Hindumatha Dharma Vilakkam - Chapter 3
ஓம் ஹிந்துமத தர்ம விளக்கம் பாடம் - 3 கடவுள் எப்படி இருக்கிறார் ? கடவுளின் ஸ்வரூபம் ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம. சச்சிதானந்தம் ஒருபொருள் தோன்றுவதற்கு இரண்டு காரணங்கள் தேவை: 1.உபாதான காரணம் - மூலப் பொருள் அல்லது கச்சாப்பொருள். 2. நிமித்த காரணம் - அறிவுக் காரணம். இந்த உலகத்திற்கு கடவுளே உபாதான காரணமும் நிமித்த காரணமும், சிலந்தி வலைக்கு சிலந்திப் பூச்சி போல. காரணத்தில் உள்ளது காரியத்திலும் தொடர்ந்து இருக்கும் தங்க நகை போல. எனவே,காரியத்தை ஆராய்வதன் மூலம் காரணத்தை புரிந்துகொள்ள முடியும். ஆகவே, நாம் யாரென்று ஆராய்வதன் மூலம் எனக்கு மூலமான காரணமான கடவுள் யார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நான்... இருக்கிறேன் - ஸத். அறிகிறேன் - சித். உறக்கத்தில் கால தேச வஸ்து வரையறை இல்லாமல் இருக்கிறேன் - அனந்தம். ஆநந்தமாகத் தூங்கினேன் - ஆநந்தம். ஸத் சித் அனந்தம் ஆனந்தம் ஆத்மா = ஸச்சிதாநந்தம் ப்ரஹ்ம. உலகம் தோன்றுவதற்குக் காரணமாக ஒன்று இருந்தது - ஸத். அதுவே அறிவுப் பொருளாகவும் இருந்தது ஆகவே அது - ஞானம் / சித். அது தோற்றமும் மறைவும் அற்றதாக...