அறம் செய விரும்பு - 2

அறம் செய விரும்பு - 2

ஆந்ஹிக நியமங்கள்

தினசரி மனிதன் தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நியமங்களை ஆந்ஹிக நியமம் என்பர். பகலும் இரவும் கொண்டது அஹஸ் என்ற தினம். அதில் செய்யவேண்டியவை ஆந்ஹிகம். நமது அன்றாட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகின்ற நியமங்களை ஆந்ஹிக நியமங்கள் என்பர்.

மூன்று நிலைகள் மனிதனை கட்டுப்படுத்துகின்றன. ஒன்று அகநிலை - ஆத்யாத்மிகம். இரண்டு புறநிலை - ஆதி பௌதிகம். மூன்று அகத்திற்கும் புறத்திற்கும் அப்பாற்பட்ட நிலை - ஆதிதைவிகம். நமது உடல், உள்ளம், அறிவு, ஆளுமை ஆகியவை நம்மை அகநிலையில் கட்டுப்படுத்துபவை. காற்று, வெப்பம், குளிர், வெட்டவெளி, மனிதன், மிருகம், மரம், செடி, நாம் வாழ்கின்ற பூமி இவை புறநிலையில் கட்டுப்படுத்துபவை. மனிதனின் ஆற்றலுக்கு உட்படாத வெயில், இடி, மின்னல் போன்றவை மற்றும் அவற்றிற்கும் அப்பாற்பட்டு நின்று அவற்றை அதனதன் இயல்புப்படி இயங்க வைக்கின்ற அறியவொனாத தெய்வ சக்தியும் மூன்றாவது நிலையில் வருபவை. ஆத்யாத்மிகத்தையும் ஆதிபௌதிகத்தையும் ஓரளவு கட்டுப்படுத்தி அனுகூலம் ஆக்கிக் கொள்ள முடியும். ஆதிதைய்விகம் நம்மை பாதிக்காதபடி நமக்கு பாதுகாப்பு தேடிக் கொள்வதும், அதனை அனுகூலம் ஆக்கிக் கொள்வதும் நமது முக்கியக் குறிக்கோள். இந்த மூன்று நிலைகளையும் அனுகூலம் ஆக்கிக் கொள்வதற்காகவே அன்றாட நடவடிக்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வது அவசியமாகிறது.

பகலும் இரவும், குளிரும் வெப்பமும், கோபமும் சாந்தியும், விருப்பும் வெறுப்பும், இன்பமும் துன்பமும், பசியும் தாகமும், அறியாமையும் அறிவும் நமது உடல், உள்ளம் மற்றும் சூழ்நிலையைப்  பாதிப்பவை. மாற்றியமைக்க முடியாதவை. இவற்றை நமக்கு அனுகூலமாக கொள்வதும், இவற்றால் பாதிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்வதும் நம் முயற்சியால் பெறத்தக்கவை. இந்த நோக்கில் அமைந்தவை இந்த ஆந்ஹிக நியமங்கள்.

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101