Kaivalya Navanitham 1 (11-20)

தாண்டவராய சுவாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப் படலம் பாடல் : 11 அடங்கிய விருத்தி யானென்று அறிந்தபின் செறிந்த மண்ணின், குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத், தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி, உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே. பொருள்: அடங்கிய விருத்தி யான் என்று = அகங்கார எண்ணமில்லாதவன் இவன் என்று, அறிந்தபின் = அறிந்து கொண்ட பின்னர், செறிந்த மண்ணின் குடம்பையுள் புழுமுன் = நெருங்கிய மண் கூட்டின் உள்ளே உள்ள புழுவுக்கு முன்னே, ஊதும் குளவியின் கொள்கை போல = சப்தமிடும் குளவியின் திட்டம் போல, தொடங்கிய குருவும் = (ஸங்கல்பம் முதலான தீக்ஷை வழங்கி) அருள்புரிந்து தொடங்கிய குருநாதரும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி = அவன் தன்னுடைய உண்மை வடிவத்தை உள்ளவாறு அறிந்துக் கொள்ளுவதற்காக, உடம்பினுள் சீவனைப்பார்த்து = அவன் உடம்பின் உள்ளே உள்ள ஜீவனைப் பார்த்து உபதேசம் ஓதுவாரே = உபதேசிக்கத் தொடங்கினார். குளவியின் கொள்கை போல : குளவியானது புழுவைக் கொட்டி பார்த்து மிக துடிப்பதையும் ( அதிக ரஜஸ்) துடியாமல் கிடப்பதையும் (அதிக தமஸ்) ஒழித்து மத்திய துடிப்...