நமது குருநாதர் பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகளின் கனவாக உள்ளம் தோறும் வள்ளுவம் இருந்தது. ஒவ்வொரு இல்லத்திலும் உள்ளத்திலும் வள்ளுவம் காட்டிய அறநெறியிலான வாழ்க்கை மலர வேண்டும் என்று பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் விரும்பினார்கள். திருக்குறள் விளக்கத்தினை கற்பவை கற்போம் என வாட்ஸ்அப் இல் வெளியிட்டார்கள். திருக்குறள் மாநாடு நடத்தினார்கள். திருக்குறளை ஸனாதன தர்மத்தின் தமிழ்க் குரலாக உலகத் தமிழர்களின் உள்ளம் தோறும் விதைக்க விரும்பினார்கள். ஸனாதன தர்மத்தை எளிய தமிழில் சிறிய குறள் வெண்பாவில் வடித்துக் கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர். எல்லோரும் உள்ளத்திலும் அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை என்ற அறமும், ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து என்ற கல்வியும், ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்ற ஒழுக்கமும், எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற ஞானமும், வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் என்ற பிறவாமை வேண்டலும், ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் என்ற அரசனின் கடமையும், மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படுவார் என்ற காதலும் – பாரத ஸனாதன தர்ம வாழ்க்கையின் உறுதிப் பொருள்கள் என மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதியச் செய்ய திருக்குறளை போல் எளிய நூல் வேறு இல்லை. ஓதத் தகும் அறமெலாம் இதில் உள.
பேரன்புடன்
ஸ்ரீஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதி