Hindu matha Dharma Vilakkam - Chapter 06
பாடம் - 06
யமம், நியமம்
இறைவனை வழிபடும் முறைகள்
வாழ்க்கையே வழிபாடு
தர்மம் பக்தி ஞானம்
தர்மம் 1) ஸாமான்ய தர்மம் 2) விஷேச தர்மம்
1) ஸாமான்ய தர்மம் - யமம், நியமம்
1.யமம் :
அஹிம்ஸா, ஸத்யம், அஸ்தேயம், ப்ரஹ்மசர்யம், அபரிக்ரஹம்.
அ)அஹிம்ஸா - ஹிம்சை செய்யாமை
ஆ) ஸத்யம் - வாய்மை - பொய்பேசாமை
யதா த்ருஷ்டம் யதா ச்ருதம் யதா அநுமிதம் ததா வதநம்.
எதைப் பார்த்தோமோ எதைக் கேட்டோமோ எதை எவ்வாறு சிந்தித்தோமோ அப்படியே கூறுதல்.
i) உள்ளதை உள்ளவாறு கூறுதல்.
ii) (ஹிம்சை ஏற்படுமெனின், ஹிதமாக இருக்காது எனில்)
உண்மையை மறைத்தாலும் வாய்மையாகும்.
iii) (நன்மை ஏற்படும் எனில்) பொய்மையும் வாய்மையாகும்.
பலன் - மனத்தூய்மை, மனபாரமின்மை, மனவலிமை (பயமின்மை), புண்ணியம், மற்ற ஸாதனைகளை பின்பற்ற தகுதி.
இ) அஸ்தேயம் - திருடாமை
அசாஸ்த்ரபூர்வக பரத்ரவ்ய ஸ்வீகாரம்
உள்ளத்தால் உள்ளலும்.. திருக்குறள்
காரணம் - தமோகுணம் (சோம்பல், மோஹம்)
விடும்வழி - தன்மானம் வளர்த்துக்கொளல், உழைப்பு, திருப்தி.
ஈ) ப்ரஹ்மசர்யம் - ஒழுக்கம் தவறாமை - பாலியல் ஒழுக்கம்.
ப்ரஹ்ம = வேதம். வேதத்தை கற்பதற்கான வாழ்க்கை. வேதத்தை பின்பற்றிய வாழ்க்கை. இந்திரிய கட்டுப்பாடு புலனடக்கம்.
பிறனில் விழையாமை
ஒருமையுள் ஆமைபோல்...
அடக்கம் அமரருள்...
உ) அபரிக்ரஹம் - பொருள்மிகப்படையாமை.
எதையும் இலவசமாக பெறாமை.
யாதனின் யாதனின்...
காரணம் : லோபம், அச்ரத்தா, பயம்.
உபாயம் : பயனற்றதை அழித்துவிடல்.
பிறருக்கு பயனுடையதை கொடுத்துவிடல்.
2. நியமம் - கடைபிடிக்க வேண்டியன:
சௌச, ஸந்தோஷ, தப, ஸ்வாத்யாய, ஈச்வரப்ரணிதானானி நியமா:
நியம: = செய்யவேண்டியது Do's நியமயதி.
அ) சௌசம் = தூய்மை
பாஹ்யம், ஆந்தரம்
பாஹ்யம் - உடல், உடை, இருப்பிடம், புறப்பொருள்கள் அனைத்தும்.
ஆந்தரம் - மனம்.
காரணம் - தமஸ் ஆலஸ்யம் லோபம்
ஆ) ஸந்தோஷம் - கிடைப்பதில் திருப்தி.
மாற்றமுடியாதவைகளில் திருப்தி; மாற்றமுடிந்தவைகளில் முயற்சி.
இ) தவம் - தப: தபதி உருக்குதல்.
விரும்பி துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல்.
உற்றநோய் நோற்றல்...
உடலையும் மனதையும் நம் வசத்தில் கொண்டு வருவதற்கான ஸாதனை.
காயிகம், வாசிகம், மானஸம்.
ஸாத்விகம், ராஜஸம், தாமஸம்.
பலன் : ஆத்ம ஜயம். அடையமுடியாததையும் அடையச்செய்யும்.
ஈ) ஸ்வாத்யாயம் - படித்தல்
இலக்கையும் இலக்கிற்கான பாதையையும் காட்டுவது சாஸ்த்ரம்
அவை தர்ம, பக்தி, ஞானநூல்கள்.
அவைகளை வாசித்தல், கேட்டல். மனப்பாடம் செய்தல், பாராயணம் செய்தல், பொருளறிதல்.
உ) ஈச்வரப்ரணிதானம்
கர்மயோகம், பக்தியோகம்
(நித்யகர்மாவில் விசேஷபாவனை), விசேஷகர்மா(பூஜை).
இவை அனைத்தும்
செய்தல், செய்யத்தூண்டுதல், செய்ததை ஆமோதித்தல்.
Comments