ஸநாதந தர்மமும் திருக்குறளும் - 5

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 5

நான்காம் இலக்கு - வீடுபேறு

ஜீவஸ்வரூபம் - ஜீவன் யார்?

உடலும் உயிரும்
ஒவ்வொரு ஜீவனுக்கும் மூன்று உடல்கள் இருக்கின்றன. 1.ஸ்தூல உடல் (பருவுடல்) 2.ஸூக்ஷ்ம உடல் (நுண்ணுடல்) 3.காரண உடல்

ஸ்தூல உடல் ஸ்தூல பஞ்ச பூதங்களால் ஆனது. ஸூக்ஷ்ம உடல் ஸூக்ஷ்ம பஞ்ச பூதங்களால் ஆனது. காரண உடல் மேற்கண்ட இரண்டு உடல்களுக்கும் காரணமாக இருக்கின்ற அஜ்ஞானம்.

உடல் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதால் ஜடமானது. உடலுக்கு ஆதாரமாக இருப்பதும் உடல் இயங்க காரணமாக இருப்பதும் உடலிற்கு வேறான ஆத்மா. உடல் நிலையில்லாதது, ஆத்மா நிலையானது. ஆத்மா பிறப்பு இறப்பு இல்லாதது, பூர்ணமானது, அறிவே வடிவானது, இரண்டற்ற ஒன்றானது. உடலும் ஆத்மாவும் சேர்ந்ததே ஜீவாத்மா என்ற ஜீவன். இந்த உடலில் பஞ்ச ஞான இந்திரியங்களும் (ஐந்து அறிவு கருவிகள்) பஞ்ச கர்ம இந்திரியங்களும் (ஐந்து செயற் கருவிகள்)  அந்தக்கரணம் என்ற மனம் ஒன்றும் இருக்கின்றன. இவை நுண்ணுடலில் இருக்கின்றன.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் 
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. (திருக்குறள் 24)

ஓரைந்தும் = பொறிகள் ஐந்தும் மனமும்

பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். (திருக்குறள் 271)
(உடல் பஞ்ச பூதங்களால் ஆனது)

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் (திருக்குறள் 346)

உடம்பொடு உயிரிடை நட்பு (திருக்குறள் 338)

துச்சில் இருந்த உயிர்க்கு (திருக்குறள் 340)

( உயிர் = நுண்ணுடல். உடலுக்கு வேறாக உயிர் இருக்கின்றது என்பது இதிலிருந்து தெளிவு)

ஜகத் ஸ்வரூபம் - உலகம் யாது?

பூதங்கள் ஐந்து
இந்த உலகமும் பஞ்சபூதங்களால் ஆனது. ஐந்து அறிவுக்கருவிகளுக்கான ஐந்து விஷயங்களை - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் - உடையது. ஜீவர்கள் செய்த புண்ணிய பாவத்திற்கு ஏற்றார்போல் சுகதுக்கங்களை தரவல்லது.

பூதங்கள் ஐந்தும் (திருக்குறள் 271)

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு. (திருக்குறள் 27)

பஞ்சபூதங்களாலான இவ்வுலகம் இறைவனால் படைக்கப்பட்டது.

ஆதிபகவன் முதற்றே உலகு. (திருக்குறள் 01)

இவ்வுலகம் நிலையில்லாத தன்மை உடையது.

நில்லாத வற்றை (திருக்குறள் 331)

ஊழிக்காலத்தில் நில்லாமல் அழிந்து போக கூடியது.

ஊழி பெயரினும் (திருக்குறள் 989)

தொடரும்...

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101