Hindumatha Dharma Vilakkam - Chapter 05
ஓம்
பாடம் : 5
இறை வழிபாட்டு முறைகள்
சென்ற வாரம்…
நிர்குணமான பரப்ரஹ்மமே மாயா சக்தியோடு கூடி ஸகுணமான ஈஸ்வரனாக பல்வேறு தேவர்களாக பல்வேறு ஜீவன்களாக பல்வேறு ஜட பொருட்களாக, உலகங்களாக விளங்குகின்றார்.
பிரபஞ்சம் இறைவனின் பேருடல். உடலின் உள்ளே உள்ள உயிரைப் போல பிரபஞ்சத்தின் உள்ளே இறைவன் இருக்கின்றார்.
உயிர் பரிசுத்தமானது; அதி சூட்சுமமானது; எங்கும் வியாபித்து இருப்பது; புலன்களால் அறிய முடியாதது; பகுதிகள் (உறுப்புகள்) அற்றது. ஒன்றானது.
உடல் ஸ்தூலமானது; வரையறைக்கு உட்பட்டது; புலன்களால் அறிய முடிந்தது; பல பகுதிகளை உடையது; பலவானது.
ஜடமான உடலின் உறுப்புகளின் வழியாகவே, உள்ளே உறைகின்ற உயிரை நாம் தொடர்பு கொள்ள முடியும்.
இயற்கை பொருட்கள் சுத்தம் அசுத்தம் கலந்தவை. மனித மனம் சுத்தம் பார்க்கக் கூடியது. ஆகவே, இறைவனின் உடலாக இருக்கின்ற உலகிலுள்ள ஜடப்பொருள்களில் சுத்தமான பொருட்கள் வழியாக நாம் இறைவனைத் தொடர்பு கொள்கின்றோம், வணங்குகின்றோம்.
இறைவனின் உருவ தோற்ற காரணம், அவதார காரணம், ஆயுதங்கள், வாகனங்கள்…
இனி…..
இறைவனை அடைதல்
இறை வழிபாட்டு முறைகள்
வாழ்க்கையே வழிபாடு
வாழ்க்கையின் மேலான இறுதி லட்சியம் பிறவிப் பெருங்கடலைக் கடத்தல்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். - திருக்குறள் 10.
இறைவனடி சேர்வது எப்படி?
இறைவனடி சேர்தல் என்பது
இறைவனின் அருளுக்குப் பாத்திரமாதல்.
இறை வழிபாட்டு முறைகள்
தர்மம் பக்தி ஞானம்
தர்மம்
அறநெறியிலான வாழ்க்கை
கர்மயோகம்
பக்தி
விக்ரஹ வழிபாடு,
ஸ்தோத்ர பாராயணம்,
நாம ஜபம்,
ரூப தியானம்.
ஞானம்
வேத, வேதாந்த, தர்ம, புராண, இதிகாச நூல்களைப் படித்தல், கேட்டல், சிந்தித்தல், வாழ்தல்.
தர்மமான வாழ்க்கை
அஹிம்ஸாமூர்த்தியான தெய்வங்களின் சந்நிதிகள் பகையான விலங்குகள் கூட சாந்தமாக இருப்பதை காண்கின்றோம்.
அஹிம்சா தர்மம் நிறைந்துள்ள கடவுளிடம் நாம் மனதைச் செலுத்தி அவரது அருளைப் பெற வேண்டும் என்றால் நம்மிடம் அஹிம்சா தர்மம் நிலை பெற வேண்டும். நீதி, ஸத்யம் முதலிய மேலான குணங்களையுடைய ஓர் நீதிபதியின் சேவகன் பொய், களவு முதலிய கெட்ட நடத்தை உடையவனாக இருந்து அவருடைய அருளை எப்படி சம்பாதிக்க முடியாதோ, அப்படியே அஹிம்ஸா தர்மத்திற்கு நிலமாகிய ஈஸ்வரனை உபாசிப்பவன் ஹிம்சை முதலிய கெட்ட குணங்களை விட்டுவிட வேண்டியது அவசியம் என்பது இதன் கருத்து.
உலகில் அனைத்து ஜீவர்களிடத்தும் இறைவன் இருக்கின்றான். அனைத்து உடல்களும் ஈச்வரனுக்கு அங்கங்களே. அங்கங்களுக்கு செய்யும் கேடு அங்கிக்கு செய்யும் கேடு ஆகும்.
ஆகவே, இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்றால் அஹிம்ஸை முதலான தர்மங்களை நாம் முதலில் கடைப்பிடிக்க வேண்டும்.
தர்மத்தின் இருவகைகள்
தர்மம் ஸாமான்ய தர்மம், விசேஷ தர்மம் என இரண்டு வகைப்படும்.
சாமான்ய தர்மம் என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது. பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது, மது அருந்துதல் கூடாது, கொலை செய்யக்கூடாது போன்றவை.
இல்லற தர்மம், துறவற தர்மம், ஸ்த்ரீ தர்மம், புருஷ தர்மம், குரு தர்மம், சிஷ்யதர்மம், ராஜ தர்மம், ப்ரஜாதர்மம் என்று
தனித்தனியே அவரவர் நிலைக்கும் தொழிலுக்கும் ஏற்றார்போல சொல்லப்பட்டிருப்பவை விசேஷ தர்மம் ஆகும்.
ஸாமான்ய தர்மம் - பொது தர்மம்
1️⃣நற்பண்புகள்
2️⃣நன்னடத்தை
3️⃣சமயச் சடங்குகள்
4️⃣சமய பண்டிகைகள்
5️⃣உறவுகள்
6️⃣பாவனை
1️⃣நற்பண்புகள்
ஸாமான்ய தர்மத்தில் முதன்மையானது நற்பண்புகள்.
அவற்றுள் முக்கியமானவை -
பதஞ்சலி யோக சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள யமம், நியமம்.
ஹிந்து மதத்தின் 10 கட்டளைகள்.
யமம் - விலக்கவேண்டியன: Don'ts யமயதி.
அஹிம்ஸா, ஸத்யம், அஸ்தேயம், ப்ரஹ்மசர்யம், அபரிக்ரஹம்.
அ) அஹிம்ஸா - ஹிம்சை செய்யாமை
காயவாக்மநோபி:ஸர்வதா3 ஸர்வதா2 ஸர்வபூதாநாம் அஹிம்ஸநம்.
உடலால் வாக்கால் மனதால் எவ்வுயிரையும் (நாமுள்பட) துன்புறுத்தாமை.
விதிவிலக்கு :
பெரிய ஹிம்சையை (கேட்டைத்) தவிர்ப்பதற்காக சிறிய ஹிம்சை செய்வது அஹிம்சை.
ஸாத்விக விரதம் அஹிம்சை.
ஹிம்சைக்குக் காரணம் - வெறுப்பு, கோபம், பொறாமை, பழிவாங்குதல், வேலையைத்தூண்ட, கவனக்குறைவு...
பலன் - நுண்மையான, மென்மையான மனம். அன்புமிகுந்தமனம்.
நம்மை யாரும் ஹிம்சை செய்யாமை.
Comments