Posts

Showing posts from September, 2020

Hindu matha Dharma Vilakkam - Chapter 14

Image
  ஹிந்து மத தர்ம விளக்கம் பாடம் - 14 ப்ரமாணங்கள் (24.09.2020) சென்ற வாரம்... உலகின் தோற்றமும் ஒடுக்கமும் பரமாத்மாவின் சக்தியாகிய மாயையிலிருந்து உலகம் தோன்றியது. ப்ரளயகாலத்தில் மாயையிலேயே ஒடுங்குகிறது. பரமாத்மா நித்யமானவர் (தோற்றமும் மறைவுமில்லாதவர்). தோன்றிமறைகின்ற உலகம் அநித்யமானது. நித்யமானதின்மேல் அநித்யமானது தோன்றிமறைகிறது. அநித்யமான அனைத்துள்ளும் நித்யமானது இருக்கிறது. நித்யமானதை அறிந்துகொள்வது எப்படி? ஞானத்தினால் கடவுள் காட்சி! மெய்ப்பொருள் காண்பது அறிவு - அறிவு ஒன்றே மெய்ப்பொருளைக் காட்டக்கூடியது - திருக்குறள். கண்களாலும் வாக்கினாலும் மற்றவைகளாலும் அவன் அறியப்படுகிறானில்லை. நற்கருமங்களினாலும், தபசினாலும், சுத்தமான சத்துவ குணம் பொருந்திய மனதுடையவனும் இடையறாது தியானம் செய்கிறவனுமான மனிதன் ஞானத்தினால் அவனைப் பார்க்கிறான். முண்டக உபநிஷத்.  ஞானம் எப்படி வரும்? ஞானம் கல்வி கேள்விகளால் வரும். கற்றனைத் தூறும் அறிவு - திருக்குறள். ஞான ப்ரமாணங்கள் (ஞான ஸாதனங்கள் - அறிவைத் தரும் கருவிகள்) உள்ளதை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு சாதனம் - கருவி -...

Kaivalya Navanitham 1 (21-40)

Image
கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப் படலம் பாடல் :21 இப்படிப் போன்ற நாம ரூபங்கள் இரண்டும் இன்றி, ஒப்பமாய் இரண்டற் றொன்றாய் உணர்வொளி நிறைவாய் நிற்கும், அப்பிர மத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம், செப்புகற் பனையி னாலே செனித்தவென் றறிந்து கொள்ளே. பொருள்: இப்படிப் போன்ற = சென்ற பாடலில் சொன்ன ஆரோப உதாரணங்கள் போல, நாம ரூபங்கள் இரண்டும் இன்றி ஒப்பமாய் = பெயர் வடிவங்கள் இரண்டும் இல்லாமல் சமமாக, இரண்டற்று ஒன்றாய் = தனக்கு வேறாக இரண்டாவதாக ஒரு பொருள் இல்லாமல் தான் மாத்திரம் ஒன்றாக,  உணர்வு, ஒளி, நிறைவாய் நிற்கும் அப்பிரமத்தில் = அறிவாய் பிரகாசமாய் எங்கும் நிறைந்ததாய் நிலைமாறாமல் இருக்கும் அந்த ப்ரஹ்மத்தில்,  தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம் = இருப்பதாக தோன்றுகின்ற பஞ்சபூத காரியங்கள் அனைத்தும், செப்பு கற்பனையினாலே = அத்தியாசம் என்று சொல்லப்பட்ட கற்பனையினாலே,  செனித்தவென்று அறிந்து கொள்ளே = தோன்றியது என்று அறிந்து கொள்வாயாக. இரண்டற்ற = ஸஜாதீய, விஜாதீய, ஸ்வகத பேதமற்றது. அத்வைதம் சமமாய் = ஸர்வவ்யாபகமாய் உணர்வு = ஞானஸ்வரூபம் ஒளி = ஸ்வயம் ப்ரகாச சைதந்ய ஸ்வரூபம். நிறைவு = பூர்ணம...