Prátah smaranam प्रात: स्मरणम्
प्रात: स्मरणम्
प्रात: स्मरामि ह्रदि संस्फुरदात्मतत्त्वं
सच्चित्सुखं परमहंसगतिं तुरीयम् ।
यत्स्वप्नजागरसुषुप्तिमवैति नित्यं
तद्ब्रह्म निष्कलमहं न च भूतसंघ: ।।1।।
प्रातर्भजामि मनसा वचसामगम्यं
वाचो विभान्ति निखिला यदनुग्रहेण ।
यन्नेतिनेतिवचनैर्निगमा अवोचुः
तं देवदेवमजमच्युतमाहुरग्रयम् ।। 2 ।।
प्रातर्नमामि तमस: परमर्कवर्णं
पूर्णं सनातनपदं पुरुषोत्तमाख्यम् ।
यस्मिन्निदं जगदशेषमशेषमूर्तौ
रज्ज्वां भुजंगम इव प्रतिभासितं वै ।। 3 ।।
Prátah smaranam
Prátah smarámi hrudi samsphuradátmatattvam
saccitsukham paramahamsagatim turèyam
yatsvapna jágarasussuptamavaiti nityam
tadbrahma niskalamaham na cha bhutasañgha ॥ 1 ॥
Pratarbhajámi manasá vacasámagamyam
vacho vibhánti nikhilá yadanugrahena
yanneti neti vacanair nigamá avocuhu
tam devadevamajam achyutam áhur agryam ॥ 2 ॥
Prátarnamami tamasah paramarkavarnam
pürnam sanátanapadam purushottamaakhyam
yasminnidam jagadaseshamaseshamurtau
rajjvaam bhujamgama iva pratibhasitam vai ॥ 3 ॥
ப்ராத : ஸ்மரணம்
ப்ராத:ஸ்மராமி ஹ்ருதி ஸம்ஸ்புரதாத்மதத்வம்
ஸச்சித்ஸுகம் பரமஹம்ஸகதிம்துரீயம்!
ய:ஸ்வப்நஜாகர ஸுஷுப்திமவைதி நித்யம்
தத்ப்ரஹ்ம நிஷ்கலமஹம் நச பூதஸங்க: !! 1 !!
ப்ராதர்பஜாமி மனஸா வசஸாமகம்யம்
வாசோ விபாந்தி நிகிலா யதனுக்ரஹேண!
யம் நேதி நேதிவசநைர்நிகமா அவோசு:
தம் தேவதேவம் அஜமச்யுதமாஹுரக்ர்யம்! ! 2 !!
ப்ராதர்நமாமி தமஸ: பரமர்கவர்ணம்
பூர்ணம் ஸநாதனபதம் புருஷோத்தமாக்யம்!
யஸ்மின் இதம் ஜகதசேஷ மசேஷ மூர்த்தௌ
ரஜ்வாம் புஜங்கம இவ ப்ரதிபாஸிதம் வை !! 3 !!
பொருள் :
இதயத்தில் நன்றாக விளங்கிக் கொண்டிருக்கும் ஆத்ம தத்துவத்தை காலையில் நினைக்கிறேன். ஸச்சிதானந்தமாகவும் பரமஹம்ஸர்களால் அடையப்படுவதாகவும், துரியமாகவும், எது கனவு நனவு தூக்கம் இவைகளில் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த தூய்மையான பிரம்மமே நான், இந்த (பஞ்ச) பூதக் கூட்டமான உடல் நானல்ல. (1)
மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாததாகவும், எதனுடைய அருளினால் அனைத்து வாக்குகளும் விளங்கிக்கொண்டு இருக்கின்றனவோ, எதை ஆகமங்கள் இது இல்லை இது இல்லை என்ற வாக்கியங்களால் விவரிக்கின்றனவோ, அந்த தேவர்களுக்கெல்லாம் தேவனான பிறப்பற்ற அழிவற்ற முதற்பொருளை காலையில் வணங்குகிறேன். (2)
இருளுக்கு மேலான சூரியப் பிரகாசத்தை, பூர்ணமானதை, புருஷோத்தமன் என்று பெயரிய என்றுமுள்ள பதத்தை, எந்த இறைவனிடத்தில் இந்த உலகம் முழுவதும் மிச்சமில்லாமல் முழுமையாக கயிற்றில் பாம்புபோல விளங்கிக் கொண்டிருக்கிறதோ (அந்தப் பரம்பொருளை) காலையில் வணங்குகிறேன். (3)
Comments