Hindumatha Dharma Vilakkam - Chapter 17

ஹிந்துமத தர்ம விளக்கம் பாடம் - 17 (22.10.2020) சென்ற வாரம்… கர்மம் நல்வினை (புண்யம்) = விதி வேதத்தில் விதிக்கப்பட்டவை நித்தியம், நைமித்திகம், காமியம், பிராயச்சித்தம். தீவினை(பாபம்) = நிஷித்தம் மஹாபாதகங்கள், ஸமபாதகங்கள், உபபாதகங்கள். கர்மத்தைத் தூண்டும் வாஸனைகள் எண்ணங்களாக 16 விதம். கர்மத்தின் அடிப்படையில் பிறவிகள் புண்ணியமிகுதி, பாபமிகுதி, மிச்ரம் (இரண்டும் கலந்தது). ஒவ்வொன்றிலும் மூன்று உட்பிரிவுகள் - உத்தமம் மத்திமம் அதமம். இதனடிப்படையில் பிறவிகள். இனி... கர்மத்தைச் செய்யும் கருவிகள் மனிதன் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களால் புண்ணியம், பாபம், மிஸ்ரம் என்ற மூவிதமான செயல்களையும் செய்கின்றான். ஆகவே கர்மம் வேறு விதமாக திரும்பவும் ஒன்பது வகைப்படுகிறது. அவை மானஸபுண்ணியம், மானஸபாபம், மானஸமிச்ரம், வாசிகபுண்யம், வாசிக பாபம், வாசிகமிச்ரம், காயிகபுண்யம், காயிகபாபம், காயிகமிச்ரம். மானஸ புண்ய கர்மம் வைராக்கியம், பக்தி, ஞானம் இவற்றை பெற வேண்டும் என்றும் இவற்றின் சாதனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மனதில் நினைத்தல். பரோபகாரம் செய்யவேண்டும், ஜபம், தியானம் செய்ய வேண...