ஓம் ஆசாரக் கோவை ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார் உரை : ஸ்வாமீ பூர்ணாநந்ந ஸரஸ்வதீ ஆசாரம் என்பது ஒழுக்கம் அல்லது நடத்தை. பெரியோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியை பின்பற்றி ஒழுகுதல் ஒழுக்கம் ஆகும். ரிஷிகள், ஸம்ருதிகள் எனப்படும் நீதிநூல்களில் அருளிய ஸதாசாரங்களை தொகுத்து வழங்கியது ஆசாரக்கோவை. திருக்குறள் போல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலை இயற்றியவர் பெருவாயில் முள்ளியார் எனும் புலவர். இந்நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களைத் தொடர்ந்து பார்ப்போம். பாடல் 1 : ஆசாரத்திற்கு காரணம் நன்றி யறிதல் பொறையுடைமை இன் சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத்தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து. நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு, இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து. எட்டு நற்பண்புகள் ஒருவனை ஆசாரம் - ஒழுக்கம் - உடையவனாக ஆக்கும். அவை:- நன்றியறிதல் - பிறர் செய்த நன்மையை ஒருபொழுதும் மறவாது நன்றியுணர்வுட...
ஓம் விவேகசிந்தாமணி பாடலும் பொருளும் பொருளுரை : ஶ்ரீ ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ விவேக சிந்தாமணி என்பது ஒரு தொகுப்பு நூல். தொகுத்தவர் யாரென்று தெரியவில்லை. பல அரிய கருத்துக்களை, உலகியல் அனுபவப் பாடங்களை பாடல்களாக ஆக்கி கொடுத்திருக்கிறார்கள் புலவர்கள். தொகுப்பு நூல் என்பதால் பாடல்களின் வரிசையில் மாறுபாட்டையும் மாறுபட்ட பாடல்களையும் காணமுடிகின்றது. அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களைப் பொருளோடு காண்போம். விவேக சிந்தாமணி 01: கடவுள் வணக்கம் அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் கணபதியைக் கைதொழுதக் கால். திருவண்ணாமலை கோவிலில் எழுந்தருளியிருக்கும் கணபதியை கைகளை கூப்பி வணங்கினால் நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சஞ்சிதகர்மம், பிராரப்தகர்மம், ஆகாமிகர்மம் அனைத்தும் தொலைந்து போகும். (ஸஞ்சித கர்மம் - எஞ்சுவினை - செயலுக்கு வராமலிருக்கும் பழையவினைப்பயன்கள். பிராரப்த கர்மம் - நிகழ்வினை - இப்பிறவிக்கு காரணமாக இருக்கும் வினைப்பயன்கள். ஆகாமிகர்மம் - வருவினை - இ...
Comments