Hindumatha Dharma Vilakkam - Chapter 3
ஓம்
ஹிந்துமத தர்ம விளக்கம்
பாடம் - 3
கடவுள் எப்படி இருக்கிறார் ?
கடவுளின் ஸ்வரூபம்
ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம.
சச்சிதானந்தம்
ஒருபொருள் தோன்றுவதற்கு இரண்டு காரணங்கள் தேவை: 1.உபாதான காரணம் - மூலப் பொருள் அல்லது கச்சாப்பொருள்.
2. நிமித்த காரணம் - அறிவுக் காரணம்.
இந்த உலகத்திற்கு கடவுளே உபாதான காரணமும் நிமித்த காரணமும், சிலந்தி வலைக்கு சிலந்திப் பூச்சி போல.
காரணத்தில் உள்ளது காரியத்திலும் தொடர்ந்து இருக்கும் தங்க நகை போல.
எனவே,காரியத்தை ஆராய்வதன் மூலம் காரணத்தை புரிந்துகொள்ள முடியும்.
ஆகவே, நாம் யாரென்று ஆராய்வதன் மூலம் எனக்கு மூலமான காரணமான கடவுள் யார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
நான்...
இருக்கிறேன் - ஸத்.
அறிகிறேன் - சித்.
உறக்கத்தில் கால தேச வஸ்து வரையறை இல்லாமல் இருக்கிறேன் - அனந்தம்.
ஆநந்தமாகத் தூங்கினேன் - ஆநந்தம்.
ஸத் சித் அனந்தம் ஆனந்தம் ஆத்மா = ஸச்சிதாநந்தம் ப்ரஹ்ம.
உலகம் தோன்றுவதற்குக் காரணமாக ஒன்று இருந்தது - ஸத்.
அதுவே அறிவுப் பொருளாகவும் இருந்தது ஆகவே அது - ஞானம் / சித்.
அது தோற்றமும் மறைவும் அற்றதாக இருக்கின்றது ஆகவே அனந்தம்.
அனந்தம் - நிறைவு - ஆனந்தம்.
ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம - தைத்திரீய உபநிஷத்.
ப்ரஹ்மம், பரமாத்மா, சுத்தசைதந்யம் இவை பரமசிவம் ஒரு பொருட் சொற்கள்.
விழிப்பு நிலையில் இருக்கும் உடலும் உலகமும், கனவு நிலையில் இருக்கும் உடலும் உலகமும், ஆழ்ந்த உறக்க நிலையில் காரணமாகிய அவித்யையில் (ஒன்றுமறியாநிலையில்) லயம் ஆகிவிடுகின்றன.
ஆழ்ந்த உறக்க நிலையில் இருப்பது நான் - சத்து சித்து ஆனந்தம் ஆனந்தம் ஆன ஆத்மா (நான்) + அவித்யா + பிரபஞ்சம் ஒடுங்கிய நிலை.
அவித்யா, அறியாமை, அஜ்ஞானம் ஆகியவை ஒரு பொருட்சொற்கள்.
பிரளய காலத்திலும் இவ்வாறே இது நடக்கின்றது. ஸ்தூல பிரபஞ்சமும், சூக்ஷ்ம பிரபஞ்சமும், காரணமாகிய அவ்யக்தம் என்ற மாயையில் ஒடுங்கிவிடுன்றன.
மறுநாள் நாம் விழித்தவுடன் அனைத்தும் முதல்நாளில் இருந்ததுபோலவே வெளிப்படுவது போல, மீண்டும் உலகம் தோன்றுகின்றபொழுது அப்படியே அனைத்தும் வெளிப்படுகின்றன.
ஒரு மனிதனால் படைக்கப்பட்ட பொருள் அழிந்தாலும், தான் படைத்த பொருளைப் பற்றிய அறிவு அப்படியே அந்த மனிதனின் நினைவில் இருப்பதுபோல, உலகம் அழிகின்ற பொழுது காரணநிலையில் அனைத்தும் இருக்கின்றன. அதுவே அவ்யக்தம் என்று சொல்லப்படுகின்றது. விதைக்குள் மரம் இருப்பதுபோல வெளிப்படாமல் இருக்கும் நிலை.
அறியாமை, அறிவுடைய மனிதனை சார்ந்திருப்பது போல, மாயை இறைவனைச் சார்ந்து இருக்கின்றது, இறைவனிடத்தில் இருக்கின்றது. இறைவனை விடுத்து தனியே இல்லை.
ஆகவே, இந்த அவ்யக்தம் என்ற மாயைக்கு ஆதாரமாக இருப்பது சச்சிதானந்த பிரம்மம் ஆகிய நிர்குண இறைவன். இறைவனுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. இறைவனே அனைத்திற்கும் ஆதாரம்.
முதலும் முடிவும் அற்ற ஆற்றலையும் பொருளையும் (Energy and Matter), எண்களையும் (Infinite numbers) ஆதாரமாக கொண்டிருப்பது விஞ்ஞானம். அதுபோல, முதலும் முடிவும் அற்ற இறைவனை உலகம் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றது என்று ஏற்றுக்கொள்வது மெய்ஞானம்.
ஆற்றலும் எண்களும் ஜடமான வை, தனித்து செயல்பட முடியாதவை. அவை செயல்பட ஒரு உயிருள்ள அறிவுப்பொருள் (சேதனம்) தேவை. அதுவே இறைவன். அவன் ஸ்வதந்திரமானவன். தனித்து செயல்பட முடிந்தவன். இறைவனின் ஆணைப்படியே அனைத்து இயற்பியல் விதிகளும் இயற்கையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே மெய்ஞானம்.
ப்ரஹமம் + மாயாசக்தி = ஈச்வரன்.
ச்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தா.
கடவுளின் ஸ்வபாவம்:
ஸர்வசக்திமத்வம் - ஸர்வ சக்தன்
"ஆதித்ய மண்டலத்தை அடைந்த எந்த தேஜஸானது ஸகல ஜகத்தையும் விளங்கச் செய்தின்றதோ, எந்த தேஜஸானது சந்திரனையும் அக்கி யையும் அடைந்ததோ, அந்த தேஜஸ் என்னுடைய தென்றறி.
(பகவத் கீதை 15 அத்தியாயம்.) என அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டிருக்கிறது.
ஸூர்யன் தானாகவே பிரகாசிக்கின்றதில்லை.
சந்திர நக்ஷத்ரங்கள், அவ்வாறே. அக்நியும் தானாகவே எப்படி விளங்கும்? பரஞ்ஜோதிப் பொருளாகிய அவனையே ஆஸ்ரயித்து இவையெல்லாம் விளங்குகின்றன.
அவனுடைய விளக்க சக்தியினாலேயே இவை விளங்குகின்றன."
-யஜுர்வேதம்.
பரமேஸ்வரன்
இப்படி எல்லாவிதமான சக்திகளுக்கும் சக்தியைக் கொடுத்து கொண்டிருக்கின்ற அனைத்திற்கும் மேலான பெரும்சக்தி பராசக்தி. அந்த பராசக்தியை உடையவன் பரமேஸ்வரன்.
ஸர்வஜ்ஞத்வம் - ஸர்வஜ்ஞன்
ஜீவர்களின் அறிவு சுகம் ஆயுள் பிறப்பு இறப்பு அவர்கள் விருப்பப்படி அவர்கள் வசத்தில் இல்லை.
நித்யத்ருப்தத்வம் - நித்ய த்ருப்தன்/ ஆப்தகாமன்
எவ்விதத்தேவையும் இல்லாமல் எவ்வித கார்யமும் இல்லாமல் கர்ம பலனை சதாகாலமும் பிரித்துக் கொடுத்து கொண்டிருப்பவன். பகவானிடம் இல்லாததும் எதுவும் இல்லை; அவனுக்கு தேவையானதும் எதுவும் இல்லை.
அனாதி போதத்வம்
க்ஷணிகமான பொருளை அனுபவிப்பவனுக்கு க்ஷண நேரம் திருப்தி. நித்தியமான பொருளை அனுபவிப்பவனுக்கு நித்திய திருப்தி. நித்திய திருப்தன் என்பதால் நித்திய போதன்.
ஸ்வதந்த்ரன்
ஸர்வேஸ்வரன் அதனால் சுதந்திரன்
அனந்த சக்தத்வம்
"இவனது சர்வ உத்க்ருஷ்டமாயுள்ள சக்தியானது பலவாறாய் உள்ளது." ச்வேதாச்வதர உபநிஷத்.
ஸர்வவ்யாபி - ஸர்வவியாபகத்வம் (எங்கும் பரவியிருத்தல் - (நிறைந்திருத்தல் - இறைவன்)
ஸர்வேச்வரன் - ஸர்வேஶ்வரத்வம்
(எல்லோரையும் ஆளுந்தன்மை - ஆண்டவன்)
கருணாமூர்த்தி - பரம காருணிகத்வம் (சிறந்த கருணையுற்றிருத்தல்)
பகவான் - மஹாமஹிமத்வம் (சிறந்த மஹிமையுற்றிருத்தல் - விபூதி)
அப்ராகிருதன் - அப்ராகிருதத்வம் (ப்ரகிருதி - மாயா - வசமாகாதிருத்தல், மாயையை தன் வசத்தில் கொண்டவன் - மாயாவி)
ஸ்வதந்திரன் - ஸ்வதந்திரத்வம் (தன்வசமாயிருத்தல் - இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்)
நித்யசுத்தன் - நிர்தோஷத்வம் (குற்றமற்றிருத்தல்)
பரிபூர்ண வைராக்கியம் - வேண்டுதல் வேண்டாமை இலான்…
ஏகன் - ஒப்புயர்வற்றவன்
தனக்குவமை இல்லாதான்..
Comments