவன் ஆகும் என்றார்,

சொன்னபின் தேகி யார்இத் தூலம் அல்லாமல் என்றான்,

பின்னது கேட்ட ஐயர் பீழையும் நகையும் கொண்டார்.


பொருள்:


இன்னது தேகம் = இது என்று அறியப்படுவதாக இருப்பது உடல் (அநாத்மா),


தேகி இவன் = இது உடல் என்று அறிபவன் (ஆத்மா),

என உணர்வான் யாவன் = என்று (அநாத்மாவையும் ஆத்மாவையும் வேறுபடுத்தி) அறிபவன் எவனோ,


அன்னவன் = அவனே


தன்னைத் தான் என்று = தனது உண்மையான சொரூபத்தை நான் என்று,


அறிந்தவன் ஆகும் என்றார் = உண்மையில் தன்னை அறிந்தவன் ஆவான் என்று சொன்னார்,


சொன்னபின் = அவ்வாறு குரு சொன்ன உடனே,


தேகி யார் இத் தூலம் அல்லாமல் = இந்தத் தூல உடல் அல்லாமல், வேறே தேகத்தை உடையவன் என்று யார் இருக்கின்றார்? என்று சீடன் கேட்டான்.


பின் அது கேட்ட ஐயர் = அதைக்கேட்ட பின்னர் குருவானவர், 


பீழையும் நகையும் கொண்டார் = வருத்தமும் மகிழ்ச்சியும் அடைந்தார்.


விளக்கம்:


இன்னது தேகம் தேகி இவன்

    அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே. இது என்று அறியப்படுவது உடல். உடல் ஜடமானது. உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா.


பீழையும் நகையும் கொண்டார்

பீழை = வருத்தம் தேகத்திற்கு வேறாக தேகியில்லை என்ற அறியாமையை கண்டு வருந்தினார் இரக்கத்தினால். 


நகை = அதை நீக்குவதற்கு அநேக ச்ருதி, யுக்திகள் உளளன என்று புன்னகைத்தார்.


பாடல் :16


தேகம் அல்லாமல் வேறே தேகியார் காணேன் என்றாய்,

மோகமாம் கனவில் வந்து முளைத்தவன் எவன்நீ சொல்வாய்,

சோகமாம் கனவு தோன்றாச் சுழுத்திகண் டவன் ஆர் சொல்வாய்,

ஆகநீ நனவில் எண்ணும் அறிவு தான் ஏது சொல்வாய்.


தேகம் அல்லாமல் = இந்த பருவுடல் இல்லாமல்,

வேறே தேகியார் = உடலுக்கு வேறாக உடலை உடையவன் என்று யார் இருக்கிறார்? (இல்லை),

காணேன் என்றாய் = அப்படி யாரையும் நான் காணவில்லை என்று சொன்னாய்,

மோகமாம் கனவில் வந்து = உலகை அறியாத மயக்கமாகிய கனவில் வந்து,

முளைத்தவன் எவன்நீ சொல்வாய் = கனவைக் காண்பவனாக விளங்கிக்கொண்டிருப்பவன் யார் என்று நீ சொல்வாய்?

சோகமாம் கனவு தோன்றா = சுக துக்கத்தை தரும் கனவும் தோன்றாத,

சுழுத்தி கண்டவன் ஆர் சொல்வாய் ஆக = ஆழ்ந்த உறக்கமாகிய சுசுப்தி நிலையில் அதையும் காண்பவனாக விளங்கிக் கொண்டிருப்பவன் யார் என்று நீ சொல்வாயாக,

 நீ நனவில் எண்ணும் = விழிப்பு நிலையில் நான் நானென்று நீ நினைக்கும்,

அறிவு தான் ஏது சொல்வாய் = அனைத்தையும் அறிகின்ற அறிவுதான் எது என்று சொல்வாய்?


பாடல் :17

நனவுகண் டதும்நான் கண்ட நனவுள நினைவு நீங்கிக், 

கனவுகண் டதும்சு ழுத்தி கண்டதும் வேறொன் றேபோல்,

தினம் அனுபவிப்பது ஒக்கும் தெரியவும் இல்லை சற்றே,

மனதினில் உதிக்கும் பின்னே மறைக்கும தருளு வீரே. 


பொருள்:

நனவுகண் டதும் = விழிப்பு நிலையை அனுபவித்ததும்,

நான் கண்ட நனவுள நினைவு நீங்கி = நான் அனுபவித்த விழிப்பு நிலையின் நினைவுகள் நீங்கி,

கனவுகண் டதும் = கனவு நிலையை அனுபவித்ததும்,

சுழுத்தி கண்டதும் = ஆழ்ந்த உறக்க நிலையை அனுபவித்ததும்,

வேறொன் றேபோல் = தூலஉடம்பிற்கு வேறான ஒன்று போல்,

தினம் அனுபவிப்பது ஒக்கும் = தினம் அனுபவத்தில் இருப்பது ஒவ்வும் (நீங்கள் சொல்வதற்குப் பொருந்துகிறது). 

தெரியவும் இல்லை = (ஆனால்) அது என்னவென்று (தெளிவாகத்) தெரியவில்லை,

சற்றே மனதினில் உதிக்கும் = (தங்கள் உபதேசத்தைக் கேட்கின்ற பொழுது) உடலுக்கு வேராக ஒன்று இருப்பது போல் மனதிற்கு தெரிகின்றது,

பின்னே மறைக்கும் = பின்னர் அவ்வறிவு மறைந்துவிடுகிறது,

அது அருளுவீரே = அதை (இதைப் பற்றிய உண்மையை அடியேன் தெளிவாக அறிந்து கொள்ளுமாறு) உபதேசிப்பீராக!


பாடல் : 18


தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல்,

ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டு வார்போல்,

தூலத்தை முன்பு காட்டிச் சூக்கும சொரூபம் ஆன,

மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி னாரே.


பொருள்:

தாலத்தின் மரங்கள் காட்டி = பூமியிலுள்ள மரத்தின் கிளையை (முதலில்) காட்டி,

தனிப்பிறை காட்டு வார்போல் = (பின்னர் அதன் அருகிலுள்ள) மூன்றாம் பிறையைக் காட்டுபவரைப் போல,

ஆலத்தின் உடுக்கள் காட்டி = வானத்தில் உள்ள (தூலமான வசிஷ்டர் முதலிய) விண்மீன்களை (முதலில்) காட்டி,

அருந்ததி காட்டு வார்போல் 

= (பின்னர் அதன் அருகிலுள்ள சூட்சுமமான) அருந்ததி நட்சத்திரத்தை காட்டுபவரைப் போல,

தூலத்தை முன்பு காட்டி = தூலமான (உலகம், ஜீவன், ஈஸ்வரன் ஆகியோரின் தோற்றத்தை) முதலில் தெரியச்செய்து, 

சூக்கும சொரூபம் ஆன மூலத்தைப் = சூக்ஷ்ம ஸ்வரூபமான  அனைத்திற்கும் மூலமான பரம்பொருளை (நிர்குண பிரஹ்மத்தை)

பின்பு காட்ட = பின்பு கூற வேண்டும் எனக் கருதி,

முனிவரர் தொடங்கி னாரே = முனிவர்களுள் சிறந்தவரான அக்குருநாதர் (உபதேசிக்கத்) தொடங்கினார்.


தாலத்தின் மரங்கள் காட்டி தனிப்பிறை காட்டுவார் போல் -

ஶாகா சந்த்ர நியாயம்


ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார் போல் -

தூல அருந்ததி நியாயம்.


தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் காட்டுதல்.


காரியமான தெரிந்த உலகத்தைக் கொண்டு காரணமான ஸூக்ஷ்மமான இறைவனை -ப்ரஹ்மத்தை - அறிந்துகொளல். 


(எ - கா)

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.



பாடல் :19

அத்தியா ரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும்,

உத்தியால் பந்தம் வீடு என்றுரைக்கும் வேதாந்தம் எல்லாம்,

மித்தையாம் ஆரோ பத்தால் பந்தமாம் அபவா தத்தால்,

முத்தியாம் இவ்வி ரண்டின் முந்தியா ரோபம் கேளாய்.


பொருள்:

வேதாந்தம் எல்லாம் = வேதாந்த நூல்கள் அனைத்தும்,

அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் = அத்தியாரோபம், அபவாதம் என்று உபதேசிக்கும் முறையால், பந்தம் வீடு என்றுரைக்கும் = பந்தமும் வீடும் (எப்படித் தோன்றுகிறது) என்று கூறுகிறது. 

மித்தையாம் ஆரோபத்தால் பந்தமாம் = பொய்யான கற்பிதத்தால் பந்தம் (பிறவி) உண்டாகின்றது. 

அபவாதத்தால் முத்தியாம் = அபவாதத்தால் (கற்பனையை நீக்குவதால்) முக்தி (பிறவியிலிருந்து விடுதலை) உண்டாகின்றது. 

இவ்வி ரண்டின் = அத்யாரோபம், அபவாதம் என்ற இரண்டில்,

முந்தியாரோபம் கேளாய் = முதலில் ஆரோபம் பற்றி (நான் கூறக் கவனமாகக்) கேட்பாயாக.


பாடல் :20


ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம்,

ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல்,

நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல்,

நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல்.


பொருள்:

ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவ எல்லாம் = ஆரோபம் (அ) அத்தியாசம் (அ) கற்பனை என்று சொல்லப்படுவது,

ஓரோர் வத்துவினில் = ஒவ்வொரு பொருளிலும், வேறே ஓரோர் வத்துவினை ஓர்தல் = அதற்கு வேறான ஒவ்வொரு பொருளை ஏற்றிப் பார்த்தால் ஆகும்.

(அது எப்படி என்றால்)

நாரூடு பணியாய்த் தோன்றல் = கயிறு பாம்பாகத் தெரிதல்,

தறியில் நரனாகித் தோன்றல் = கட்டை மனிதனாகத் தெரிதல்,

கானல் ஊடு நீர் தோன்றல் = கானல் நீராகத் தெரிதல், வெளியில் நிறம் தலம் தோன்றல் = வானம் நிறமுடையதாகவும் நிலமுடையதாகவும் தெரிதல் (போன்றதாகும்).


பாடல் :21

இப்படிப் போன்ற நாம ரூபங்கள் இரண்டும் இன்றி,

ஒப்பமாய் இரண்டற் றொன்றாய் உணர்வொளி நிறைவாய் நிற்கும்,

அப்பிர மத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம்,

செப்புகற் பனையி னாலே செனித்தவென் றறிந்து கொள்ளே.


பொருள்:

இப்படிப் போன்ற = சென்ற பாடலில் சொன்ன ஆரோப உதாரணங்கள் போல,

நாம ரூபங்கள் இரண்டும் இன்றி ஒப்பமாய் = பெயர் வடிவங்கள் இரண்டும் இல்லாமல் சமமாக,

இரண்டற்று ஒன்றாய் = தனக்கு வேறாக இரண்டாவதாக ஒரு பொருள் இல்லாமல் தான் மாத்திரம் ஒன்றாக, 

உணர்வு, ஒளி, நிறைவாய் நிற்கும் அப்பிரமத்தில் = அறிவாய் பிரகாசமாய் எங்கும் நிறைந்ததாய் நிலைமாறாமல் இருக்கும் அந்த ப்ரஹ்மத்தில், 

தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம் = இருப்பதாக தோன்றுகின்ற பஞ்சபூத காரியங்கள் அனைத்தும், செப்பு கற்பனையினாலே = அத்தியாசம் என்று சொல்லப்பட்ட கற்பனையினாலே, 

செனித்தவென்று அறிந்து கொள்ளே = தோன்றியது என்று அறிந்து கொள்வாயாக.


இரண்டற்ற = ஸஜாதீய, விஜாதீய, ஸ்வகத பேதமற்றது. அத்வைதம்

சமமாய் = ஸர்வவ்யாபகமாய்

உணர்வு = ஞானஸ்வரூபம்

ஒளி = ஸ்வயம் ப்ரகாச சைதந்ய ஸ்வரூபம்.

நிறைவு = பூர்ணம்

நிற்கும் = ஸத்வஸ்து.


ஐம்பூத விகாரம் = பஞ்சபூத கார்யம்.


பாடல் : 22

அதுதான் எப் படிஎன் றக்கால் நாதியாம் சீவ ரெல்லாம்,

பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும் அவ் வியத்தம் தன்னில்,

இதுகால தத்து வப்பேர் ஈசன்உட் பார்வை யாலே,

முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தம் ஆமே.


பொருள்:

அதுதான் எப் படிஎன் றக்கால் = கற்பனைதான் எப்படி தோன்றியது என்றால்,

அநாதியாம் சீவ ரெல்லாம் = அனாதியாய் உள்ள உயிரினங்கள் அனைத்தும்,

பொதுவான சுழுத்தி போல = அனைவருக்கும் பொதுவான உறக்கம் போன்ற,

அவ்வியத்தம் தன்னில் = ச்ருஷ்டிக்குமுன் வெளிப்படாமல் இருந்த (அவ்யக்தமான) மாயையிடத்தில்,

பொருந்தும் = கர்ம வாசனையுடன் ஒடுங்கி இருக்கும்.

இது = இந்த (அவ்யக்தமென்ற) மாயையானது,

கால தத்துவப்பேர் ஈசன் உட்பார்வை யாலே = கால தத்துவம் என்ற பெயரை உடைய ஈஶ்வன்ரனுடைய ஸங்கல்பத்தினாலே,

முதுமூல சுபாவம் விட்டு = முன்பிருந்த சமநிலை என்ற தன் இயல்பு மாறி,

முக்குணம் வியத்தம் ஆமே = சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களும் வெளிப்படும்.


பாடல் : 23

உத்தம வெளுப்புச் செம்மை உரைத்திடும் கறுப்பும் ஆகும்,

சத்துவ குணத்தி னோடு ரசோகுணம் தமோகு ணந்தான்,

சுத்தமோ டழுக்கி ருட்டாச் சொல்லுமுக் குணமும் மூன்றாய்,

ஒத்துள வேனும் தம்முள் ஒருகுணம் அதிகம் ஆமே.


பொருள்:

சத்துவ குணத்தினோடு ரசோகுணம் தமோகுணந்தான் = ஸத்வ குணத்துடன் ரஜோ குணமும் தமோ குணமும்,

உத்தம வெளுப்பு, 

செம்மை,

உரைத்திடும் கறுப்பும் ஆகும் = முறையே மேலான வெண்மை, சிவப்பு, கருப்பு என்று சொல்லப்படுவதாகும். 

சுத்தமோடு அழுக்கு இருட்டாச் சொல்லும் முக்குணமும் = தூய்மை, அழுக்கு, இருட்டு என்று சொல்லப்படும் மூன்று குணமும், 

மூன்றாய் ஒத்துளவேனும் = மூன்றும் (ஒன்றை ஒன்று சார்ந்து) சேர்ந்து இருந்தாலும், 

தம்முள் ஒருகுணம் அதிகம் ஆமே = அவற்றுள் ஒரு குணம் மிகுந்தே இருக்கும்.


பாடல்:24

ஒருவழி இதுவாம் இத்தை ஒருவழி வேறாச் சொல்வர்,

மருவும் அவ் வியத்தம் தானே மகத்தத்வம் ஆகும் அந்த,

அருள்மகத் தத்து வந்தான் அகங்காரம் ஆகும் என்றும்,

கரு அகங்காரம் மூன்றாக் காட்டிய குணம் ஆம் என்றும்


பொருள்:

ஒருவழி இதுவாம் = 

உபநிஷத்துக்களில் உலகின் உற்பத்தியைப் பற்றி சொல்வதில் ஒரு முறை இதுவாகும்.

இத்தை ஒருவழி வேறாச் சொல்வர் = இதனை வேறு ஒருவிதமாகவும் (ரிஷிகள்) சொல்வார்கள்.

மருவும் அவ்வியத்தம் தானே மகத்தத்துவம் ஆகும் = (அனாதியான ஜீவர்கள் எல்லாம் கர்ம வாசனைகளோடு) லயமாகி இருக்கின்ற அவ்யக்த தத்துவம் மகத் தத்துவமாக ஆகும்,

அந்த அருள்மகத் தத்து வந்தான் அகங்காரம் ஆகும் என்றும்

= அந்த மகத்தத்துவமே பின்னர் அஹங்கார தத்துவமாக ஆகும் என்றும்,

கரு அகங்காரம் = காரணமான அந்த அகங்கார தத்துவமானது மூன்றாக் காட்டிய குணம் ஆம் என்றும் = முன்னர் ஸத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றாகச் சொல்லிய குணங்கள் ஆகும் என்றும் (சொல்வார்கள்).


மகத்தத்த்வம் = ஸமஸ்டி புத்தி


பாடல் :25

இக்குணங் களிலே விண்போன் றிருக்கும்சிற் சாயை தோன்றும்,

முக்குணங் களினும் தூய்தாம் முதற்குணம் மாயை ஆகும்,

அக்குணப் பிரமச் சாயை அந்தரி யாமி மாயை,

எக்குணங் களும்பற் றாதோன் நிமித்தகா ரணனாம் ஈசன்.


பொருள் :

இக்குணங்களிலே = இந்த மூன்று குணங்களிலே,

விண்போன்று இருக்கும் சிற்சாயை தோன்றும் = ஆகாசம் போல அஸங்கமாய், வியாபகமாய், ஸூக்ஷ்மமாய்) இருக்கும் சித்தின் பிரதிபிம்பம் உண்டாகும்.,

முக்குணங்களினும் தூய்தாம் முதற்குணம் மாயை ஆகும் = மூன்று குணங்களிலும் தூயதாக இருக்கும் முதல் குணமான சத்துவகுணம் மாயை எனப்படும்.

அக்குணப் பிரமச்சாயை அந்தரியாமி = அந்த சத்துவகுணத்தில் ஏற்படும் பிரஹ்மத்தின் பிரதிபிம்பம் அந்தர்யாமி  எனப்படும்.

மாயை எக்குணங்களும் பற்றாதோன் நிமித்த காரணனாம் ஈசன் = (அதுவே) தனக்குச் சரீரமாகிய மாயை மற்றும் அதன் காரியமாகிய ஸர்வஜ்ஞத்துவம் முதலான எக்குணங்களிலும் பற்றில்லாமல் நிமித்த காரணமாக இருக்கின்ற ஈச்வரன் ஆகும்.


பாடல் : 26

ஈசனுக் கிதுசு ழுத்தி இதுவேகா ரணச ரீரம்,

கோசம்ஆ நந்தம் ஆகும் குணம் இராசதம் அ வித்தை,

தேசறும் அவித்தை தோறும் சிற்சாயை சீவ கோடி,

நாசமாம் உயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞன் ஆமே.


பொருள்: 

ஈசனுக்கு இது சுழுத்தி = ஈஸ்வரனுக்கு இதுவே ஆழ்ந்த உறக்க நிலை,

இதுவே காரணசரீரம் = இதுவே காரண சரீரம் ஆகும். 

கோசம் ஆநந்தம் ஆகும் = (பஞ்சகோசங்களில் இது) ஆனந்தமய கோசம் ஆகும். 

குணம் இராசதம் அவித்தை = ராஜச குணம் அவித்தை எனப்படும்.

தேசறும் அவித்தை தோறும் = மலின சத்துவ அவித்தைகள் எல்லாவற்றிலும், 

சிற்சாயை சீவகோடி = சித்தினுடைய பிரதிபிம்பம் ஏற்பட்டு அதுவே கோடிக்கணக்கான ஜீவர்கள் ஆகும்., 

நாசமாம் உயிர்க்களுக்கு அப்போது = அழியக்கூடிய உயிர்களுக்கு அப்போது,

நாமமும் பிராஞ்ஞன் ஆமே = பெயரும் ப்ராஜ்ஞன் ஆகும்.


பாடல் :27

அழுக்கொடு பற்றும் சீவர்க்கு அதுவே ஆநந்த கோசம்,

சுழுத்தி காரணசரீரம் சொன்னதிம் மட்டும் மோகம்,

முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபம் சொன்னோம்,

வழுத்துசூக் குமவா ரோப வழியும்நீ மொழியக் கேளாய்.


பொருள்:

அழுக்கொடு பற்றும் சீவர்க்கு = மலினசத்துவ (ரஜோகுண) அவித்தையோடு பற்றுக் கொள்கின்ற ஜீவர்களுக்கு 

அதுவே ஆநந்த கோசம் = அவ்வவித்தையே ஆனந்தமய கோசம் ஆகும்.

சுழுத்தி காரண சரீரம் = (அவ்வவித்தையே) சுழுத்தி அவஸ்தையும், காரண சரீரமும் ஆகும். இம்மட்டும் சொன்னது = இதுவரையில் கூறியது

முழு மோக இரண்டு குணத்தால் வந்த = முழுமையான  மயக்கத்தைத் தருகின்ற சுத்தஸத்துவ (மாயை), மலினஸத்துவ (அவித்தை) ஆகிய இரண்டு குணங்களால் உண்டான,

மூல ஆரோபம் சொன்னோம் =  காரண (சரீர) அத்யாஸத்தைச் சொன்னோம். வழுத்து சூக்கும ஆரோப வழியும் = இனி கூறப்போகின்ற சூக்ஷ்ம பிரபஞ்ச அத்தியாய கிரமத்தையும், 

மொழியக் கேளாய் = கூறக் கேட்பாயாக.


பாடல் : 28

ஏமமா யாவி னோத ஈசனார் அருளி னாலே,

பூமலி உயிர்கட் கெல்லாம் போகசா தனம்உண் டாகத்,

தாமத குணம்இ ரண்டு சக்தியாய்ப் பிரிந்து தோன்றும்,

வீமம் ஆம் மூடல் என்றும் விவிதமாம் தோற்றம் என்றும்.


பொருள்:

ஏம மாயா வினோத ஈசனார் = ஸ்வாநுபூதியும், மாயையினால் பலவித லீலைகளையுமுடைய ஈச்வரனின்,

பூமலி அருளினாலே = சிறப்புமிக்க அருளினாலே,

உயிர்கட்கு எல்லாம் = எல்லா ஜீவர்களுக்கும்,

போக சாதனம் உண்டாக = போகசாதனமான ஸூக்ஷ்ம சரீரம் உண்டாகும் பொருட்டு, தாமத குணம் = தாமஸ குண பிரதான மாயையானது, 

வீமம் ஆம் மூடல் என்றும் = கனமான ஆவரணம் என்றும்,

விவிதமாம் தோற்றம் என்றும் = பலவிதமான நாமரூபங்கள் என்றும்,

பிரிந்து இரண்டு சக்தியாய்ப் தோன்றும் = பிரிந்து இருவகை சக்திகளாகத் தோன்றும்.


ஏம மாயாவினோத ஈசனார் = ஆவரணமின்மையால் அஹம் ப்ரஹ்மமென்ற அனுபூதியும், மாயையினால் பலவித வினோத  லீலைகளையும் செய்யும் ஈச்வரன்.


போகஸாதனம் = புண்ய பாபத்தை அனுபவிப்பதற்கான ஸூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்)


கனமான ஆவரணம் = நீக்குவதற்கு அரிதான அஞ்ஞானம் எனும் மறைப்பு.


இரண்டு சக்திகள் = ஆவரண சக்தி, விக்ஷேப சக்தி

ஆவரணம் = ஸ்வரூபத்தை மறைத்தல்.

விக்ஷேபம் = வேறொன்றாகத் தோன்றுதல்.


பாடல் :29

தோற்றம் ஆம் சத்தி தன்னின் சொல்லிய விண்ணாம் விண்ணின்,

காற்றதாம் காற்றின் தீயாம் கனலில் நீர்நீரின் மண்ணாம்,

போற்றும் இவ்வைந்தும் நொய்ய பூதங்கள் என்று பேராம்,

சாற்றுமற் றிவற்றின் போக சாதன தனுஉண் டாகும்.


பொருள்: 

சொல்லிய தோற்றம் ஆம் சத்தி தன்னின் = முற்கூறிய அவ்விருவகைச் சக்திகளுள் தோற்றம் என்ற விக்ஷேப சக்தியில் இருந்து,

விண்ணாம் = (சப்த தந்மாத்ரையான) ஆகாசம் தோன்றும்,

விண்ணின் காற்றதாம் = விண்ணில் இருந்து (ஸ்பர்ச தந்மாத்ரையான) காற்று உண்டாகும், 

காற்றின் தீயாம் = காற்றிலிருந்து (ரூபதந்மாத்ரையான) நெருப்பு உண்டாகும்),

கனலில் நீர் = தீயிலிருந்து (ரஸ தந்மாத்ரையான) நீர் உண்டாகும்,

நீரின் மண்ணாம் = நீரில் இருந்து (கந்த தந்மாத்ரையான) நிலம் உண்டாகும்.

போற்றும் இவ்வைந்தும் = சொல்லிய இவ்வைந்து தந்மாத்ரைகளுக்கும்,

நொய்ய பூதங்கள் என்று பேராம் = ஸூக்ஷ்ம பூதங்கள் என்று பெயராகும்.

சாற்றும் இவற்றின் = சொல்லிய இவ்வைந்து ஸூக்ஷ்ம பூதங்களிலிருந்தும்,

போக சாதன தனுஉண் டாகும்‌ = போகஸாதனம் எனும் ஸூக்ஷ்ம சரீரம் தோன்றும்.

பாடல்:30


ஆதிமுக் குணமிப் பூதம் அடங்கலும் தொடர்ந்து நிற்கும்,

கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும்,

ஓதிய பின்னை ஐந்தும் உளம்புத்தி இரண்டா ஞான,

சாதனமாம் இவ் வேழும் சற்குணப் பிரிவி னாலே.


பொருள்:

ஆதி முக்குணம் = தனக்குக் காரணமான தமோகுணப் பிரதான மாயையின்கண் உள்ள‌ தமசில் சத்துவம், ரஜஸ், தமஸ்  என்னும் முக்குணங்கள்,

இப்பூதம் அடங்கலும் = இத்தன்மாத்திரைகள் முழுதினும், 

தொடர்ந்து நிற்கும் = கலந்து இருக்கும், கோதில் வெண்குணத்தில்  ஐந்து கூறு = (மாயையின் தமோகுணக் காரியமான பஞ்சபூதங்களின்) தூய்மையான ஸத்துவ குணத்தில் இருந்து ஐந்து பகுதிகளும் (தனித்தனியாக), 

உணர் கருவி ஆகும் = ஞான இந்திரியங்கள் (அறிவு உறுப்புகள்) தோன்றும், 

ஓதிய பின்னை ஐந்தும் = முன்னர்க் கூறிய (பஞ்சபூதங்களின் ஸத்துவ குணத்தின் ஐந்துபகுதிகளும் (ஒன்றாகச் சேர்ந்து), உளம்புத்தி இரண்டு ஆம் = மனம், அறிவு என இருவிதப் பரிணாமம் உடைய அந்தக்கரணமாக ஆகும்.

இவ்வேழும் = இந்த (ஞானேந்திரியங்கள் ஐந்து +மனம்,புத்தி) ஏழு தத்துவங்களும், 

சற்குணப் பிரிவினாலே = சத்துவகுணக் கூறாதலால்,

ஞானசாதனமாம் = ஞானஸாதனம் (அறிவைப் பெற உதவும் கருவிகள்) என்று சொல்லப்படும்.


ஞான இந்திரியங்கள் = மெய் வாய் கண் மூக்கு செவி.


அந்தக்கரணம் = மனம் (+சித்தம்) புத்தி(+அஹங்காரம்)


பாடல் : 31


இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்தும் ஐந்தும்,

பிராணவா யுக்கள் என்றும் பெருந்தொழிற் கருவி என்றும்,

பராவிய பெயராம் இந்தப் பதினேழும் இலிங்க தேகம்,

சுராசுரர் நரர்வி லங்காய்த் தோன்றிய உயிர்கட் கெல்லாம்.


பொருள்:

இராசத குணத்தில் = (பஞ்சபூதங்களின்) ரஜோ குணத்தில்,

எடுத்து வேறு இட்ட ஐந்து கூறுக்கும் = எடுத்து  தனித்தனியே வைத்த ஐந்து கூறுக்கும்,

பெருந்தொழிற் கருவி என்றும் = கர்மேந்திரியங்கள் என்றும்

ஐந்தும் = (ஒன்றாக வைத்த) ஐந்து கூறுக்கும்,  

பிராணவாயுக்கள் என்றும் = பிராணாதி வாயுக்கள் என்றும்,

பராவிய பெயராம் = சாஸ்திரங்களில் சொல்லிய பெயராம்.

இந்தப் பதினேழும் = இந்தப் பதினேழு தத்துவங்களும், 

சுர, அசுரர், நரர், விலங்காய்த் தோன்றிய உயிர்கட்கு எல்லாம் = தேவர், அசுரர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரங்கள் ஆகிய உயிரினங்களுக்கு எல்லாம்,

இலிங்க தேகம் = ஸூக்ஷ்மசரீரம் (நுண்ணுடல்) ஆகும்.


கர்ம இந்திரியங்கள் = கைகள், கால்கள், வாய், எருவாய், கருவாய் (மல, ஜல உறுப்புகள்)


பதினேழு தத்துவங்கள் = ஞான இந்த்ரியங்கள் 5, கர்ம இந்திரியங்கள் 5, பிராணாதி வாயுக்கள் 5, அந்தக்கரணம் (மனம், புத்தி) 2.


எழுவகைப் பிறப்பு - ஏழு விதமான சரீரங்கள்

1.தேவ,அசுரர். 2.மனிதர். 3.விலங்கு. 4.பறவை. 5.ஊர்வன. 6.நீர்வாழ்வன. 7.தாவரங்கள்.


பாடல் : 32

இவ்வுடல் மருவும் சீவன் இலங்குதை சதன்என் றாவன்,

இவ்வுடல் மருவும் ஈசன் இரணிய கர்ப்பன் ஆவன்,

இவ்வுடல் இரண்டு பேர்க்கும் இலிங்கசூக் குமச ரீரம்,

இவ்வுடற் கோசம் மூன்றாம் இதுகனா அவத்தை ஆமே.


பொருள்:

இவ்வுடல் மருவும் சீவன் = இந்த ஸூக்ஷ்ம சரீரத்தில் பொருந்தியிருக்கும் ஜீவன்,

இலங்கு தைசதன் என்று ஆவன் = விளங்கும் தைஜஸன் என்று சொல்லப்படுவான்.

இவ்வுடல் மருவும் ஈசன் = இவ்வுடலில் பொருந்தியிருக்கும்  ஈச்வரன்,

இரணியகர்ப்பன் ஆவன் = ஹிரண்யகர்ப்பன்  என்று சொல்லப்படுவான். 

இவ்வுடல் இரண்டு பேர்க்கும் = இந்த உடல் ஜீவன், ஈச்வரன் இரண்டு பேருக்கும்,

இலிங்க சூக்கும சரீரம் = லிங்கசரீரம் என்ற பெருடைய ஸூக்ஷ்ம சரீரம் ஆகும். 

இவ்வுடல் கோசம் மூன்றாம் = இந்த ஸூக்ஷ்மசரீரம் ப்ராணமயம், மனோமயம், விஜ்ஞானமயம் எனும் மூன்று கோசங்களாம்.

இதுகனா அவத்தை ஆமே = இந்த ஸூக்ஷ்ம உடல் (வெளிப்படையாய் காணப்படும் நிலை) கனவு நிலை ஆகும்.

பாடல் : 33

சூக்கும சடம்இம் மட்டும் சொல்லினோம் இப்பால் தூலம்,

ஆக்குமா ரோபம் தானும் அடைவினின் மொழியக் கேளாய்,

தாக்கும் இவ் வுயிர்க்குத் தூல தனுவும்போ கமுமுண் டாகக்,

காக்கும் அவ்வீசன் பஞ்சீ கரணங்கள் செய்தான் தானே.


பொருள்:

சூக்கும சடம் இம்மட்டும் சொல்லினோம் = சூட்சும சரீர (அத்தியாசத்தை) இதுவரை கூறினோம், 

இப்பால் = இனிமேல்,

தூலம் ஆக்கும் ஆரோபம் தானும் = தூலதேகம் (முதலிய பிரபஞ்சத்தைச்) படைக்கும் அத்தியாரோபத்தையும், அடைவினில் மொழியக் கேளாய் = கிரமமாகச் சொல்லக் கேட்பாயாக, தாக்கும் இவ்வுயிர்க்கு = (ஸூக்ஷ்மசரீரங்களில்) சம்பந்தித்துள்ள இவ்வுயிர்களுக்கு, 

தூல தநுவும் போகமும் உண்டாக = (தத்தம் கருமத்திற்குத் தக்கதாக) தூலதேகங்களும், (அவ்வத் தேகங்களுக்கு பொருத்தமான) போகங்களும் உண்டாவதற்காக, 

காக்கும் அவ்வீசன் = (யாவரையும்) காவல் செய்யும் அந்த ஈச்வரன், பஞ்சீகரணங்கள் செய்தான் = (ஆகாயம் முதலான பூதங்கள் ஐந்தனையும்) பஞ்சீகரணம் செய்தனன்.


பாடல் : 34

ஐந்துபூ தமும்பத் தாக்கி அவைபாதி நந்நான் காக்கி,

நந்துதம் பாதி விட்டு நான்கொடு நான்கும் கூட்ட,

வந்தன தூல பூதம் மகாபூதம் இவற்றி னின்றும்,

தந்தன நான்காம் தூல தனுவண்ட புவன போகம்.


பொருள்:

ஐந்து பூதமும் பத்து ஆக்கி = ஐந்து பூதங்களையும் ஒவ்வொன்றையும் சமமாக இரண்டு இரண்டு பகுதியாகப் பண்ணி, அவைபாதி நந்நான் காக்கி = அவைகளின் (ஒவ்வொரு பாதியை வைத்து) மற்ற ஒவ்வொரு பாதியை நான்கு நான்கு பகுதிகளாகப் பண்ணி, நந்துதம் பாதி விட்டு = பெரிய அரைப்பகுதியை விட்டு,

நான்கொடு நான்கும் கூட்ட = (மற்றை) நான்கு பூதங்களின் அரைப்பாகங்களோடு நான்கு பாகங்களையும் சேர்க்கவே,

வந்தன தூல பூதம் = தூலமான பூதங்கள் உண்டாயின.

மகாபூதம் இவற்றி னின்றும்‌ = (பஞ்சீகிருத) மஹாபூதங்களான இவற்றிலிருந்தும், 

அண்ட புவன போகம் தூல தனு நான்காம்

தந்தன = (இந்திரியங்களின் விஷயமான தூலப்) பிரமாண்டமும், (பிரமாண்டத்தின் உள்ளே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் என்னும் மேலேழு புவனங்களும், அதலம், விதலம், சுதலம் தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் என்னும் கீழேழும் ஆகிய பதினான்கு) புவனங்களும், (ஜீவர்களின் போக்கியத்திற்கு யோக்கியமான அந்நாதி) போக விஷயங்களும், (போகத்திற்கு ஸ்தானமான சராயுஜம், அண்டஜம், சுவேதஜம், உத்பிஜம் என்னும்) நால்வகைப் பிறப்பாகிய (தேவர், மனிதர், பசுவாதிய) தூலசரீரங்களும் (ஈசுரனால்) படைக்கப்பட்டன.


சராயுஜம் = கருப்பையிலிருந்து தோன்றக்கூடிய மனிதன் முதலான உயிரினங்கள்.


அண்டஜம் =முட்டையிலிருந்து தோன்றக்கூடிய கோழி முதலான உயிரினங்கள்.


ச்வேதஜம் = வியர்வை அழுக்கு முதலானவைகள் இருந்து உண்டாகக்கூடிய கிருமிகள் முதலானவை


உத்பிஜம் = பூமியை பிளந்து கொண்டு உண்டாகக்கூடிய தாவரங்கள்.


பாடல் : 35

தூலமே மருவும் சீவன் சொல்லிய விசுவ னாகும்,

தூலமே மருவும் ஈசன் சொலும்விராட் புருட னாகும்,

தூலமே அன்ன கோசம் துன்னும்சாக் கிரவ வத்தை,

தூலகற் பனையீ தென்று தொகுத்தது மனத்திற் கொள்வாய்.


பொருள்:

சொல்லிய தூலமே மருவும் சீவன் விசுவ னாகும் = முன்னே சொல்லியது போல தூல உடலில் பொருந்திய ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயராகும், 

தூலமே மருவும் ஈசன் சொலும் விராட்புருடன் ஆகும் = அந்த (ஸமஸ்டி) ஸ்தூலசரீரத்தில் பொருந்தும் ஈச்வரனுக்கு விராட் புருஷன் என்று பெயராகும்.

தூலமே அன்ன கோசம் = தூல உடலே அன்னமய கோசம் ஆகும்.

துன்னும் சாக்கிர அவத்தை = இந்த தூல உடலே எல்லா இந்திரியங்களும் செயல்படும் விழிப்பு நிலைக்கு இடம் ஆகும், தூல கற்பனை ஈது என்று = தூல பிரபஞ்ச ஆரோபம் இதுவாகுமென்று,

தொகுத்தது மனத்திற் கொள்வாய் = நாம் சுருக்கமாகக் கூறியதை உன் மனதில் நிலைநிறுத்திக் கொள்வாயாக.


பாடல் : 36

சீரிய ஈச னார்க்கும் சீவர்க்கும் உபாதி ஒன்றேல்,

ஆரிய குருவே பேதம் அறிவதெப்படி என்றக்கால்,

காரிய உபாதி சீவன் காரண உபாதி ஈசன்,

வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே.


பொருள்:

சீரிய ஈசனார்க்கும் சீவர்க்கும் = சிறந்த ஈச்வரருக்கும் ஜீவர்களுக்கும் 

உபாதி ஒன்றேல் =

(தூல, ஸூக்ஷ்ம) உபாதி ஒன்றானால், 

ஆரிய குருவே = ஸத்குருவே,

பேதம் அறிவதெப்படி என்றக்கால் = வேறுபாடு எப்படி அறிவது என்று கேட்டால், 

காரிய உபாதி சீவன் = காரிய (அவித்யா) உபாதியை உடையவன் ஜீவன்,

காரண உபாதி ஈசன் = காரண (மாயா) உபாதியை உடையவன் ஈச்வரன், 

வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே = (இருவரும்) மகத்துவமிக்க ஸமஷ்டியினாலும் வியஷ்டியினாலும் பேதம்(வேற்றுமை) உடையவர் என்று அறிந்துகொள்வாயாக.


பாடல்: 37

மரங்கள் போல் வியட்டி பேதம் வனமெனல் சமட்டி பேதம்,

சரங்கள்தா வரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார்,

பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார்,

இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே.


பொருள்:

மரங்கள் போல் வியட்டி பேதம் = வியஷ்டி பேதம் என்பது மரங்கள் என்பது போலாகும்,

வனமெனல் சமட்டி பேதம் = சமஷ்டி பேதம் என்பது வனம் என்பது போலாகும், 

சரங்கள் தாவரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார் = நகர்கின்ற உயிர்கள், நகராத செடிகொடிகள் என வேறுபட்டு தனித்தனியே இருக்கும் உடல்களை வியஷ்டி என்று சொல்லுவர், 

பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார் = பரவி இருக்கின்ற அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் காண்பதை ஸமஷ்டி என்று சொல்லுவர் (அறிஞர்),

இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே = அவித்தையினால் பலவிதமாக வேறுபட்டு இருக்கின்ற ஜீவர்களுக்கும் ஈச்வரனுக்கும் வேறுபாடு இதுவே.


பாடல் : 38

கற்பனை வந்த வாறு காட்டினோம் காண்ப எல்லாம்,

சொற்பனம் போலும் என்றே துணிந்தவன் ஞானி ஆவான்,

செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்த ஆ காசம் போல,

அற்புத முத்தி சேரும் அபவாத வழியும் கேளாய்.


பொருள்:

கற்பனை வந்தவாறு காட்டினோம் = அத்யாரோபம் உண்டான வழியை அறிவித்தோம்.

காண்ப எல்லாம் = அஹங்காரம் முதலாக பிரபஞ்சம் அனைத்தும்,

சொற்பனம் போலும் என்றே = கனவு உலகம் போல (உண்மையில் இல்லாதது) என்று,

துணிந்தவன் ஞானி ஆவான் = சந்தேகமின்றி அறிந்தவனே ஞானி ஆவான்,

செற்புதை மழைக்காலம் போய் = மேகம் நெருங்கிய மழைக்காலம் போனபிறகு, 

தெளிந்த ஆகாசம் போல = மேகங்கள் இன்றித் தெளிவாகத் தோன்றும் ஆகாயம் போல,

அற்புத முத்தி சேரும் = எல்லா துன்பங்களும் நீங்கி ஒப்புயர்வற்ற ஆனந்த ரூபமான மோக்ஷத்தை அடையக் காரணம் ஆகும்,

அபவாத வழியும் கேளாய் = கற்பனையை நீக்குகின்ற வழியைக் கேட்பாயாக.


பாடல் : 39

அரவன்று கயிறென் றாற்போல் ஆளன்று தறிஎன் றாற்போல்,

குரவன்சொல் உபதே சத்தால் கூறுநூல் ஒளியைக் கொண்டு,

புரமன்று புவன மன்று பூதங்க ளன்று ஞானத்,

திரமென்னும் பிரம மென்று தெளிவதே அபவா தம்காண்.


பொருள்:

அரவு அன்று கயிறு என்றாற்போல் = இது பாம்பு அல்ல கயிறுதான் என்று தெளிவது போலவும்,

ஆள் அன்று தறி என்றாற்போல் = இது மனிதன் அல்ல கட்டைதான் என்று தெளிவது போலவும்,

குரவன்சொல் உபதே சத்தால் = குரு உபதேசித்த உபதேசத்தின் தெளிவினாலும், 

கூறுநூல் ஒளியைக் கொண்டு = (அந்த குரு உபதேசத்திற்கு எடுத்துக்கொண்ட) வேதாந்த நூல்களின் விவேகத்தைக் கொண்டும்,

புரம் அன்று புவனம் அன்று பூதங்கள் அன்று = இது உடல் அல்ல, இது உலகம் அல்ல, இது பஞ்சபூதங்கள் அல்ல (இவை உண்மைப் பொருளல்ல),

திரஞானம் என்னும் பிரமம் என்று = ஸ்திரமான ஸ்வரூப ஞானம் என்னும் ப்ரஹ்மம் என்று, 

தெளிவதே அபவாதம் காண் = ஐயம் இன்றி நிச்சயமாகத் தெரிந்து கொள்வதே அபவாதம் என்று அறிந்து கொள்வாயாக.


பாடல் : 40

படமும்நூ லும்போல் செய்த பணியும் பொன் னும்போல் பார்க்கின்,

கடமும்மண் ணும்போல் ஒன்றாம் காரிய கார ணங்கள்,

உடல்முதல் சுபாவம் ஈறா ஒன்றில்ஒன் றுதித்த ஆறே,

அடைவினில் ஒடுக்கிக் காண்ப தபவாத உபாயம் ஆமே.


பொருள்:

காரிய காரணங்கள் = காரியத்தையும் (உலகத்தையும்) காரணத்தையும் (ப்ரஹ்மத்தையும்),

பார்க்கில் = (ச்ருதி, யுக்தி, அநுபவங்களால்) ஆராய்ந்து பார்க்குமிடத்து,

படமும் நூலும் போல் = காரியமான துணியையும் காரணமான நூலையும் போலவும்,

செய்த பணியும் பொன் னும் போல் = காரியமான நகையையும் அதன் காரணமான பொன்னையும் போலவும், கடமும் மண்ணும் போல் = காரியமான பானையையும் அதன் காரணமாக மண்ணையும் போலவும்,

ஒன்றாம் = ஒன்றுக்கொன்று வேறுபடாத ஒரே பொருளாகும்,

உடல்முதல் சுபாவம் ஈறா = தூல உடல் முதல் அவித்தை முடிவாக, ஒன்றில் ஒன்றுதித்த ஆறே = ஒன்றிலிருந்து ஒன்று தோன்றிய படியே, அடைவினில் ஒடுக்கிக் காண்பது = முறையே ஒடுக்கிப் பார்ப்பது,

அபவாத உபாயம் ஆமே = அபவாத வழி ஆகும்.


காரணம் ஸத்யம், காரியம் மித்யா.
காரணம் ஒன்று, காரியம் பல. 
காரணம் நித்தியம் காரியம் அநித்தியம்.
காரணம் நிரவயவம் காரியம் ஸாவயவம்.
காரணம் நிர்விகாரம், காரியம் ஸவிகாரம்.

காரணம் ஸ்வதந்திரம் காரியம் பரதந்திரம்.



பாடல் : 41

தூடண தமத்தில் வந்த தோற்றமாம் சத்தி செய்யும்,
ஏடணை விகாரம் சொன்னீர் இரண்டுசத் திகள் என் றீரே,
மூடலாம் சத்தி செய்யும் மோகமும் சொல்லும் ஐயா,
கேடறக் குருவே என்னக் கிருபையோ டருள்செய் வாரே.

பொருள்:

தூடண தமத்தில் வந்த = நிந்திக்கத்தக்க தாமஸ குண(ப்ரதான) மாயையிலிருந்து உண்டான,

தோற்றமாம் சத்தி செய்யும் = விக்ஷேபம் ஆகிய சக்தி உண்டாக்கும்,

ஏடணை விகாரம் சொன்னீர் = இச்சா ரூபமான (இப்பிரபஞ்சத்தின்) தோற்றத்தை அருளிச் செய்தீர்,

இரண்டு சத்திகள் என் றீரே = (முன்னர் தாமஸ குணம்) இரண்டு சக்திகளாய்ப் பிரிந்து தோன்றும் என்று சொன்னீர் ஆதலால், 
மூடலாம் சத்தி செய்யும் மோகமும் = ஆவரணம் எனும் சக்தி செய்யும் மயக்கத்தையும்,
கேடற = என் துன்பம் விலகுமாறு,
ஐயா குருவே = என்‌ தந்தையாகிய குருவே, 
என்ன = (சொல்லும்) என்று சீடன் கேட்க,

கிருபையோடு அருள் செய்வாரே = ஸற்குருவானவர் கருணையோடு அருளிச்செய்தார்.


பாடல் 42

தானிகர் தனக்காம் ஈசன் தனையும்தங் களைத்தாம் கண்ட,

ஞானிகள் தமையும் அன்றி நாஸ்திந பாதி யென்னும்,

ஊனிடை உயிர்கள் உள்ளத் துணர்விழி குருடாம் வண்ணம்,

வானிலம் திசைகள் மூடு(ம்) மழைநிசி இருள்போல் மூடும்.


பொருள்:

தனக்குத் தான் நிகர் ஆம் ஈசன் தனையும் = தனக்குத்தான் வேறொரு நிகரில்லாத ஈச்வரனையும்,

தங்களைத் தாம் கண்ட ஞானிகள் தமையும் = தங்களது யதார்த்த சொரூபமான பிரம்மத்தை தாம் என்று அறிந்து கொண்ட ஞானிகளையும்,
அன்றி = தவிர,

நாஸ்தி = (பிரஹ்மம் என்பது) இல்லை,

ந பாதி = விளங்கவில்லை,

என்னும் = என்று நினைக்கும்,

ஊனிடை உயிர்கள் = உடலின்கண் உள்ள (மற்ற) ஜீவர்களை, உள்ளத்து உணர்விழி = உள்ளத்தின் அறிவுக்கண்ணானது,

குருடாம் வண்ணம் = குருடு ஆகும்படி,

வான் நிலம் திசைகள் மூடும் = வானம், பூமி, திசைகளைப் புலப்படாதபடி மறைத்து நிற்கும்,

மழை நிசி இருள்போல் = கார்காலத்து இரவின் இருள் போல

மூடும் = மறைக்கும். (அதுவே ஆவரண சக்தி செய்யும் மோஹமாம்.)


பாடல் : 43

பூன்றமாம் பிரமத் துக்கும் புறத்துள விகாரங் கட்கும்,

ஆன்றகூ டத்த னுக்கும் அகத்துள விகாரங் கட்கும்,

தோன்றிய பேதம் சற்றும் தோன்றாமல் மறைத்து மூடும்,

ஊன்றிய பவவி யாதி உண்டாக்கும் உபாதி ஈதே.


பொருள்:

பூன்றமாம் பிரமத்துக்கும் = பூர்ணமாகிய பிரஹ்மத்திற்கும், புறத்துள விகாரங்கட்கும் = புறத்திலே (இது என்னும் எண்ணத்திற்கு விஷயமாக) உள்ள ஆகாயம் முதலான பிரபஞ்சத்திற்கும்,

ஆன்ற கூடத்தனுக்கும் = அறிவுருவான கூடஸ்தனுக்கும், அகத்துள விகாரங்கட்கும் = உள்ளே (நான் என்னும் எண்ணத்திற்கு விஷயமாக உள்ள) அஹங்காரம் முதலானவைகளுக்கும்,
தோன்றிய பேதம் = (இயற்கையாகத்) தோன்றும் வேறுபாட்டினை,

சற்றும் = சிறிதும்,

தோன்றாமல் மறைத்து = அறிவுக்கு விளங்காத வண்ணம் அதைக் குருடாக்கி,

மூடும் = (அவ்வேறுபாடுகளை ஆவரண சக்தி) மறைக்கும்.

ஊன்றிய பவ வியாதி = (கடத்தற்கு அரியதாய்) வலிமை பெற்றுள்ள பிறவியாகிய நோயை,
உண்டாக்கும் உபாதி ஈதே = உருவாக்கும் உபாதி இவ்வாவரண சக்தியே ஆகும் (வேறொன்றன்று).

பாடல் : 44

ஆதாரம் மறைந்து போனால் ஆரோபம் எங்கே தோன்றும்,
ஆதாரம் மறையா தாகில் ஆரோபம் இலையே என்றால்,
ஆதாரம் சமம்வி சேடம் ஆமென இரண்டு கூறாம்,
ஆதாரம் சமமாம் எங்கும் ஆரோபம் விசேடம் ஆமே.

பொருள்:

ஆதாரம் மறைந்து போனால் = (அடர்ந்த இருளில் கயிறு போல) ஆதாரமான ப்ரஹ்மம் தோன்றாமல் மறைந்து போனால்,

ஆரோபம் எங்கே தோன்றும் = (கற்பிதமான பாம்பு போல) கற்பிதமான உலகம் எங்கே தோன்றும்?,
ஆதாரம் மறையா தாகில் = (நண்பகல் வெயிலில் கயிறு போல) ஆதாரமான‌ ப்ரஹ்மமானது மறையாமல் விளங்குமானால், ஆரோபம் இலையே என்றால் = கற்பனையான உலகம் தோன்றாது என்று வினவினால்,
ஆதாரம் சமம் விசேடம் ஆமென இரண்டு கூறாம் = ஆதாரமானது சாமான்யம் என்றும் விசேஷம் என்றும் இரண்டு கூறு உடையது ஆகும்,
ஆதாரம் சமமாம் எங்கும் = (அதிக காலத்திலும் அதிக தேசத்திலும்) ஒரே மாதிரியாக சமமாகப் பரவி இருப்பது சாமான்ய மாகும்,
ஆரோபம் விசேடம் ஆமே = (குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில்) தனிப்பட்டு விளங்குவது விசேஷமாகும்.

பாடல் : 45

சகமதில் இதுஎன் சுட்டாம் சமானந்தான் மறைந்தி டாது,

மிகஇது கயிறாம் என்னும் விசேடந்தான் மறைந்து போகும்,

அகம்எனும் சமானம் தன்னை அஞ்ஞானம் மறைத்தி டாது,

பகர்விசே டமதாம் சீவன் பரமெனும் அதனை மூடும்.


பொருள்:

சகமதில் = உலகினில்,
இதுஎன் சுட்டாம் = (மங்கிய இருளில் எதிரே இருக்கும் கயிறில் அறியாமல் இது பாம்பு எனும்போது) இது என்று சுட்டிக் காட்டப்படுவதான,
சமானந்தான் மறைந்தி டாது = சாதாரணமாக (ஏதோ ஒன்று இருப்பதாகத்) தெரிதல் மறைந்துவிடாது.
இது கயிறு ஆம் என்னும் = இது கயிறு ஆகும் என்று காணப்படும்,
விசேடந்தான் = சிறப்பு அம்சம் தான்,

மிக = பெரும்பாலும்,

மறைந்து போகும் = தெரியாமல் போகிறது.
பகர் விசேடமது ஆம் சீவன் = கற்பித விசேஷமாகச் சொல்லும் ஜீவனுக்கு,
அகம் எனும் சமானம் தன்னை = நான் (இருக்கிறேன்) என்னும் சாதாரணமான அறிவை,
அஞ்ஞானம் மறைத்திடாது = ஆவரண சக்தி மறைத்து விடாது.

பரமெனும் அதனை மூடும் = (உணர்வொளி நிறைவாய் நிற்கும்) பிரஹ்மம் (ப்ரஹ்மமாக இருக்கிறேன்) எனும் யதார்த்த வடிவத்தையே மறைக்கும்.


பாடல் : 46

கேவல நிலைதோன் றாமல் கெடுத்தது பஞ்ச கோசம்,

சீவனும் சகத்தும் ஆகிச் செனித்தவிட் சேபம் அன்றோ,

ஆவர ணம்தா னேபாழ் அனர்த்தம்என் றுரைத்த தேதோ,

மேவரும் குருவே என்று வினாவிடின் மகனே கேளாய்.


பொருள் :

பஞ்சகோசம் சீவனும் சகத்தும் ஆகி = அந்நமயாதி கோசங்களும், (அவற்றில் அபிமானம் கொண்ட) ஜீவனும், ஆகாசாதி உலகமுமாக,

செனித்த விட்சேபம் அன்றோ = தோன்றிய விக்ஷேப சக்தி அல்லவா,

கேவல நிலை தோன்றாமல் கெடுத்தது = பிரஹ்மநிலையை அறியமுடியாமல் மறைத்துக் கெடுத்தது,
(இவ்வாறு விக்ஷேபசக்தியே கொடியதாக இருக்க)
ஆவரணம் தானே = ஆவரண சக்திதானே,

பாழ் (என்றும்) = (உயிர்களுக்கு உள்ளத்து உணர்விழி குருடாம் வண்ணம் - பாடல் 49) பாழாக்கிற்று என்றும்,

அனர்த்தம் என்றும் = அனர்த்தம் (ஊன்றிய பவ வியாதி உண்டாக்கும் உபாதி ஈதே - பாடல் 50) என்றும்,

உரைத்தது ஏதோ = அருளியது யாது காரணமோ,

மேவரும் குருவே என்று = கிடைத்தற்கரிய குருவே என்று,

வினாவிடின் = கேட்பாயாகில்,

மகனே கேளாய் = மைந்தா, அதற்கு பதில் சொல்லுதும் கேட்பாயாக!


பாடல் : 46
தோற்றமாம் சத்தி தானும் துன்பமாம் பவமா னாலும்,
ஆற்றலால் முத்தி சேர்வார்க் கனுகூலம் ஆகும் காண்நீ,
ஊற்றமாம் பகற்கா லம்போல் உபகாரம் நிசியால் உண்டோ,
மாற்றம்என் உரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல் லாதே.

பொருள் :

தோற்றம் ஆம் சத்தி தானும் = விக்ஷேபரூபமான சக்தியும்,

துன்பம் ஆம் பவம் ஆனாலும் = துன்பமயமான பிறவிக்கு காரணமாக இருப்பினும்,

ஆற்றலால் முத்தி சேர்வார்க்கு = (ஸத்ஸங்க) வலிமையால் முக்தி அடைய விரும்புகின்றவர்களுக்கு,

அனுகூலம் ஆகும் காண் நீ = (குரு, சாஸ்திராதி ரூபமாக) சகாயமாகும் என நீ அறிவாயாக,

ஊற்றம் ஆம் பகற்கா லம் போல் = (நல்லவர், தீயவர் அனைவருக்கும் சோம்பல் முதலானவைகளைப் போக்கி) எல்லா முயற்சிகளையும் செய்வதற்கு காரணமான பகல் காலத்தைப் போல,

உபகாரம் நிசியால் உண்டோ = உதவியானது இரவுப் பொழுதால் உண்டோ?,

மாற்றம் என் உரைப்பேன் = உன் வினாவிற்கு இதுபோன்ற உதாரணத்தை அன்றி வேறு என்ன பதில் உரைப்பேன்,
மைந்தா = மைந்தனே,
மறைப்பது = ஆவரண சக்திதான்,
மிகப்பொல்லாதே = மிகவும் கொடியது.

பாடல் : 47
தோற்றமாம் சத்தி தானும் துன்பமாம் பவமா னாலும்,
ஆற்றலால் முத்தி சேர்வார்க் கனுகூலம் ஆகும் காண்நீ,
ஊற்றமாம் பகற்கா லம்போல் உபகாரம் நிசியால் உண்டோ,
மாற்றம்என் உரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல் லாதே.

பொருள் :
தோற்றம் ஆம் சத்தி தானும் = விக்ஷேபரூபமான சக்தியும்,
துன்பம் ஆம் பவம் ஆனாலும் = துன்பமயமான பிறவிக்கு காரணமாக இருப்பினும்,
ஆற்றலால் முத்தி சேர்வார்க்கு = (ஸத்ஸங்க) வலிமையால் முக்தி அடைய விரும்புகின்றவர்களுக்கு,
அனுகூலம் ஆகும் காண் நீ = (குரு, சாஸ்திராதி ரூபமாக) சகாயமாகும் என நீ அறிவாயாக,
ஊற்றம் ஆம் பகற்கா லம் போல் = (நல்லவர், தீயவர் அனைவருக்கும் சோம்பல் முதலானவைகளைப் போக்கி) எல்லா முயற்சிகளையும் செய்வதற்கு காரணமான பகல் காலத்தைப் போல,
உபகாரம் நிசியால் உண்டோ = உதவியானது இரவுப் பொழுதால் உண்டோ?,
மாற்றம் என் உரைப்பேன் = உன் வினாவிற்கு இதுபோன்ற உதாரணத்தை அன்றி வேறு என்ன பதில் உரைப்பேன்,
மைந்தா = மைந்தனே,
மறைப்பது = ஆவரண சக்திதான்,
மிகப்பொல்லாதே = மிகவும் கொடியது.

பாடல் : 48
சுழுத்தியில் பிரள யத்தில் தோற்றம் ஆம் சகங்கள் மாண்டும்,
அழுத்திய பவம்போய் முத்தி அடைந்தவர் ஒருவர் உண்டோ,
முழுத்தவிட் சேபம் எல்லாம் முத்தியில் கூட்டு கிற்கும்,
கொழுத்த ஆ வரணம் முத்தி கூடாமல் கெடுத்த கேடே.

பொருள் :
சுழுத்தியில் = தூக்கத்தில்,
பிரளயத்தில் = மஹாப்ரளயத்தில்,
தோற்றம் ஆம் சகங்கள் மாண்டும் = தோற்றத்தில் இருக்கிற உலகங்கள் அழிந்தும்,
அழுத்திய பவம் போய் = அப்போது நம்மை துன்பத்தில் ஆழ்த்திய பிறவியானது மீண்டும் உண்டாகாமல் நீங்கி,
முத்தி அடைந்தவர் = மோஷம் அடைந்தவர் ஒருவர் உண்டோ,
ஒருவர் உண்டோ = ஒருவரும் இல்லை,
முழுத்த விட்சேபம் எல்லாம் = முழுதுமான தோற்றங்கள் எல்லாம்
முத்தியில் கூட்டு கிற்கும் = முக்தியில் நேரே அல்லது பரம்பரையாக சேர்க்கும்,
கொழுத்த ஆவரணம் = கனமான ஆவரண சக்திதான்
முத்தி கூடாமல் கெடுத்த கேடே = முக்தியடையாமல் கெடுத்த தீயதாம்.

பாடல் : 49
சுத்தியில் வெள்ளி போலத் தோன்றிய தோற்றம் ஆன,
சத்தியும் பொய்யே என்றால் சத்திசா தனமா வந்த, 
முத்தியும் பொய்யாம் என்னின் மோகநித் திரைவி லங்கால்,
நித்திரை தெளியு மாபோல் நிருவாண நிலைமெய் யாமே.

பொருள் :
சுத்தியில் வெள்ளி போல = சிப்பியின் மேல் கற்பிதமான வெள்ளி போல,
தோன்றிய தோற்றம் ஆன சக்தியும் = ப்ரஹ்மத்தின் மேல் தோன்றிய தோற்றமான விக்ஷேபசக்தியும்
பொய்யே என்றால் = மித்யையே என்று சொன்னால்,
சத்தி சாதனமா(க) வந்த முத்தியும் = அவ்விக்ஷேப சக்தியால் (ரூபமான குரு சாஸ்த்ராதிகளால்) வந்த முக்தியும்,
பொய்யாம் என்னின் = மித்யை ஆகுமே என்றால்,
மோக நித்திரை விலங்கால் = பொய்யான உறக்கத்தில் கண்ட புலி முதலிய விலங்கினால்,
நித்திரை தெளியுமாபோல் = தூக்கமானது கலைந்து போவது போல்,
நிருவாண நிலை மெய்யாமே = (குரு சாஸ்த்ராதிகளால் உண்டாகும்) முக்தி நிலையும் உண்மையாகும்.

பாடல் : 50
இம்பரில் நஞ்சை நஞ்சால் இரும்பினை இரும்பால் எய்யும்,
அம்பினை அம்பால் பற்றும் அழுக்கினை அழுக்கால் மாய்ப்பர்,
வம்பியல் மாயை தன்னை மாயையால் மாய்ப்பர் பின்னைத்,
தம்பமாம் அதுவும் கூடச் சவம்சுடு தடிபோல் போமே.

பொருள்:
இம்பரில் = இவ்வுலகில்,
நஞ்சை நஞ்சால் = விஷத்தை அதற்கு எதிரான விஷத்தினாலும்,
இரும்பினை இரும்பால் = இரும்பினை இரும்பாலும்,
எய்யும் அம்பினை அம்பால் = (எதிரி) எறிகின்ற அம்பினை அதற்கு எதிரான மற்றொரு அம்பினாலும்,
பற்றும் அழுக்கினை அழுக்கால் = துணியில் பற்றிருக்கின்ற அழுக்கை (உவர்மண்ணாகிய) அழுக்கினாலும்,
மாய்ப்பர் = அழிப்பார்கள்.
(அதுபோல)
வம்பியல் மாயை தன்னை = நிலையின்மையாகிய குணத்தினை உடைய அவித்தையினை,
மாயையால் மாய்ப்பர்= மாயையினால் அழிப்பார்கள்.
பின்னைத் = பின்னர்,
தம்பமாம் அதுவும் கூட = நிலைபெற்ற அந்த மாயையும் கூட,
சவம்சுடு தடிபோல் போமே = பிணம் சுடும் தடி போல கெட்டுப்போகும்.


கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப்படலம்
பாடல்கள் 1-50 ஸாரம்
அத்யாரோபம் - அபவாதம். அத்யாரோபம் காரணமான நிர்குண - ஸச்சிதாநந்த - ப்ரஹ்மத்தின் மேல் காரியமான உலகம் எவ்வாறு கல்பிக்கப்பட்டது - தோற்றுவிக்கப்பட்டது - என்பது.

ஈச்வர ஸ்வரூபம் = ப்ரஹ்மம் + மாயை (ஸத்வ பிரதானம்) + பிரதிபிம்பசைந்யம்.
ஜீவஸ்வரூபம் = ப்ரஹ்மம் + அவித்யா (மலின ஸத்வ மாயை) + பிரதிபிம்ப சைதந்யம்
ஜகத்ஸ்வரூபம் = ப்ரஹ்மம் + தமோகுண பிரதான மாயை.

அபவாதம் = உலகம் காரியம், ஆகவே மித்யா. காரணம் ப்ரஹ்மம் ஸத்யம்.

உலகம் (நமது மனம், உடல், போக விஷயங்கள், வாழ்க்கை) அனைத்தும் மித்யா என்று புரிந்து கொள்வதே அபவாதம்.

மாயையின் ஆவரண சக்தி விஷேப சக்தி இரண்டில் எது மிகப்பொல்லாதது ? (அனர்த்த காரணம்).

ஆவரண சக்தியே. ஆவரண சக்தியே ஜீவனின் கண்ணை மறைக்கிறது. தோற்றம் தெரிவது பிரச்சனை இல்லை. அதை ஸத்யமாக நினைப்பதே ப்ரச்சனை. கானல் நீரைப் போல.

செல்லப்பிராணிகள் வளர்க்கிறோம். அதைப் பழக்குகிறோம். என்னதான் செல்லமாக அன்பாக வளர்த்தாலும் அது வேறு நாம் வேறு தான்.நமது குழந்தைகளும் அப்படியே தான்.
நமது உடல் மனமும் கூட அப்படியே தான்.
உடலையும் மனதையும் நம் விருப்பத்திற்கேற்ப நமக்கு ஸாதகமாக பழக்க வேண்டும். என்னதான் நமக்கு நெருக்கமாக இருந்தாலும் அதுவேறு (உடல், மனம்) நாம் (ஆத்மா) வேறு தான். விவகார உலகில் ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் உள்ள வேறுபாடு ஸமஸத்தா. ஆனால், ஆத்மாவுக்கும் அநாத்மாவான உடலுக்கும் மனதுக்கும் உள்ள வேறுபாடு விஷமஸத்தா. கயிறு - பாம்பு போல.

விக்ஷேப சக்தி மோக்ஷஸாதனமாகவும் உள்ளது.
மோக்ஷம் ஸத்யமா? மித்யாவா?
பந்தம் கல்பிதம். கல்பித நிவிர்த்தியே மோக்ஷம். மோக்ஷம் புதிய அடைவு அல்ல. பந்த நீக்கமே மோக்ஷம். ஆதாரமான - காரணமான - ஆத்மா பந்தமடையமில்லை, ஆகவே மோக்ஷமடைகிறது என்பதுமில்லை.

அறியாமையினால் பந்தம் கல்பிக்கப்பட்டது. ஞானத்தினால் அது நீக்கப்படுகிறது.




Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101