Posts

Showing posts from 2022

Kaivalya Navaneetham 2(121 - 180)

ॐ கைவல்ய நவநீதம் ஸந்தேஹம் தெளிதல் படலம் பாடல் : 121 மானஞ்சி றந்தகுரு நாதனே ஆநந்த வகைகளெத் தனை என்னிலோ ஞானந்தி கழ்ந்தபிர மாநந்தம் வாசனா நந்தம்விட யாநந்தமென்று ஆநந்தம் மூன்றுவிதம் எட்டுவகை என்பர்சிலர் அவ்வைந்தும் இதிலடக்கம் ஆனந்த வகைசொலக் கேள்மைந்த னேயெட்டும் இஃதின்ன தின்னதெனவே. பொருள் : மானம் சிறந்த குருநாதனே = பெருமை மிகுந்த குருநாதனே,   ஆநந்த வகைகள் எத்தனை என்னிலோ = ஆநந்தத்தின் வேறுபாடுகள் எத்தனை என்று கேட்பாயாகில், ஞானம் திகழ்ந்த பிரமாநந்தம் = சித்ஸ்வரூபமான பிரஹ்மாநந்தம், வாசனாநந்தம் = சும்மாயிருக்கும்பொழுது வெளிப்படும் வாசனாநந்தம், விடயாநந்தம் = விஷயங்களை அநுபவிக்கும் பொழுது மனதில் ஏற்படும் விஷயாநந்தம், என்று ஆநந்தம் மூன்று விதம் = என ஆநந்தம் மூன்று வகையாகும். எட்டு வகை என்பர் சிலர் = ஆநந்தத்தை எட்டு விதம் என்று சொல்வார்கள் சில அறிஞர்கள், அவ்வைந்தும் இதில் அடக்கம் = அவர்கள் கூறும் ஏனைய ஐந்து ஆநந்தங்களும் இந்த மூன்று ஆநந்தங்களுள் அடங்கும். எட்டும் இஃது இன்னது இன்னது எனவே = எட்டினையும் இந்த ஆநந்தம் இந்தப் பெயருடையது, இந்த ஆநந்தம் இந்தப் பெயருடையது என, ஆனந்த வகை சொலக் கேள் =...