Hindumatha Dharma Vilakkam - Chapter 13

 


ஹிந்துமத தர்ம விளக்கம்


பாடம் -13


ஞானம்


உலகம், ஜீவன், ஈச்வரன், பரமாத்மா.


பரமாத்மா = ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம.

(அ) ஸச்சிதாந்தம் ப்ரஹ்ம.


மாயை = ஸத்துவம் ரஜஸ் தமஸ்.


ப்ரஹ்மம் + ஸத்துவ குண பிரதான மாயை + பிரதிபிம்ப சைதந்யம் = ஈச்வரன்


ப்ரஹ்மம் +ரஜோகுணப் பிரதான மாயை + பிரதிபிம்ப சைதந்யம் = ஜீவன்


ப்ரஹ்மம் + தமோகுண ப்ரதான மாயை = ஜடப்ரகிருதி (உலகம்)


ஸூக்ஷ்ம பஞ்சபூதங்கள்


சூக்ஷ்ம பஞ்சபூதங்களின் ஸத்துவத்திலிருந்து ஞான இந்திரியங்கள் + மனம்.

ரஜஸிலிருந்துலிருந்து கர்ம இந்த்ரியங்கள் + ப்ராணன்.

சூக்ஷ்ம சரீர தத்துவங்கள் 19

மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் - 4 ஞானேந்திரியங்கள் - 5 கர்மேந்திரியங்கள் - 5

ப்ராணன் - 5


ஸூக்ஷ்ம பஞ்சபூதங்கள் ஒன்று கலந்து ஸ்தூல பஞ்சபூதங்கள் ஆகிறது. இது பஞ்சீகரணம் எனப்படுகிறது.


தூலபஞ்சபூதங்களிலிருந்து தூல உடல். தூல உடல் ஸப்த தாதுக்களைக் கொண்டது. அவை : தோல், சதை, எழும்பு, மஜ்ஜை, ரத்தம், நரம்பு, விந்தணு(ஆண்) கருமுட்டை (பெண்).


பரமாய சக்தியுள் பஞ்சபூதம் தாமமாறில் தோன்றும் பிறப்பு. ஔவைக்குறள் (1.2)


ச்ருஷ்டி ஆரம்பத்தில் மனிதர்கள் சுகமாக வாழ்வதற்காக 8 சித்திகள் ச்ருஷ்டிக்கப்பட்டன.

1.பசி, தாகம், காமம் இன்றி இருத்தல்.

2. ஒரு விஷயத்திலும் ஆசை இல்லாது எப்போதும் திருப்தியோடு இருத்தல்.

3.இது மேலானது, தாழ்ந்தது என்ற பேதமற்றிருத்தல். 4.எல்லாவற்றையும் சமமாக பாவித்தல். 5.மனதிலும் உடலிலும் அதிக பலத்துடன் இருத்தல். 

6.பரமாத்மாவிடம் தியான நிட்டை கொண்டிருத்தல். 7. இஷ்டப்படி சஞ்சரித்தல்.

8.இஷ்டமான  இடத்தில் வீற்றிருத்தல்.

  • விஷ்ணுபுராணம் (1.6.14-41)


ப்ரளயம்

பிரளயம் நான்கு வகைப்படும். நித்தியம் நைமித்திகம் பிராகிருதம் ஆத்யந்திகம்.


நித்திய ப்ரளயம் - தூக்கம்


நைமித்திக ப்ரளயம் 

பிரம்மாவின் இரவு - தூக்கம்.

அவாந்தரப் பிரளயம் என்றும் தினப் பிரளயம் என்றும் வேறு பெயருண்டு.


கால அளவு

18 இமைக்கொட்டுகள் = 1 காஷ்டை

18 காஷ்டைகள் = 1கலை

30 கலைகள் = 1 முகூர்த்தம் (இரண்டு நாழிகை)

30 முகூர்த்தம் ( 60 நாழிகை) = 1நாள்

15 நாட்கள் = ஒரு பக்ஷம்

இரண்டு பக்ஷங்கள் = ஒரு மாதம் (பித்ருக்களுக்கு ஒருநாள்)

12 மாதங்கள் = 1 வருடம்

(இது தேவர்களுக்கு ஒரு நாள்) 

17 லட்சத்து 28 ஆயிரம் வருடங்கள் = கிருதயுகம்

12 லட்சத்து 96 ஆயிரம் வருடங்கள் = திரேதாயுகம்

8 லட்சத்து 64 ஆயிரம் வருடங்கள் = துவாபரயுகம் 

4 லட்சத்து 32 ஆயிரம் வருடங்கள் = கலியுகம்.

4 யுகங்கள் = சதுர்யுகம் அல்லது மகாயுகம்.

(இது தேவர்களுக்கு ஒரு யுகம்.


1000 சதுர்யுகங்கள் =  பிரம்மாவுக்கு ஒரு பகல்

இதைப்போலவே ஒரு  இரவு.


பிரம்மாவின் பகல் சிருஷ்டி கல்பம் - இரவு க்ஷயகல்பம்.

பிரம்மாவின் இரவு காலமே பிராணிகளுக்கு நைமித்திக பிரளயம். இது அவாந்தர பிரளயம், தினப்பிரளயம் என்றும் சொல்லப்படும்.


பிராகிருதப் பிரளயம்

பிரம்மாவின் நூறு வயது (100 ஆண்டுகள்) = பரம்.

அதன் முன்பாதி (முதல் 50 வருடங்கள்) = முதல் பரார்த்தம்

பின்பாதி = இரண்டாம் பரார்த்தம்.

அவரது ஆயுள் முடிவு பிராகிருதப் பிரளயம் அல்லது மகா பிரளயம். 

இது ஒரு மகாகல்பம்.


இன்றைய காலக் கணக்கு

தற்போதைய பிரம்மாவின் முதல் பரார்த்தம் ஆகிய 50 வயதுகள் சென்றன. இரண்டாம் பரார்தத்தில்

முதல் வருடத்தில் முதல் மாதத்தில் முதல் தினம். இது ஸ்வேத வராக கல்பம். 14 மனுக்கள். ஒரு மனுவின் காலம் 71 சதுர் யுகங்கள். ஏழாவதுவைவஸ்வத மனுவின் 28 வது சதுர்யுகத்தின் கலியுகத்தில் தற்போது 5122.


எந்த சாதுக்கள் பிரம்ம லோகத்தை அடைந்து எப்பொழுதும் ஈஸ்வர தியானத்தில் இருக்கிறார்களோ, அவர்களும் ப்ரம்மாவுடன் சேர்ந்து மகா பிரளயத்தில் முக்தி பெறுகின்றனர் இதுவே கிரம முக்தி எனப்படும்.


இவ்வாறு பல பிரம்மாக்கள் வந்து போயிருக்கிறார்கள்.

இவ்விதம் பகவான் தனது சக்தியை அடிக்கடி பரவச் செய்து கொண்டும் சுருக்கிக் கொண்டும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் என்ற காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். இது பகவானுக்கு ஸ்வபாவம். (இது பகவானின் போகத்தின் பொருட்டோ இச்சையின் பொருட்டோ லீலையின் பொருட்டோ அல்ல.)


4. ஆத்யந்திக ப்ரளயம்

தத்துவ ஞானத்தினால் ஆத்மாவை பிரத்யக்ஷமாக அறிகின்ற யோகேஸ்வரன் பரமாத்மாவிடம் லயித்திருப்பது ஆத்யந்திக ப்ரளயம் எனப்படும். பிறப்பில்லாத முடிவான ப்ரளயம் என்று பொருள். முதல் மூன்று ப்ரளயங்களிலும் லயம் அடைகின்ற ஜீவர்கள் மீண்டும் பிறக்கின்றனர்.


சிவனுருவந்தானாய்ச் செறிந்து அடங்கி நிற்கில் பவநாசமாகும் பரிந்து. 

-ஔவைக்குறள் 18.3

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101