ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 9
ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 9 மோக்ஷஸ்வரூபம் - வீடு எது? இருள்நீங்கி இன்பம் பயக்கும் வேதாந்த நூல்களைக் குருவாயிலாகக் கேட்டு, பரம்பொருள் ஒன்றே மெய்பொருள்; அந்த பரம்பொருளே அனைத்துமாக இருக்கின்றது; உலகவேறுபாடுகள் எல்லாம் வெறும் தோற்றமாத்திரம் என்று புரிந்து கொள்வதுடன் - இந்த உண்மை நம் இதுநாள்வரையிலான அனுபவத்திற்கு மாறாக இருப்பதால் - இதில் ஏற்படுகின்ற சகலசந்தேகங்களையும் போக்கிக் கொள்ள வேண்டும். தெளிவை ஏற்படுத்திக் கொண்டபின் அந்த அறிவிலேயே மனதை நிலைநிறுத்தினால் விடுதலையானது உடனே சித்திக்கும். இந்த உலக இன்பங்களைவிட மேலான ஆனந்தம் நமக்கு இங்கேயே இப்பொழுதே கிடைக்கும். இது ஜீவன்முக்தி. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து. (திருக்குறள் 353) இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசுஅறு காட்சி யவர்க்கு. (திருக்குறள் 352) மற்றீண்டு வாரா நெறி மெய்யுணர்ந்து அவாஅறுத்து ஜீவன் முக்தரானவர் எல்லாவிதமான மனக் கவலைகளிலிருந்தும் விடுபட்டவராய், புண்ணிய பாவம் அழிந்து போனவராய் ஆகிறார். இவர் ப்ரஹ்மநிஷ்டர். இவர் பிறவிக்குக் காரணமான அஜ...