Posts

Showing posts from May, 2021

Kaivalya Navanitham 1(81-101)

  கைவல்ய நவநீதம் தத்துவ விளக்கப் படலம் பாடல் : 81 நீநானென் றிரண்டி லாமல் நிறைந்தபூ ரணமாய் எங்கும், நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே என்றான், தானாகும் பிரம ரூபம் சற்குரு நூலால் தோன்றும், ஆனாலும் தடைகள் உண்டேல் அனுபவம் உறைத்தி டாதே. பொருள் : நீ நான் என்று = -நீ என்றும் நான் என்றும், இரண்டு இலாமல் = வேறுபாடு தோன்றாமல், நிறைந்த பூரணமாய் = நிறைந்த பரிபூரணமாய், எங்கும் நானாக = எல்லா இடங்களிலும் சின்மயனான நானொருவனே உளனாக, தெளிந்த ஞானம் = அநுபவமாக அறிந்த ஞானம், நழுவுமோ குருவே என்றான் = நீங்குமோ ஆசார்யரே, என்று கேட்டான். தானாகும் பிரமரூபம் = தன்மயமாகும் பிரஹ்ம ரூபமானது, சற்குரு நூலால் தோன்றும் = ஸற்குரு உபதேசத்தாலும் சஸ்த்ர விசாரத்தாலும் உண்டாகும், ஆனாலும் = இப்படி ப்ரஹ்ம அனுபவம் உளதானாலும், தடைகள் உண்டேல் = தடைகள் உண்டாகுமானால்,, அனுபவம் உறைத்திடாதே = ஏற்பட்ட அனுபவம் நிலைபெறாது. பாடல் :82 தடையெவை யெனில் அஞ்ஞான சந்தேக விபரீ தங்கள், படர்செயும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே, உடனுடன் வரும்வந் தக்கால் உயர்ஞானம் கெடும்இ வற்றைத், திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளித ல...