Posts

Showing posts from May, 2020

How to meditate ? தியானம் செய்வது எப்படி ?

🕉️ தியானம் செய்யும் முறை தியானம் செய்வதற்கேற்ற வகையில் முறையாக அமர வேண்டும். முதுகு, கழுத்து, தலை நேராக இருக்க வேண்டும். கண்கள் ம்ருதுவாக மூடப்பட்டிருக்க வேண்டும். கைகள் மடிமீது கிடத்தப்பட்டிருக்க வேண்டும். தலை உயர்ந்தோ, தாழ்ந்தோ இல்லாமல் நேராக இருக்க வேண்டும். உடல் அதிக விரைப்பாகவோ தொய்வாகவோ இல்லாமல் இயல்பாக இருக்க வேண்டும். தியானத்தின்   நிலைகள் 1.சமத்தியானம் அ) சரீர சமத்தியானம்  ஆ)ப்ராண சமத்தியானம் இ) மன சமத்தியானம் 2.ஸமாதான தியானம் அ) மானஸ பூஜா  ஆ) மானஸ பாராயணம் இ) மானஸ ஜபம் ஈ) ஸகுண ப்ரஹ்ம தியானம் 3. ஸத்குண தியானம் அ) குண ஆதானம் ஆ)தோஷ அபஹனனம் 4. விச்வரூப தியானம் 5. நிர்குண ப்ரஹ்ம தியானம் தியானம் - கவனிக்க வேண்டியவை தேசம் - இடம் மேடு பள்ளமற்ற ஸமதளமான தூய்மையான இடம் காலம் ஸந்தியா காலம். ஆசனம் தர்ப்பை ஆஸனம், மிருதுவான விரிப்பு. சரீரஸ்திதி சுகமானதும் உறுதியானதுமான அமர்வு. முதுகு, கழுத்து நேராக இருத்தல். இந்திரிய நிக்ரஹம் - புலனடக்கம் புலன்கள் புறம் போகாதிருத்தல். மனோநிக்ரஹம் -...

ஆத்திசூடி முழுவதும் - கருத்துரையுடன்

Image
ஔவையார் அருளிய ஆத்திசூடி  கருத்துரை ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ ஔவையார் அருளிய ஆத்திசூடி அகரவரிசையில் அனைவருக்குமான அறத்தை சொல்வது. ஆத்திசூடி மொத்தம் 109. அதில்  உயிர்மெய் எழுத்து வரிசையில் அமைந்த 13 வரிகளை மட்டுமே நாம் பள்ளிப் பாடங்களில் படிக்கிறோம். முழுவதையும் பொருளுடம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு கருத்துரையோடு ஆத்திசூடியை வெளியிடுகிறோம். இறைவணக்கம் ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் நாமே! ஆத்திமாலையைச் சூடி அமர்ந்திருக்கின்ற பரம்பொருளைப் புகழ்ந்து பாடி நாம் வணங்குவோம். ஆத்திசூடி 1. அறம் செய விரும்பு / தர்மம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம் / கோபத்தை அறிவால் அடக்கு. 3. இயல்வது கரவேல் / இல்லாதவர்களுக்கு இயன்றதைக் கொடுப்பதை நிறுத்தாதே. 4. ஈவது விலக்கேல் / பிறர் கொடுப்பதைத் தடுக்காதே. 5. உடையது விளம்பேல் / உன்னை நீயே புகழ்ந்து பேசிக்கொள்ளாதே. 6. ஊக்கமது கைவிடேல் / உற்சாகத்தை ஒருபொழுதும் இழக்காதே. 7. எண்ணெழுத்து இகழேல் / கணிதவியலையும் இலக்கணத்தையும் கடினமென்று இகழாமல் கருத்தூன்றிப்படி. 8. ஏற்பது இகழ்ச்சி / இலவ...

ஸதாசார தினசர்யா - மாணவர் நாள்நடத்தை

Image
ஓம் ஸதாசார தினசர்யா (மாணவர் நாள்நடத்தை) ஆக்கம் ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ அதிகாலையில் எழுவேன்; காலைக்கடன் முடிப்பேன்; ஆஸனங்கள் செய்வேன்; குளிர்ந்தநீரில் குளிப்பேன்; தூய ஆடைகள் உடுப்பேன்; சமயச்சின்னம் தரிப்பேன்; பெற்றோரை வணங்குவேன்; குருவைப் போற்றுவேன்; இறைவனைத் தொழுவேன்; பாடநூல் படிப்பேன்; அம்மாவுக்கு உதவுவேன்; சிற்றுண்டி உண்பேன்; பள்ளிக்கூடம் செல்வேன்; கவனமாகக் கேட்பேன்; கருத்தூன்றிப் படிப்பேன்; ஓடியாடி விளையாடுவேன்; விளக்குகள் ஏற்றுவேன்; ஸ்தோத்திரங்கள் படிப்பேன்; வீட்டுப்பாடம் முடிப்பேன் ; கூடிச்சோறு உண்பேன்; இரவுவானம் ரசிப்பேன்; இறைவனை நினைப்பேன்; இனியகதைகள் கேட்பேன்; படுக்கை விரிப்பேன்; பத்துமணிக்குள் படுப்பேன்.

திருக்குறள் ஆத்திசூடி

Image
ஓம் திருக்குறள் ஆத்திசூடி ஆக்கம் ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ அறத்துப்பால் 1.கடவுள் வணங்கு. 2. வான் சிறப்புணர். 3.நீத்தார் போற்று. 4. அறன்வலி அறி. 5. இல்வாழ். 6. வாழ்க்கைத் துணைநலம் பேண். 7. நன்மக்கள் பெறு. 8. அன்பு வளர். 9. விருந்தோம்பு. 10. இனியவை கூறு. 11. செய்ந்நன்றி அறி. 12. நடுவுநில்.  13. அடக்கம் ஆற்று. 14. ஒழுக்கம் கா. 15. பிறன் இல் விழையாதே. 16. பொறைவளர். 17. அழுக்காறு அழி. 18. வெஃகாதே. 19. புறம்கூறல் தவிர். 20. பயன் இல சொல்லாதே. 21. தீவினை அஞ்சு. 22. ஒப்புரவு அறி. 23. ஈ. 24. புகழ்சேர். 25. அருள்கொள். 26. புலால்மறு. 27. தவம் செய். 28. கூடாஒழுக்கம் விலக்கு. 29. கள் விரும்பாதே. 30. வாய்மை பேண். 31. வெகுளாதே. 32. இன்னா செய்யாதே. 33. கொல்லாதே. 34. நிலையாமை உணர். 35. துறவு கைக்கொள். 36. மெய்உணர். 37. அவா அறு 38.ஊழ் வலியது உணர்.  பொருட்பால் 39. இறைமாட்சி அறி. 40. கற்றுணர். 41. கல்லாமை இழிவு. 42. கேட்டறி. 43. அறிவு பெருக்கு. 44. குற்றம் நீக்கு. 45. பெரியாரைத் துணைக்க...

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

Image
ஓம் விவேகசிந்தாமணி   பாடலும் பொருளும் பொருளுரை : ஶ்ரீ ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ விவேக சிந்தாமணி என்பது ஒரு தொகுப்பு நூல். தொகுத்தவர் யாரென்று தெரியவில்லை. பல அரிய கருத்துக்களை, உலகியல் அனுபவப் பாடங்களை பாடல்களாக ஆக்கி கொடுத்திருக்கிறார்கள் புலவர்கள். தொகுப்பு நூல் என்பதால் பாடல்களின் வரிசையில் மாறுபாட்டையும்  மாறுபட்ட பாடல்களையும் காணமுடிகின்றது. அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களைப் பொருளோடு காண்போம். விவேக சிந்தாமணி 01: கடவுள் வணக்கம் அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் கணபதியைக் கைதொழுதக் கால்.  திருவண்ணாமலை கோவிலில் எழுந்தருளியிருக்கும் கணபதியை கைகளை கூப்பி வணங்கினால் நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சஞ்சிதகர்மம், பிராரப்தகர்மம், ஆகாமிகர்மம் அனைத்தும் தொலைந்து போகும். (ஸஞ்சித கர்மம் - எஞ்சுவினை - செயலுக்கு வராமலிருக்கும் பழையவினைப்பயன்கள். பிராரப்த கர்மம் - நிகழ்வினை - இப்பிறவிக்கு காரணமாக இருக்கும் வினைப்பயன்கள். ஆகாமிகர்மம் - வருவினை - இ...