வேதாந்த சாஸ்த்ர ப்ரசார ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளை வாயிலாக தேனி நகர், முல்லை ஆற்றங்கரையில் வேதபுரீ எனும் தலத்தை உருவாக்கி ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்த ஆச்ரமத்தை தோற்றுவித்தவர் பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள். வைதிக குடும்பத்தில் பிறந்து குருகுலத்தில் முறையாக வேதம் பயின்றார். பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் திருப்பராய்த்துறை ஸ்ரீராமக்ருஷ்ண தபோவன நிறுவனர் பரமபூஜ்யஸ்ரீ சித்பவாநந்த ஸ்வாமிகளிடம் ஸந்யாஸ தீக்ஷை பெற்றார். ஜகத்குரு பரமபூஜ்ய ஸ்ரீஸ்வாமீ தயாநந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மாணவர்களில் தலைசிறந்தவரான பரமபூஜ்யஸ்ரீ பரமார்த்தாநந்தர் அவர்களிடம் வேதாந்தம் பயின்றவர். ஸம்ஸ்க்ருதம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் நல்ல புலமைபெற்ற பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் ஆழ்ந்த வேதாந்தக் கருத்துக்களை பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில் எடுத்துரைத்தவர். பாரதப் பண்பாட்டையும் வேதாந்த தத்துவத்தையும் உலகம் முழுவதும் பரவச்செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர்.
Through the Vedanta Sasthra Prachara Trust, Pujyasri Omkarananda Mahaswamigal created Vedapuri on the banks of the Mullai river in Theni town, and founded the Sri Swami Chidbhavananda Ashramam. Born in a Vedic family, he studied the Vedas in the traditional Gurukula system. Pujyasri Swamigal received Sannyasa Deeksha from Paramapujyasri Chidbhavananda Swamigal, the founder of Sri Ramakrishna Tapovanam, Tirupparaithurai. He studied Vedanta under Paramapujyasri Paramarthananda, the foremost among the disciples of Jagadguru Paramapujya Sri Swami Dayananda Saraswati Swamigal. Well-versed in both Sanskrit and Tamil, Pujyasri Swamigal expounded profound Vedantic truths in a simple style, so that even ordinary people could understand them. He made it his life's mission to spread Bharata's culture and Vedantic philosophy throughout the world.