Hindumatha Dharma Vilakkam - Chapter 12
ஹிந்துமத தர்மவிளக்கம் பாடம்: 12 (27.08.20) சென்ற வாரம்… நவவித பக்தி கர்மயோகம் கடவுள் வழிபாட்டுமுறைகள் சேவை செய்தல் (பகவத் கைங்கரியம், கர்மயோகம்), ஷோடச / பஞ்ச உபசார பூஜை செய்தல், ஜபம், தியானம் செய்தல், ஸ்தோத்திர பாராயணம் செய்தல், நாம சங்கீர்த்தனம் பாடுதல், ஞான சாஸ்திரங்களைப் கேட்டல், படித்தல். அதுவாகவே இருத்தல். இனி… ஷோடச உபசார பூஜை விநாயகராக சோணபத்திரத்தையும், சிவனாக பானத்தையும், கெளரியம்பாளாக ஸ்வர்ணமுகி (மாக்ஷிக) சிலையையும், விஷ்ணுவாக ஸாலக்ராமத்தையும், ஸூர்யனாக ஸ்படிகத்தையும் வைத்து வழிபடுவது பஞ்சாயதன பூஜை. ஸ்கந்தன், லஷ்மி, லலிதா, பரமேச்வரி முதலானவரை இஷ்டதேவதையாக விக்கிரகமாகவோ யந்திரமாகவோ படமாகவோ இவற்றுடன் சேர்த்துப் பூஜை செய்வதுண்டு. சோணபத்திரம் சோணா நதியில் கிடைக்கின்ற கூழான் கல், அவ்விதமே பாணம் நர்மதையிலும், ஸ்வர்ணமுகி குமுதவதி நதியிலும் ஸ்வர்ணமுகி நதியிலும், ஸாலக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகியிலும் ஸ்படிகம் வல்லம் முதலான இடங்களில் உள்ள தடாகங்களிலும் பானுமதி நதியிலும் பூமியினடியிலும் கிடைக்கின்றன. இவை உருவமுமல்ல, அருவமுமல்ல. அந்தந்த ...