Hindumatha Dharma Vilakkam - 08
பாடம்- 8 பொதுதர்மம் தொடர்ச்சி எட்டு ஆத்ம குணங்கள் 1)தயா - கருணை எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி அன்புகொண்டு இரக்கம் கொண்டு வாழ்தல் 2)க்ஷமா - பொறுமை பிறரால் நமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல். 3) அநஸூயா - பொறாமையின்மை நம்மிடம் இல்லாமல் பிறரிடம் இருக்கும் செல்வங்களை குறித்து பொறுத்துக் கொள்ள முடியாத தன்மை. 4) சௌசம் = தூய்மை அகத்தூய்மை - விருப்பு வெறுப்பு கோபம் போன்ற தீய குணங்கள் இல்லாமல் நற்குணங்களோடு இருக்கும் மனம். புறத்தூய்மை - உடல், உடை, இருப்பிடம் போன்ற எல்லா விஷயங்களிலும் தூய்மையைக் கடைபிடித்தல், தொழிலில் நேர்மையைக் கடைப்பிடித்தல். 5) அனாயாஸம் = சிரமம் இன்மை சிரமம் இல்லாமை அனாயாஸமாகும். அதிகப்படியான உழைப்பு, ஓய்வின்மை, மன பாரம், தேவையற்ற சிந்தனைகள் போன்றவை இல்லாமல் வாழ்க்கையை இலகுவாக வாழ்தல். 6) மங்களம் = நன்மை நடை, உடை, பாவனைகளில் உயர்ந்த வற்றை கடைப்பிடித்தல். அமங்கலமான சொற்கள் அலங்காரம், நடத்தை போன்றவற்றைத் தவிர்த்தல். பண்பாடான நடத்தை. 7)அகார்ப்பண்யம் = கருமித்தனமின்மை தானும் அனுபவித்து மற்றவர்களும...