அறம் செய விரும்பு -3
அறம் செய விரும்பு - 3 நன்முயற்சி நல்ல பலனைத்தரும் - விதி குறுக்கிடாதவரை. நாம் முன்செய்த புண்ணிய பாவங்களின் பின்விளைவே இந்த விதி. நம் முன்செயல் நல்லதாயின் அது நம்மையும் கெட்டதாயின் தீமையையும் விளையச் செய்கிறது. இந்த விதியை இன்று நாம் செய்கின்ற நல்வினையும் தீவினையும் தூண்டிவிடுகின்றன. விதியை ஒட்டி அமைந்த நம் மனப்பாங்கை இன்றைய நற்செயல் கட்டுப்படுத்துகிறது. நற்செயலில் நாம் எப்போதும் ஈடுபடும்படி இந்த ஆந்ஹிக நியமங்கள் நெறிப்படுத்தும். அதனால் முன் செய்த தீவினைப் பயனாகக் கெட்டதை நாடுகின்ற மனத்தை இந்த நியமங்கள் கட்டுப்படுத்தி நல்லதைப் பின்பற்றும்படி அடக்கி ஆளும்போது இந்த நியமங்கள் விதியை மாற்ற வல்லதாகின்றன. எந்த நற்பணியை மேற்கொள்ளும் போதும் "மம உபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா" - "பலன் தர முனைந்துள்ள எனது எல்லாக் கெட்ட முன் வினைகளும் தேய்வுறச்செய்வதன்மூலம்" - என்று ஸங்கல்பம் செய்து கொள்கிறோம். அப்படி விதியை மாற்றவல்லவை இந்த ஆந்ஹிக நியமங்கள். "நான்" "எனது" என்று ஒவ்வொரு செயலிலும் அகந்தை மமதை கொள்வது இயல்பு. ஆனால் நம் நிலை அகந்தை மமதை கொள்ள சிறிதும் தக...