அறம் செய விரும்பு -17
போஜனநியமங்கள் வாய்கொள்ளுமளவிற்குக் கையில் உணவு எடுக்க வேண்டும். அதிகமாக எடுத்து வாயில் போட்டு மீந்ததையும் கடித்து மீந்ததையும் கலத்திலுள்ளதுடன் கலக்கக்கூடாது. சத்தமிட்டு உறிஞ்சி அல்லது கடித்துச் சாப்பிடக்கூடாது. பருகும் நீரும் குடிக்கக்கூடிய அளவில் எடுத்து உதட்டில் படாமல் எச்சிற்படாமல் தூக்கிப்பருக வேண்டும். பருகி மீந்த ஜலம், எச்சில்பட்ட ஜலம் நல்லதல்ல. சம்பந்தப்படாத பலர் நோக்க உண்ணக்கூடாது. பந்தியாகப் பலர் உட்கார்ந்து சாப்பிடும்போது நடுவில் ஒருவர் எழக்கூடாது. எழுந்தால் மற்றவரும் அத்துடன் எழ வேண்டும். அப்படி எழநேர்ந்தால் சாம்பல் ஜலம் இவற்றைக்கொண்டு பிரிவினை செய்ய வேண்டும். தூண்களின் இடையே, வாசலுக்கு அருகே, வழியில், தாழ்ந்தோ, மேடிட்டோ மற்றவர் உட்கார்ந்த இடத்திற்குச் சமமாக இல்லாத இடத்திலோ அமர்ந்தவர் நடுவில் எழுந்தால் பந்தி தோஷமில்லை. உண்ணும்போது ஒருவரை ஒருவர் தொடக்கூடாது. இடதுகையால் நீர் பருகும்போது வலதுகையால் உண்கலனைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். உப்பு, வியஞ்சனம் (ஊறுகாய், காய்கறி) நெய், எண்ணெய், பாயஸம், அன்னம் இவற்றைக் கரண்டியாலன்றிக் கையால் பரிமாறக்கூடாது. எண்ணெய் பொ...