கட்டுப்பாடும் சுதந்திரமும்
தாய் குழந்தையைக் கட்டுப்படுத்துகிறாள். பெரியவர்கள் சிறியவர்களைக் கட்டுப்படுத்துகின்றனர். ஆசிரியர் மாணவனைக் கட்டுப்படுத்துகிறார். முதலாளி தொழிலாளியைக் கட்டுப்படுத்துகிறார். மதம், ஸமுதாயம், சட்டம் ஆகியவை ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்படுத்துகின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்புவரை கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ஆனால் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்பது ஒவ்வோர் உயிரின் பிரகடனமாகவும் இருக்கிறது. அப்பொழுது கட்டுப்பாடு என்பது எதற்கு? சுதந்திரதாஹமுள்ள ஓர் இளைஞன் சாலையில் ஒழுங்கின்றி குறுக்கும் நெடுக்குமாக சென்றுகொண்டிருந்தான். சாலைவிதிகளைப் பின்பற்றுவது மூடத்தனம், அடிமைத்தனம், தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்பது அவன் கருத்து. அவனது தாறுமாறான பயணத்தைத் திட்டிச் சென்றனர் சிலர். வேடிக்கை பார்த்துச் சென்றன குழந்தைகள். தங்களது திறமையால் விபத்தைத் தவிர்த்துச் சென்றனர் சிலர். எதிர்பாராத ஸமயத்தில் எதிர்பார்த்திருந்த விபத்து நடந்தது. விதிமீறிப் போனவனை விதி கொண்டு போயிற்று. அந்த கறுப்புச் சட்டைக்காரன் உடலை வெள்ளைத்துணி போர்த்தி எடுத்துச் சென்றனர். என...