Posts

Showing posts from January, 2022

Gita Saara Thalattu கீதாசாரத்தாலாட்டு பதவுரையுடன்

ௐ கீதாசாரத் தாலாட்டு நூலாக்கம்: திருவேங்கடநாதர் விளக்கம்: ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ தமிழர்கள் அனைவரும் அறிந்தது தாலாட்டு. ஒரு தமிழ்த்தாய் கண்ணன் சொன்ன கீதையை, கண்ணனையே குழந்தையாக்கி தாலாட்டாகப் பாடுகிறாள். அதுவே கீதா சாரத் தாலாட்டு.  கீதை இறுதிக்காலத்தில் படிப்பது அல்ல; இருக்கும் காலத்தில் படிக்கவேண்டியது. ஏனெனில், கீதை வாழ்க்கையைக் கவலையின்றி வாழச் சொல்லித் தருகிறது, நம்மை நாம் ஆளச் சொல்லித் தருகிறது, மரணத்திலிருந்து மீளச் சொல்லித் தருகிறது, பிறவி‌ கடைத்தேறச் சொல்லித் தருகிறது.  உலகம் விழிக்கப் பாடிய பாடலைப், பாடினவனை உறங்கச் செய்யப் பாடிய பாடலிது! படைத்தவன் சொன்ன வழி படித்தவன் நடந்தால் படைத்தவனுக்குப் பாரில் என்ன வேலை? பாற்கடலில் தான் பாடியதையே கேட்டுப் பள்ளி கொள்ளவேண்டியது தானே!  கண்ணன் கேட்டுத் துயிலும் அத்தாலாட்டை, நாமும் கேட்டுக் கவலையின்றி  பள்ளி கொள்வோம் பரந்தாமன் போல், சோகம் விட்டு யோக நித்திரையில்! முகவுரை தொண்டை நாட்டில் மாதை எனப்படும் திருவாமாத்தூர் என்னும் ஊரின் சிற்றரசராக விளங்கியவர் இந்நூலாசிரியரான திருவேங்கடநாதர். இவருக்கு இரு மகள்கள் இருந்தனர். இவ...