அறம் செய விரும்பு - 1

ஶ்ரீ S.V.ராதாகிருஷ்ண சாஸ்த்ரிகள் இயற்றிய தர்மசாஸ்திர ஸங்க்ரஹம் என்ற நூலிருந்து தொகுக்கப்பட்டது.

அறம் செய விரும்பு - 1 

முகவுரை

பொதுவாக ஹிந்துக்கள் தங்கள் மத நூல்களை படிப்பது இல்லை. பலருக்கு என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்பதே தெரியாது. மனிதன் எதற்காக வாழ வேண்டும்; எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டுவதே மதம். அதிலும் சிறப்பாக ஹிந்து மதம் தர்மத்தையே ஆதாரமாகக் கொண்டது. ஹிந்துமத நூல்கள் வேதங்கள், வேதங்களை ஒட்டிய ஸ்மிருதிகள் எனப்படுகின்ற தர்ம சாஸ்திரங்கள், தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற தர்மங்களின்படி வாழ்ந்து காட்டிய தெய்வங்களின், தேவர்களின், ரிஷிகளின், மனிதர்களின் வரலாறு புராண இதிகாசங்கள்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பயனையும் அடைய வழி காட்டுபவை இந்நூல்கள். 

நம் தர்ம சாஸ்திரங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஸ்ரீ S.V ராதா கிருஷ்ண சாஸ்திரிகள் அவர்கள் தொகுத்து வழங்கிய தர்ம சாஸ்திர சங்கிரகம் என்ற நூலிலிருந்து ஒரு நாளில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்றும் என்னென்ன செய்யக்கூடாது என்றும் சொல்லுகின்ற பகுதியை மட்டும் அறம் செய விரும்பு என்ற தலைப்பில் தொடராக தொடர்ந்து வழங்க இருக்கின்றோம். 

பெரும்பாலானவை எல்லோருக்கும் பொதுவான நியமங்கள். சில பிராமணர்களுக்கு என்று விசேஷமாக இருந்தாலும், என்ன சொல்லி இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதே.

இவற்றைத் தெரிந்துகொள்வதன் வாயிலாக தற்காலத்தில் நம்மால் முடிந்தவற்றைப் பின்பற்றலாம். நம் மதத்தினுடைய உயர்வு நமக்குப் புரியும்.

ஹிந்து தர்மம் அறிவோம்!
ஹிந்துவாக வாழ்வோம்!

ஜெய் ஶ்ரீ ராம்!

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101