அறத்துப்பால்
பாயிரம் | PROLOGUE
அதிகாரம் 1 | CHAPTER 1
அறத்துப்பால்
பாயிரம் | PROLOGUE
அதிகாரம் 1 | CHAPTER 1
இறைவணக்கம் - கடவுளை வணங்குதல் | Worshipping God
குறள்கள் 1 - 10
1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. இருவினையும் சேரா இறைவன்
6. பொறிவாயில் ஐந்தவித்தான்
7. தனக்குவமை இல்லாதான்
8. அறவாழி அந்தணன்
9. எண்குணத்தான்
10. இறைவன்
1 & 2. கடவுளை அறிவால் அறிதல் - கடவுளைப் பற்றிய ஞானத்தை கல்வி, கேள்விகளால் அடைதல்
3. மாணடி சேர்தல் = சரணடைதல் - மனதால் வணங்குதல் - ஜபம், தியானம்
4. அடி சேர்தல் = விருப்பு வெறுப்புகள் நீக்குதல்
5. பொருள் சேர் புகழ் புரிதல் = வாக்கால் புகழ்ந்து பாடுதல் - பாராயணம்
6. பொறிவாயில் ஐந்தவித்து பொய்தீர் ஒழுக்கநெறி நிற்றல் = அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை
7. தாள் சேர்தல் = ஒரே இலக்கு (புகலிடம்) இறைவன் என இருத்தல்
8. தாள் சேர்தல் = அறவாழ்க்கை வாழ்தல்
9. தலையால் தாளை வணங்குதல் = உடலால் வணங்குதல்
10. பரிபூர்ண சரணாகதி - ஞானத்தைப் பெறுதல் - இறைவனன்றி வேறொன்றுமில்லை என நானற்று இருத்தல்.
நேர்மறையாகக் கூறுதல் - நன்மைகள்
● நிலமிசை நீடுவாழ்தல் - புகழ் உடம்போடு வாழ்தல்
●யாண்டும் இடும்பை இல (இடும்பை = துன்பம்)
● இருவினையும் சேரா - புண்ய பாபத்திலிருந்து விலக்கு
● நீடுவாழ்தல் - நீண்ட ஆயுள்
எதிர்மறையாகக் கூறுதல் - கேடுகள்
● மனக்கவலை மாற்றல் அரிது - கவலைகள் நீங்காது. (வணங்குபவர்களுக்குக் கவலை நீங்கும்)
● பிறவாழி நீந்தல் அரிது. பிற ஆழி = பொருள், இன்பம். (வணங்குபவர்கள் பொருள் இன்பத்தைக் கடப்பர்)
● கோளில் பொறியில் குணம் இலவே = பிறவி வீணானது. (வணங்குவதால் மனிதப் பிறவி பயனுள்ளதாகிறது)
● பிறவிப் பெருங்கடல் நீந்தார் = முக்தி இல்லை. (வணங்கினால் பிறவாநிலை எனும் வீடுபேறு கிடைக்கும்).
╭──────────────────────╮
✦ குறள் 1 | KURAL 1 ✦
╰──────────────────────╯
அகர முதலஎழுத் தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
எழுத்துக்கள் அனைத்தும் அ என்னும் எழுத்தை முதலாக (காரணமாக) உடையன. அது போல உலகமனைத்தும் கடவுளை முதலாக (காரணமாக) உடையதே ஆகும்.
📖 Meaning:
All letters have the letter 'A' as their first (cause). Similarly, the entire world has God as its first (cause).
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
ஆதிபகவன் → உலகின் இருப்பிற்கும் இயக்கத்திற்கும் காரணமாக இருக்கும் முதற்பொருள்.
மூலப்பொருள் மற்றும் அறிவுக்காரணம் இரண்டும் இறைவனே சிலந்திப் பூச்சி போல.
┌── 🕉️ காரணம் - கடவுள் ──┐
│ ★ ஒன்று
│ ★ நித்யம் - நிரந்தரம்
│ ★ ஸத்யம் - உண்மை
└─────────────────────────┘
┌── 🌍 காரியம் - உலகம் ──┐
│ ☆ பல
│ ☆ அநித்யம் - தாற்காலிகம்
│ ☆ மித்யா - பொய்த் தோற்றம்
└─────────────────────────┘
"💡எடுத்துக்காட்டு -🏺மண் - பானை, ✨தங்கம் - நகை"
╔══════════════════════════╗
🕉️ ✦ பகவன் ✦ 🕉️
╚══════════════════════════╝
🛕(விஷ்ணு புராணம் 6.5.74) 🛕
ऐश्वर्यस्य समग्रस्य धर्मस्य यशसः श्रियः ।
वैराग्यस्याथ मोक्षस्य षण्णां भग इतीरणा ।।
ஐஶ்வர்யஸ்ய ஸமக்³ரஸ்ய த⁴ர்மஸ்ய யஶ்ஸ꞉ ஶ்ரிய꞉ |
வைராக்³யஸ்யாத² மோக்ஷஸ்ய ஷண்ணாம் ப⁴க³ இதீரணா ||
─────── ⋆ ───────
➤ ஆளும் தன்மை, அறம், புகழ், செல்வம், பற்றின்மை, மோக்ஷம் என்ற இவ்வாறும் ‘பக' என்று சொல்லப்படுகிறது. (இவ்வாறும் எவரிடம் முழுமையாக இருக்கிறதோ அவருக்கு பகவான் என்று பெயர்.)
❖ ── ✦ ── ❖
🛕 (விஷ்ணு புராணம் 6.5.78) 🛕
उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम् ।
वेत्ति विद्यामविद्यां च स वाच्यो भगवानिति ।।
உத்பத்திம் ப்ரலயம் சைவ பூ⁴தாநாமாக³திம் க³திம் |
வேத்தி வித்³யாமவித்³யாம் ச ஸ வாச்யோ ப⁴க³வாநிதி ||
─────── ⋆ ───────
➤ உயிர்களுடைய உற்பத்தி, ப்ரலயம், செல்வத்தின் போக்கு, வரவு, உலகியல் அறிவு, ஆன்மிக அறிவு ஆகியவற்றை அறிந்தவர் என்பது பகவான் என்னும் சொல்லின் பொருளாகும்.
╭──────────────────────╮
✦ குறள் 2 | KURAL 2 ✦
╰──────────────────────╯
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்.
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
அனைத்தையும் அறிந்தவனுடைய நல்ல திருவடிகளை தொழவில்லை என்றால், படித்ததனால் ஆகும் பயன் என்னதான் இருக்கிறது? (பயன் ஒன்றும் இல்லை என்பது கருத்து).
📖 Meaning:
If a person does not worship the holy feet of God, who knows everything, then what is the use of all the education he has gained? It means that without worshipping God, all learning becomes useless and gives no real benefit.
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
வாலறிவன் → அனைத்தும் அறிந்தவன் = ஸர்வஜ்ஞன்
🌼விளக்கவுரை :
கல்வியின் பயன் அறிவு. அறிவின் பயன் ஆராய்ச்சி. உலகில் அனைத்தும் காரண காரியமாக இருக்கிறது. அனைத்திற்கும் மூலமாக தனக்குக் காரணம் இல்லாத ஒரு காரணம் இருக்க வேண்டும். அது அனாதி காரணம். இந்த விவேகம் வரவில்லை யென்றால் ஒருவன் படித்துப் பயனில்லை.
─────── ⋆ ───────
➤ கடவுளைக் கண்டுபிடுத்தவன் காட்டுமிராண்டி அல்ல.
➤ கடவுளை அறிதலே பகுத்தறிவின் பயன்.
╭──────────────────────╮
✦ குறள் 3 | KURAL 3 ✦
╰──────────────────────╯
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
உள்ளமாகிய (தாமரை) மலரில் எப்பொழுதும் இருக்கின்ற (இறைவனுடைய) மாண்புடைய திருவடிகளை தியானிப்பதன் மூலம் கடவுளை இடைவிடாது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் (பேரின்பமாகிய) நிலத்தில் எப்பொழுதும் வாழ்வார்கள் (இருப்பார்கள்).
📖 Meaning:
Those who constantly meditate and think of God without a break, by focusing on His glorious holy feet that always remain in the lotus-like heart, will forever live (remain) in the land of supreme bliss.
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
நிலமிசை நீடு வாழ்வார் → நீண்ட புகழொடு வாழ்வார்.
🌼விளக்கவுரை :
காரியங்கள் அனைத்துள்ளும் காரணம் இருக்கிறது. ஸத்தாகவும் சித்தாகவும் கடவுள் அனைத்துள்ளும் இருக்கிறார். தன்னை அறியும் அறிவாக மனதிற்கு சாட்சியாக இறைவன் இருக்கிறார்.
─────── ⋆ ───────
╭──────────────────────╮
✦ குறள் 4 | KURAL 4 ✦
╰──────────────────────╯
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
விருப்பு வெறுப்பு இல்லாத (இறைவனுடைய) திருவடிகளைச் சார்ந்திருப்பவர்களுக்கு ஒருபொழுதும் துன்பமானது இல்லை.
📖 Meaning:
Those who take refuge in the holy feet of God, who has no likes or dislikes, will never have any suffering at any time.
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
வேண்டுதல் வேண்டாமை இலான் → விருப்புவெறுப்பு இல்லாதவர்
இடும்பை → துன்பம்.
╭──────────────────────╮
✦ குறள் 5 | KURAL 5 ✦
╰──────────────────────╯
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு .
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ள கடவுளை பொருள் நிறைந்த (அர்த்தமுள்ள) புகழ் மொழிகளால் (துதிப் பாடல்களால்) வாயாரப் பாடுகின்றவர்களுக்கு அறியாமையைச் சார்ந்துள்ள நல்வினைப் பயனாகிய இன்பமும், தீவினைப் பயனாகிய துன்பமும் உள்ளத்தின் சீரான அமைதியைக் குலைக்காது.
📖 Meaning:
Those who wholeheartedly sing meaningful hymns of praise to God, who pervades and exists everywhere, will not have their inner peace disturbed by the pleasures arising from good deeds or the sufferings resulting from evil deeds, both of which are rooted in ignorance.
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
இருவினை → புண்ய பாபம் .
🌼விளக்கவுரை :
நிலமிசை நீடு வாழ்வார் இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு இருவினையும் சேரா.
─────── ⋆ ───────
╭──────────────────────╮
✦ குறள் 6 | KURAL 6 ✦
╰──────────────────────╯
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
புண்ணியக் கடலாகிய மறைகளின் மையக் கருத்தாகிய கடவுளின் திருவடிகளைச் சார்ந்திருப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) பொருள், இன்பமாகிய பிற கடல்களைக் கடப்பது மிகக் கடினமானது (இயலாது).
📖 Meaning:
Those who do not seek refuge at the sacred feet of God, who is the very essence and central truth of the Vedas—the ocean of virtue—will find it extremely difficult, if not impossible, to cross the vast oceans of material wealth and worldly pleasures.
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
அற ஆழி → பொறிவாயில் → அறிவுக் கருவிகள்
அவித்தான் → வென்றான்
பொய்தீர் ஒழுக்கநெறி → பொய்யாமறையாகிய வேதநெறி.
╭──────────────────────╮
✦ குறள் 7 | KURAL 7 ✦
╰──────────────────────╯
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
தனக்கு ஒப்பும் உயர்வும் அற்ற இறைவனுடைய திருவடிகளைச் சார்ந்திருப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) மனதில் தோன்றி வருத்தும் துன்ப எண்ணங்களை மாற்றுவது (நீக்கி இன்பமடைவது) மிகக் கடினமானது (இயலாது).
📖 Meaning:
Those who do not seek refuge at the sacred feet of God, who has neither an equal nor a superior, will find it extremely difficult, if not impossible, to overcome the distressing thoughts that arise in their minds and attain inner peace and happiness.
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
தனக்குவமை இல்லாதான் → ஒப்பு உயர்வு அற்றவன்.
╭──────────────────────╮
✦ குறள் 8 | KURAL 8 ✦
╰──────────────────────╯
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
புண்ணியக் கடலாகிய மறைகளின் மையக் கருத்தாகிய கடவுளின் திருவடிகளைச் சார்ந்திருப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) பொருள், இன்பமாகிய பிற கடல்களைக் கடப்பது மிகக் கடினமானது (இயலாது).
📖 Meaning:
Those who do not seek refuge at the sacred feet of God, who is the very essence and central truth of the Vedas the ocean of virtue will find it extremely difficult, if not impossible, to cross the vast oceans of material wealth and worldly pleasures.
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
அற ஆழி → அற ஆழி = தர்மஸாகரம் = அறக்கடல்.
அந்தணன் = அந்தத்தை அணவுபவன் அந்தம் - வேதாந்தம் எனப்படும் உபநிஷத்துகள். உபநிஷத்துகள் வாயிலாக அறியப்படுபவன்.
பிற ஆழி = பொருள், இன்பம்.
╭──────────────────────╮
✦ குறள் 9 | KURAL 9 ✦
╰──────────────────────╯
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
பொறிவாயில்களில் (இந்திரிய கோளகங்களில்) ஆற்றல் இல்லையென்றால் (கோளகங்கள் பயனற்றது போல) எட்டு குணங்களை சிறப்பாக உடைய (இறைவனுடைய) திருவடிகளை (பணிந்து) வணங்காத தலை (முதலான உடல் உறுப்புகள்) இருந்தும் பயன் இல்லாதது.
📖 Meaning:
Just as the sense organs are useless when they lack the ability to perform their respective functions, the head (and other bodily parts) is of no use if it does not bow in reverence and worship at the sacred feet of God, who is distinguished by His eight divine qualities.
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
எண்குணத்தான் → எண்ணுதற்கரிய குணங்களை உடையவன் (அ).
🌼விளக்கவுரை :
எட்டு குணங்களை உடையவன்.
தன்வயத்தனாதல்: தன்னுடைய செயல்களில் தானே கட்டுப்பாடு உடையவன்.
தூய உடம்பினனாதல்: தூய்மையான உடல் கொண்டவன்.
இயற்கை உணர்வினனாதல்: இயற்கையான அறிவைக் கொண்டவன்.
முற்றுமுணர்தல்: எல்லாம் அறிந்தவன்.
இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல்: இயல்பாகவே பந்தங்களிலிருந்து விடுபட்டவன்.
பேரருளுடைமை: மிகுந்த கருணை உடையவன்.
முடிவிலாற்றலுடைமை: எல்லையற்ற ஆற்றல் உடையவன்.
வரம்பிலின்பமுடைமை: எல்லையற்ற இன்பம் உடையவன்.
─────── ⋆ ───────
╭──────────────────────╮
✦ குறள் 10 | KURAL 10 ✦
╰──────────────────────╯
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.
──────── ⋆ ────────
📖பொருள் : 📖
காலமனைத்திலும் நிறைந்திருக்கின்ற கடவுளுடைய திருவடிகளைச் சார்ந்திருப்பவர்கள் பிறப்பு இறப்புச் சுழல் நிறைந்த பெருங்கடலைக் கடப்பார்கள். இறைவனுடைய திருவடிகளைச் சார்ந்திராதவர்கள் பிறப்பு இறப்புச் சுழல் நிறைந்த பெருங்கடலைக் கடக்க மாட்டார்கள்.
📖 Meaning:
Those who seek refuge at the sacred feet of God, who exists eternally throughout all time, will cross the vast ocean of the cycle of birth and death. Those who do not seek refuge at the sacred feet of God will not be able to cross this vast ocean of birth and death.
✦ ───────── ✦
🌸அருஞ்சொற்பொருள்: 🌸
நீந்துவர் → கடப்பர் = பிறவாநிலை அடைவர்.
அடிசேர்தல் → ஞானத்தினால் இரண்டற்ற நிலை அறிதல்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் குறள்களையும் அவற்றின் விளக்கங்களையும் அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்களைக் காணுங்கள்.
Watch the videos given below to learn the ten Kurals in the chapter Kadavul Vaazhthu (Praise of God) and understand their meanings and explanations.